Thursday, June 14, 2012

மழையின் துளியில் லயம் இருக்குது...

படம்: சின்ன தம்பி பெரிய தம்பி
இசை: கங்கை அமரன்
பாடியவர்: சித்ரா
பாடலாசிரியர்: கங்கை அமரன்



மழையின் துளியில் லயம் இருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது
மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது
மாமா.. என் மாமா
தூவானம் தூவும் அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும் அதில் ஆனந்தம் கூடும்


ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரம் ஆயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்

பூவோடு பூங்காற்றும் பூபாலம் பாடாதோ
பெண்ணான என் உள்ளம் பூப்போல ஆடாதோ
பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள்
பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள்
நாதம் என்று கீதம் என்று சேர்ந்தது வழிகள்

அன்பான நெஞ்சமெல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரை கண்டு சங்கமமாகப்போகிறது

எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும்
எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும்
வானம் எங்கும் பறந்து நான் தேடும் இளம் வயது
சோகங்களாய் மறந்து இது ராகம் தரும் மனது
சேர்ந்ததென்று பாடுதம்மா ஆனந்தம் எனது...

No comments:

Post a Comment