PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Sunday, February 19, 2012

அம்மா என்றழைக்காத உயிரில்லையே...

Movie name: மன்னன் (1992)
Music: இளையராஜா
Singer(s): கே. ஜே. ஜேசுதாஸ்
Lyrics: வாலி



அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே...




13 comments:

  1. நண்பர்களே! இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகிவிடும்.நாம் வணங்கும் பெண் தெய்வங்களை எல்லாம் அன்னைக்கு இணையாக்கி அற்புதமாகப் பாடலை எழுதியுள்ளார் நம் இதயத்தில் நிறைந்து வாழும் கவிஞர் வாலி அய்யா அவர்கள்.இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கடவுளுக்குள் இரண்டறக் கலந்துவிட்ட என் தாயுடன் நேரில் பேசுவது போலவே உணர்கிறேன்.தாயிற் சிறந்த கோவிலுமில்லை......சத்தியமான வார்த்தையல்லவா!!!

    ReplyDelete
  2. உண்மைதான்
    நன்றி நண்பா

    ReplyDelete
  3. ஜேசுதாஸ் அவர்களின் குரலும் ,வாலியின் பாடல் வரிகளும் அடேங்கப்பா கரையாத நெஞ்சமும் கரைந்திடும் .....கனத்த இதயத்தோடு இங்கு பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  4. உண்மையிலேயே அருமை

    ReplyDelete
  5. உண்மையிலே யே அருமை

    ReplyDelete
  6. உண்மை ஒவ்வொரு குழந்தையும் உனரும் அற்புதம்

    ReplyDelete
  7. கவிஞரின் வாரிகள்,தாயின்
    பாசத்தை ஊட்டியது.

    ReplyDelete
  8. அருமை கவிஞரின் வரிகளில் தாயின்
    பாசத்தைக் கண்டேன்.

    ReplyDelete
  9. 1லட்சம் முறை கேட்டாலும் சலிக்காத இனிமை

    ReplyDelete
  10. தாயன்புக்கு ஈடாக எதுவும் இல்லை.கவிஞானி இசைஞானி குரல்ஞானி சங்கமம் அத்புதம்.

    ReplyDelete
  11. very beautiful song ���������������������������������������������������������������� wow

    ReplyDelete
  12. இந்த ஒரு பாடல் வரிகளுக்கே வாலி ஐயா"அவர்களுக்கு பாரத ரத்னா தந்திருக்க வேண்டும்

    ReplyDelete
  13. இந்த பாடலைக் கேட்க்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகும்

    ReplyDelete