PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, July 29, 2011

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே...



தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதல் பூலோகம் தாண்டி வாழலாம்
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்

கண்ணீரில் ஈரமாகி கறையாச்சு காதலே
கரை மாற்றி நாமும் இல்லை கரை ஏறவேண்டுமே
நாளைவரும் காலம் நம்மைக் கொண்டாடுமே

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால் செடியென்ன கேள்வி கேட்குமா
வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்பப் பாவம் என்பதா

வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே

Tuesday, July 5, 2011

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே...


அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

காதல் ஒரு பரீட்சை தானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்க சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

சிலுவை சுமந்தானே
அவன் இந்த காதலில் விழுந்திருந்தால்
சிலுவை வலியென்று
வார்த்தையில் வாய் வலி சொல்வனா
இதயம் ஒருநாள்
இரண்டாக உடையும்
அன்று வந்து பார் உன் விம்பம் தெரியும்
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்துதான் நீராடி போ


அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

முள்ளாய் நீ வந்தால்
கண்களை திறந்து காத்திருப்பேன்
தீயாய் நீ வந்தால்
என்னையும் திரியாய் நான் தருவேன்
கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய்
கருணை கொலைதான் செய்யாமல் சென்றாய்
மலர்மாலாய் மாறிடவே நினைதேன்
மலர்வலயமாய் நான் மாறினேன்

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

காதல் ஒரு பரீட்சை தானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்க சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே