என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி
பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ
பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ
உனக்காக உயிர் போகும் போதிலும் அழுவேனோ
தேவதை உன் வாசலே சன்னிதி
காதலில் கண் மூடினால் நிம்மதி
கயல் விழியினில் என்னை ஒரு முறை அழைத்திடு தேனே
கயல் விழியினில் என்னை ஒரு முறை அழைத்திடு தேனே
புயல் மழையினில் நனைகிற உடல் எரியுது மானே
இதுவரை மனக்கதவினை அடைத்தது போதும்
அணுஅணுவென ஒரு மனதினை உடைத்தது போதும்
என்னை எண்ணி வாழவில்லை
உன்னை எண்ணி வாழ்கிறேன்
உன்னை மீண்டும் வாழவைக்க
வாழும்போதே சாகுறேன்
இலையுதிர்த்து போகலாம்
வசந்தம் மீண்டும் தோன்றலாம்
காலம் மாறும் போது நீயும் மாறக் கூடாத
இளமையில் ஒரு அழகிய மலர் கருகிடலாமா
இளமையில் ஒரு அழகிய மலர் கருகிடலாமா
உடலோடு உயிர் மெழுகென தினம் உருகிடலாமா
பழமையை உடை புதுமைகள் படை எழுந்திரு பெண்ணே
சிறையினை விடு சுதந்திரம் முழு பறந்திடு கண்ணே
நேற்றுப் போன தாலியோடு
வாழ்க்கை எல்லாம் போறதா
வேறு தாலி வேறு மாலை தோஷம் இன்றே ஆகலாம்
பின்பும் மாலை சூடலாம்
நாளை நீயும் வாழலாம்
காதல் இல்லா ஜீவன் இந்த மண்ணில் எங்குண்டு...
No comments:
Post a Comment