PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Showing posts with label அம்மா பாடல் வரிகள். Show all posts
Showing posts with label அம்மா பாடல் வரிகள். Show all posts

Saturday, February 16, 2013

அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா...


Anbu Amma Amma Enthan Amma... by pakeecreation


அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன் போல் இல்லை அம்மா
அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன் போல் இல்லை அம்மா

தொப்புள் கொடியாய்
ஒரு தோட்டம் அமைத்தாய்
பிள்ளை கனியாய்
என்னை படைத்தாய்
உன் உயிர் கரைத்து
என் உடல் வளர்த்தாய்
ஒன்றல்ல நீ செய்த தியாகம்
நான் வெல்வதே ஒரு தாயின் சபதம்

இரத்தத்திலே பாலெடுத்து
முத்தத்திலே மூச்செடுத்து
ஊட்டினாய் காட்டினாய் உலகத்தையே
பள்ளிக்கூடம் நான் படிக்க
சுல்லிகட்டை நீ சுமக்க
வெந்து நீ வெந்த சோறு போட்டாயே
உன் இடுப்போரமாய்
நான் இருந்தால் என்ன
அம்மா
வெகு தூரமாய் எங்கோ போனால் என்ன
என்னை நினைச்சு உருகும் தாயே
உந்தன் சபதம் முடிஞ்சு வருவேன்

அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன் போல் இல்லை அம்மா
உன் உயிர் கரைத்து
என் உடல் வளர்த்தாய்
ஒன்றல்ல நீ செய்த தியாகம்
நான் வெல்வதே ஒரு தாயின் சபதம்...

Sunday, February 19, 2012

தாயில்லாமல் நானில்லை...

Movie name: அடிமைப்பெண்
Music:
Singer(s): டி.எம்.எஸ்
Lyrics
:




தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்

ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினைப் பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்
தாயில்லாமல் நானில்லை

தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்

தாயில்லாமல் நானில்லை

மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்
மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள்
தாயில்லாமல் நானில்லை

ஆதி அந்தமும் அவள்தான்
நம்மை ஆளும் நீதியும் அவள்தான்

அகந்தையை அழிப்பாள்
ஆற்றல் கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி
அந்த தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
என்க்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்...

ஆராரிராரோ நான் இங்கே பாட...

Movie name: ராம்
Music: யுவன் ஷங்கர் ராஜா
Singer(s): கே.ஜே.யேசுதாஸ்
Lyrics: சிநேகன்







ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே

(ஆராரிராரோ )

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்

( ஆராரிராரோ )

தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியில்
மேலே சுழலாத பூமி நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற...

சின்னத் தாயவள் தந்த ராசாவே...

Movie name: தளபதி (1991)
Music: இளையராஜா
Singer(s): S.ஜானகி
Lyrics: வாலி




சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் வேண்டாம் நீரோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே...


பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...

Movie name: என்ன பெத்த ராசா
Music: இளையராஜா
Singer(s): இளையராஜா
Lyrics:





பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா
தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்


அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்

வேறுங்கைய வீசிக்கொண்டு
விறகு சுமந்து வித்து
இரவா பகல்ல தினம் தினம் உளைச்சதும்
சருகு பொறுக்கி வந்து சாதம் வடிட்துத்தந்ததும்
பசியெ தெரியா மகனா வளத்ததும்
எத்தன தாயுங்க நம்ம தமிழ் நாட்டிலெ
என் தாயும் அவளப்போல் யாரு இந்த ஊரிலெ
தியாகி யாரு தியாகி யாரும் இல்ல போடா
தாயின் கால வணங்கி கும்பிட்டுட்டு வாடா
அவதன் கோயில் அவதன் உலகம் - பெத்த மனசு


மண்ணில் வரும் செடிகொடிகள்
எவளவு வகைகள் தான்
மரமோ கொடியோ தண்ணி மட்டும் ஒன்றே தான்
பலவித ம்மரங்கள் என்ன மரத்தில் பழங்கள் என்ன
நிறத்தில் ருசியில் ஒவ் ஒன்ரும் வேறதான்
பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா
காயாய் இருப்பதல் கொய்ய கசக்குமா
நல்ல வயிற்றில் பிறந்தா நல்லவனே தாண்டா
கெட்டது செய்ய மாட்டான் வல்லவனெ தாண்டா
அவனே மனிதன் அதை நீ உணரு

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா
தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்...

காலையில் தினமும்...

Movie name: நியூ
Music: AR ரஹ்மான்
Singer(s): உன்னி கிருஷ்ணன் , சாதனா சர்கம்
Lyrics
: வாலி







காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கைதொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா

அம்மா.....

இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதைவிட
வானம் பூமி யாவும் சிறியது

(காலையில்)

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழைத்தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள்மீது தூங்கடி கண்மணி கண்மணி

(காலையில்)

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று
மழலைப் போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தானய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீயடா
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலேலோ
அதிசய பூவே தாலோ பொன்மணி தாலேலோ
நிலவே நிஜத்தில் இறங்கி
உனை கொஞ்ச எண்ணுதே
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிட...

ஆசைப்பட்ட எல்லாத்தையும்...

Movie name: வியாபாரி
Music: தேவா
Singer(s): ஹரிஹரன்
Lyrics:





ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா?
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..
(ஆசைப்பட்ட..)

பட்டினியா கிடைந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி தீர்ப்பா
இளவட்டம் ஆட பின்னும் எண்ணை தேச்சி குளிக்க வைப்பா
உச்சி முதல் பாதம் வரை உச்சி கோதி மகிழ்ட்ந்திடுவா
நெஞ்சிலே நடக்க வைப்பா
நிலாவை பிடிக்க வைப்பா
பிஞ்சி விரல் நகம் கடிப்பா
பிள்ளை எச்சில் சோறு தின்பா
பல்லு முளைக்க நில்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா
பல்லு முளைக்க நில்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..

மண்ணில் ஒரு செடி முளைச்சா
மண்ணுக்கு அது பிரசவம்தான்
உன்னை பெற துடி துடிச்சா
அன்னைக்கு பூகம்பம்தான்
சூரியனை சுற்றிக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா
பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா
கர்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா
பெத்தை போல் அவள் இருப்பா மெத்தையாய் உன்னை வளர்ப்பா
என்ன வேண்டும் இனி உனக்கு?
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
என்ன வேண்டும் இனி உனக்கு?
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு...

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு...

Movie name: பாட்டுக்கு னான் அடிமை
Music: இளையராஜா
Singer(s): மனோ
Lyrics
: கங்கை அமரன்






தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு – நம்
தாய் போலே இங்கு வேறாரு

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை

ஆவாரங் காடெல்லாம் நீரோடும் தோப்பெல்லாம்
யாராரு வேலை செய்வதாரு
பூவாரம் கேட்டானா பொன்னாரம் கேட்டானா
சோறுக்கு வேண்டி நிக்கும் பேரு
பொன் மின்ன வெள்ளி மின்ன வைரங்கள் மின்ன
தொழிலாளி கைகள் படத்தான் வேண்டும்
தாய் உண்ண சேய்யும் உண்ண நாமென்றும் உண்ண
விவசாயி தான் உழைக்க வேண்டும்
ஏழை அவர் பாடு அது காற்றோடு போயாச்சு

ஏரோட்டி போனாலே எல்லோர்க்கும் சோறு
சோற்கேட்டு போவானே அவன் பாடும் பாட்டு

பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை….

நாடாலும் பேரென்ன மாடோட்டும் பேரென்ன
யாராரு உன்னை பெத்ததாரு
விஞ்ஞானி ஆனாலும் மெஞ்ஞானி ஆனாலும்
தாய்தானே பெத்து போட்டா கூறு
பகலென்ன இரவும் என்ன என்றென்றும் இங்கே
ஆணுக்கு பெண்ணின் துணை வேணும்
வெயிலென்ன மழையும் என்ன காலங்கள் தோறும்
அன்புக்கு தாயும் இங்கு வேணும்
தாய்தான் படும் பாடு அதை உணர்வாயே கண்மணி

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு – நம்
தாய் போலே இங்கு வேறாரு...