PAKEE Creation Tamil Padal Varihal
Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam
Thursday, August 27, 2009
ஆசை ஆசை இப்பொழுது பேராசை....
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது?
கண்ணால் உன்னால் இப்பொழுது
காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது?
மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது?
(ஆசை ஆசை..)
தலை முதல் கால் வரை இப்பொழுது
நீ தவறுகள் செய்வது எப்பொழுது?
ஓ.. இடைவெளி குறைந்தது இப்பொழுது
உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது?
அறுகம்புல் ஆகிறேன் இப்பொழுது
அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது?
திருவிழா ஆகிறேன் இப்பொழுது
நீ எனக்குள் தொலைவது எப்பொழுது?
ஆசை ஆசை ஆசை ஆசை
ஆசை ஆசை ஆசை
புல்வெளி ஆகிறேன் இப்பொழுது
நீ பனித்துளி ஆவது எப்பொழுது?
ஆ... கொட்டும் மழை நான் இப்பொழுது
உன் குடிநீராவது எப்பொழுது?
கிணற்றில் சூரியன் இப்பொழுது
உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது?
புடவை கருவில் இப்பொழுது
நீ புதிதாய் பிறப்பது எப்பொழுது?
(ஆசை ஆசை..)
படம்: தூள்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா, சங்கர் மகாதேவன்
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்...
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சு பேசும் தட்டை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவில் மாலை ஒன்றாய் கேட்டேன்
மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது
விழியிலே விழியிலே பொன் மீன்கள் துடித்தது
காதல் வருக வருக இவை நானம் ஒழிக ஒழிக
(மஞ்சள் பூசும்..)
கோலம் போட வாசல் உள்ளது
எந்தன் வீடோ வாசல் அற்றது
உந்தன் உள்ளம் கோயில் போன்றது
அதனால் தானே நான் தீபம் தந்தது
கண்கள் காணும் தூரத்தில்
வாழும் வாழ்க்கை போதும்
பாரம் கொண்ட மேகங்கள்
நீரால் மண்ணை தீண்டும்
உந்தன் காதல் ஒரு வழி
திரும்பி செல்ல தனி வழி
(மஞ்சள் பூசும்..)
தென்றல் வந்து ஜன்னல் திறந்தது
ஜன்னலின் வழியே காதல் உடைந்தது
ஓ காதல் நுழைய காற்று நின்றது
ஜன்னல் கதவை மூடி சென்றது
மூடும் கண்கள் எப்போதும் காற்றில் காண்பதில்லை
கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை
திரும்ப வேண்டும் இண்வழி
சொல்லும் சொல்லின் நழ்வழி
(மஞ்சள் பூசும்..)
படம்: ஃபிரண்ட்ஸ்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தேவன், சுஜாதா
ஒருவழிப்பாதை காதலா ஆ?...
கண்ணிரண்டும் உன்னைத் தேடுதடி
காதல் கிளியே பூமுகம் காட்டு
காலடியில் பூமி ஆடுதடி
காதல் இருந்தால் சோகத்தை மாற்று
கண்மணி ஞாயமா
ஆணுக்கு மட்டும் காதலில் ரணமா...
பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில தோத்தவன் கண்டுபுடிச்சான்
துக்கம் மறந்து துாக்கம் மறந்து
நிம்மதியக் கேட்டவன் வந்து குடிச்சான்
பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில ஜெயிச்சவன் கண்டுபுடிச்சான்
சந்தோசத்தில பங்கெடுக்கத்தான்
கூடவொரு பிரண்டு வந்துகுடிச்சான்
கம்பியூட்டர் வந்த காலத்திலும்
பொம்பளை மனசு புரியல நண்பா
மனசையும் கூட மணிபர்சில்
மறைச்சு வைப்பா பொம்பள தான்பா
ஆண்களே பாவமா ஹெ
காதலின் பெயரே துரோகம் தானா
பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில தோத்தவன் கண்டுபுடிச்சான்
துக்கம் மறந்து துாக்கம் மறந்து
நிம்மதியக் கேட்டவன் வந்து குடிச்சான்
கனவுகளை கொடுத்துவிட்டு
கண்ணிரண்டைக் கேட்பது காதலா
சிறையினிலே அடைத்துவிட்டு
சிறகுகள் தருவது காதலா
ஒருவழிப்பாதை காதலா ஆ
இன்பங்கள் மட்டும் காதலா
போதையில் விழுவது காதலா
ஹ போடா போடா பூக்களில் முள்ளா
பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில தோத்தவன் கண்டுபுடிச்சான்
பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில ஜெயிச்சவன் கண்டுபுடிச்சான்பா
குடித்திருந்தால் ஊர் விலகும்
நினைவுகள் விலகுவதில்லையே
எனைமறந்த போதையிலும்
புலம்பினேன் அவள்பேர் சொல்லியே
மறப்பதற்காவொரு ஞாபகம் ஹு
இழப்பதற்கா அவள் பூமுகம்
நடப்பதெல்லாம் வெறும் நாடகம்
அணைந்துவிடாது காதலின் தீபம்
பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில தோத்தவன் கண்டுபுடிச்சான்
பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில ஜெயிச்சவன் கண்டுபுடிச்சான்
கம்பியூட்டர் வந்த காலத்திலும்
பொம்பிளை மனசு புரியலப் போடா
மனசையும் கூட மணிபர்சில்
மறைச்சு வைப்பா பொம்பள தான்பா
ஆண்களே பாவமா
காதலின் பெயரே துரோகம் தானாஆ
காதலின் பெயரே துரோகம் தானா
அட சும்மா இருய்யா
ஏன் புலம்பிற
அட சும்மாரு!
படம் : நந்தினி
பாடியவர் : SP.பாலசுப்ரமணியம்
இசை : சிற்பி
என்னை தாலாட்ட வருவாளோ...
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.
தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
(என்னை தாலாட்ட)
பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்
எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்கள்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
(என்னை தாலாட்ட)
படம்: காதலுக்கு மரியாதை
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: பழனி பாரதி
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு...
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள ரதங்கள் பத்து உன்னையும் சேர்த்து
சங்கத் தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து
என்னுடன் நீ தான் சேர்ந்த போது ரெண்டல்ல நாம் ஒன்று
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
நடக்கையில் உன் புடவை
செய்யும் சருகு ஓசை அதை ரசித்தேன்
சிரிக்கையில் உன் முகத்தில்
ஒரு குழந்தை தவழும் அதை பார்த்தேன்
என்னை பிரிகையிலே
உன் கண்கள் கலங்குமே அதை ரசித்தேன்
நீ என் நிழலையுமே
தொட்டு பார்த்த போதிலே அதை ரசித்தேன்
மலை உச்சி ஏறித்தான் உன் பேரை சொல்லித்தேன்
மனதுக்குள் நான் ரசித்தேன்
அதன் எதிரொலி கேட்டு ரசித்தேன்
ஓஹோ...
உன்னை பார்ப்பதற்க்கு
நான் தவிக்கும் தவிப்பில் ஒரு சுகமே
உன்னை பார்துக் கொண்டே
என் ஆயுள் கழிந்தால் அது சுகமே
உனக்காக காத்திருந்து
என் கால்கள் வலிக்கையில் ஒரு சுகமே
என் பேர் நீ சொன்னால்
எட்டு லட்சம் நரம்பிலும் புது சுகமே
உன் வீட்டு மேகம்தான்
என் வீட்டை கடந்தால் என்னுள்ளே ஒரு சுகமே
அது எப்போதும் தனி சுகமே
ஓஹோ..
(உலகத்தில்..)
படம்: தை பொறந்தாச்சு
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னிகிருஷ்ணன்
நானாக நானில்லை தாயே...
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே
(நானாக)
கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்
(நானாக)
மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை
(நானாக)
படம்: தூங்காதே தம்பி தூங்காதே
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
புதிய நிலாவே ஒரு இனிய கனாவே...
புதிய நிலாவே ஒரு இனிய கனாவே
புதிய நிலாவே ஒரு இனிய கனாவே
மாலைகள் நெஞ்சில் தொட்டு தாலாட்ட
மாணிக்க வைரம் உன்னை சீராட்ட
நாணையம் அள்ளி தந்து நீ கேட்க
நான் இங்கு வந்தேன் உன்னை பாராட்ட
ஓராயிரம் மாயங்களும்
நான் பார்த்தேன் என் கண்ணிலே
(புதிய நிலாவே..)
நான் நினைத்து வந்த தேன் கனவு
அது வாழ்வில் ரொம்ப தூரம்
ஏன் எனக்கு இந்த வீண் மயக்கம்
என்று நேரில் சொல்லும் நேரம்
(நான் நினைத்து..)
பொத்தி வச்ச நெஞ்சை விட்டுத்தான்
நல்ல முத்து ஒன்னு வெளியாச்சு
புத்தி கெட்ட சின்ன பிள்ளைக்கு
ஒரு உண்மை இன்று தெளிவாச்சு
வானில் வரும் வர்ணங்களே
நிறம் மாறும் எண்ணங்களே
சிவந்து வரும்
(புதிய நிலாவே..)
நாம் நினைப்பதொன்று நேர் நடப்பதொன்று
வாழ்வில் கண்ட பாடம்
பால் நிறத்தினிலே கல் இருக்குதென்று
காலம் சொன்ன பாடம்
(நாம் நினைப்பொதொன்று..)
புண்ணியங்கள் செய்திருக்கணும்
இந்த கண்மணியை மணந்திடவே
மின்னல் ஒன்று மண்ணில் வந்ததே
பல மன்னவரும் மயங்கிடவே
பூவே தினம் பூச்சூடியே
நூறாண்டு நீ வாழ்கவே
(புதிய நிலாவே..)
படம்: பேண்ட் மாஸ்டர்
இசை:
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
Subscribe to:
Posts (Atom)