PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Thursday, June 14, 2012

புத்தம் புது காலை...

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து



புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
(புத்தம்...)

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
(புத்தம்....)

வானில் தோன்றும் கோலம்
அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவைகூடுது...

4 comments:

  1. What a music and what a lyrics great - it's make my day by listening in morning

    ReplyDelete
  2. அருமை என்ன வரிகள் என்ன ஒரு இசை ப்பா supper

    ReplyDelete
  3. பூவில் தோன்றும் வாசம்
    அதுதான் இராகமோ

    ஒரு கவிஞன் எல்லையில்லா சிந்தனைக்கு இதுவே எடுத்துக் காட்டு

    ReplyDelete