PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, August 9, 2011

நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி...




நிலவே நிலவே .....
நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி
நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி
நீ வானத்துக்கா இல்லை மேகத்துக்கா உன்னை நான் கேட்கிறேன்
என் வான்மதியே
நீ எது சொன்னாலும் நான் ஏற்கிறேன்
சொல்லு சொல்லு நிலவே உந்தன் நெஞ்சில் இன்னும் இருளே

நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி...

நான் வளர்த்த ஆசை எல்லாம் மேடை ஏறுமா
நாலு திசை சந்திப்பு போல் ஓர் பாதை மாறுமா
காலநிலை மாறுமடி காதல் மாறுமா
மாறுவது உண்மையுள்ள காதலாகுமா
என் எண்ணத்தில் பல வண்ணங்கள்
இது
உன்னால் வந்ததே நீயில்லாமல் அது
ஒவ்வொன்றும் அடி கண்ணீர் சிந்துதே
என் காதல் ஓடம் கரை சேராமல் கடலில் நிற்குதே

நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி

நீரிலுள்ள மீனினம் தான் நிலத்தில் நீந்துமா
நிலத்தில் உள்ள மானினம் தான் நீரில் வாழுமா
பூமனதை கசக்கியது காதல் பாவமே
மாறலையே தீரலையே நெஞ்சில் சோகமே
ஒரு மலையிங்கு தன் தவறாலே அது
மணலாய் கரைந்ததே
என் மனங்கொண்ட பெரும் சுமையிங்கு
தினம் உயிரை உறுத்துதே
இது
காட்டிய திசையில் விடையினை தேடி கால்கள் நடக்குதே

நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி

நீ வானத்துக்கா இல்லை மேகத்துக்கா உன்னை நான் கேட்கிறேன்
என் வான்மதியே
நீ எது சொன்னாலும் நான் ஏற்கிறேன்
சொல்லு சொல்லு நிலவே உந்தன் நெஞ்சில் இன்னும் இருளே
சொல்லு சொல்லு நிலவே எந்தன் நெஞ்சில் இன்னும் இருளே...

10 comments: