PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Wednesday, May 15, 2013

இது சங்கீத திருனாளோ...

படம் : காதலுக்கு மரியாதை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பவதரணி
பாடல்வரி: பழனி பாரதி



இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ
சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்த மழை கன்னம் விழ நனைந்தளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே

இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்
செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்
தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்
உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள்
அங்கும் இங்கும் துள்ளி ஒடுவாள்
பூவெல்லாம் இவள் போல அழகில்லை
பூங்காற்று இவள் போல சுகமில்லை
இது போல சொந்தங்கள் இனி இல்லை
எப்போதும் அன்புக்கு அழிவில்லை
இவள் தானே நம் தேவதை

இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ

நடக்கும் நடையில் ஒரு தேர் வலம்
சிரிக்கும் அழகில் ஒரு கீர்த்தனம்
கண்ணில் மின்னும் ஒரு காவியம்
மனதில் வரைந்து வைத்த ஒவியம்
நினைவில் நனைந்து நிற்கும் பூவனம்
என்றும் எங்கும் இவள் ஞாபகம்
இவள் போகும் வழியெங்கும் பூவவேன்
இரு பக்கம் காக்கின்ற கரையவேன்
இவள் ஆடும் பொன் ஊஞ்சல் நானாவேன்
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்
எப்போதும் தாலாட்டுவேன்

இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ
சின்ன சின்ன ஆசையில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்த மழை கன்னம் விழ நனைந்தளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே

இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ...

வசந்த சேனா வசந்த சேனா...

படம்:ஸ்ரீ
பாடியவர்கள்:ஹரிஷ் ராகவேந்த்ர ,சித்ரா






வசந்த சேனா வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள் தானா
நீயிள்லாது நான் என்ன நானா
சேனா வசந்த சேனா
ஒ மதன சேனா மன்மத சேனா
என்னக்குள் எதையோ திருடி சென்றானா
காதல் ஊருக்கு வழி இதுதான சேனா

(வசந்த சேனா ...)
அணுவாய் அணுவணுவாய் என் அழகை குடித்தவனே
அணு சக்தியாய் இருந்து என் உயிரை வளர்த்தவனே
காதல் சங்கிலியால் சிறையில் அடைத்தவளே
அடிமை சாசனத்தை எழுதி கேட்டவளே
என் இமைகள் இரண்டை விடுமுறைக்கு அனுப்பி
இரவில் தூக்கம் கேடுதவானே
இதயம் நிரம்பிய கஜானா போல
கொஞ்ச கொஞ்சமாக கரைதவானே
காதல் இது தானே , தோழி காதல் தோழி

(மதன சேனா ...)

உயிரில் உயிர் புதைத்து புதையல் எடுத்தவளே
உருவம் இனி எதற்கு என விளக்கம் கொடுத்தவளே
பொய்யால் ஒரு மொழியில் என் மெய்யை வளைத்தவனே
கொய்யாதொரு கனியை கண்ணால் கொய்தவானே
பகலை சுருக்கிட இரவை தொடர்ந்திட யுக்தியை வகுத்திடு நாயகியே
கனிவாய் பிறந்தொரு துளியாய் விழுந்திட
துணையாய் இணைவாய் வாசகியே
காதல் இது தானே , தோழா காதல் தோழா...

நீ என்பது எதுவரை? எதுவரை?...

படம் : திருமலை
இசை : வித்யாஷாகர்
பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன்
பாடல்வரி: நா.முத்துகுமார்



நீ என்பது எதுவரை? எதுவரை?
நான் என்பது எதுவரை? எதுவரை?
நாம் என்பதும் அதுவரை அது வரைதான்
வாழ்வு என்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்

நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது? என் அன்பே தீயை வீசியது?
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது
நீயா பேசியது

ஏதோ நான் இருந்தேன், என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
காற்றை மொழி பெயர்த்தேன், அன்பே சொல் மூச்சை என் பரிதாய்?
இரவு இங்கே பகல் இங்கே தொடுவானம் போனதெங்கே?
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே?
உறுகினான் நான் உறுகினேன், இன்று உயிரில் பாடி கருகினேன்
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது?

வேரில் நான் அழுதேன், என் பூவும் சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை
உனக்கு என்றே உயிர் கொண்டேன், அதில் ஏதும் மாற்றம் இல்லை
பிரிவேன்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை
மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா?

நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது? என் அன்பே தீயை வீசியது?
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது
நீயா பேசியது...

செம்மீனே செம்மீனே...

படம்: செவ்வந்தி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், சுனந்தா



செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

தானன தனனானா.... நா
தானன தனனானா...

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

கால் கடுக்க காத்திருந்தேன்
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்
காதலனை காணலியே
காரணத்தை நானறியேன்
தினசரி நான் பார்த்த தாமரப்பூவும்
திருமுகம் காட்டாது போனதென் பாவம்
ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோஹம்
என்றும் நானும் கொண்ட மோஹம்

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ
ஹா ஆ ஆ ஆஅ ஆ ஆ ஆ ஆ

நான் வழங்கும் பூ முடிக்க
கூந்தல்லொண்ணு ஆடுதங்கே
என் விரலால் பொட்டு வைக்க
நெற்றியொண்ணு வாடுதங்கே
இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து
இடைவெளி இல்லாமல் போனது காத்து
நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாடும் இள நாத்து
ஓடை நீரின்றி வாடும் இள நாத்து

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா...