PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Thursday, August 27, 2009

உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு...



உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள ரதங்கள் பத்து உன்னையும் சேர்த்து
சங்கத் தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து
என்னுடன் நீ தான் சேர்ந்த போது ரெண்டல்ல நாம் ஒன்று
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து

நடக்கையில் உன் புடவை
செய்யும் சருகு ஓசை அதை ரசித்தேன்
சிரிக்கையில் உன் முகத்தில்
ஒரு குழந்தை தவழும் அதை பார்த்தேன்
என்னை பிரிகையிலே
உன் கண்கள் கலங்குமே அதை ரசித்தேன்
நீ என் நிழலையுமே
தொட்டு பார்த்த போதிலே அதை ரசித்தேன்
மலை உச்சி ஏறித்தான் உன் பேரை சொல்லித்தேன்
மனதுக்குள் நான் ரசித்தேன்
அதன் எதிரொலி கேட்டு ரசித்தேன்
ஓஹோ...

உன்னை பார்ப்பதற்க்கு
நான் தவிக்கும் தவிப்பில் ஒரு சுகமே
உன்னை பார்துக் கொண்டே
என் ஆயுள் கழிந்தால் அது சுகமே
உனக்காக காத்திருந்து
என் கால்கள் வலிக்கையில் ஒரு சுகமே
என் பேர் நீ சொன்னால்
எட்டு லட்சம் நரம்பிலும் புது சுகமே
உன் வீட்டு மேகம்தான்
என் வீட்டை கடந்தால் என்னுள்ளே ஒரு சுகமே
அது எப்போதும் தனி சுகமே
ஓஹோ..
(உலகத்தில்..)

படம்: தை பொறந்தாச்சு
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னிகிருஷ்ணன்

No comments:

Post a Comment