படம்: ராஜபார்ட் ரங்கதுரை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
அவன் உன்னை வளர்த்தான்
அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
கையில் வைத்து காத்திருந்தால்
காலடியில் காத்திருக்கும்
நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு இது
இதை சொந்தமின்றி பந்தமின்றி
வந்த வழி நினைவுமின்றி
பிள்ளைகளும் பிறந்திருக்கும் வீடு
ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின்
உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை
நானும் கண்டேனே
ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின்
உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை
நானும் கண்டேனே
அது நாடகமா இது நாடகமா
அது நாடகமா இது நாடகமா
இங்கு நான் காணும் வேஷங்கள்
கொஞ்சம் அல்லவே
நான் இது போன்ற வேஷத்தில் வந்ததில்லையே
அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
தங்கை எனும் இளைய கன்று
தாய் வீடு வந்ததென்று
என்னுடைய நாடகத்தில் காட்சி
அவள் கொண்டவனை பிரிந்து வந்து
கோலம் கொண்டு நின்றதனை
கண்டதற்க்கு இன்னொருவன் சாட்சி
கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை
கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன்
நெஞ்சில் எழுகிறது
கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை
கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன்
நெஞ்சில் எழுகிறது
அது பாசமன்றோ இது வேஷமன்றோ
அது பாசமன்றோ இது வேஷமன்றோ
அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளை அல்லவோ
இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழையால்லவா
அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்...