PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Sunday, June 24, 2012

அடியே உன் கண்கள் ரெண்டும்...

படம்: ரௌத்திரம்
பாடலாசிரியார்: லலிதானந்த்
இசை: பிரகாஷ் நிக்கி
பாடியவர்: உதித் நாராயணன் , சாதனாசர்கம்




அடியே உன் கண்கள் ரெண்டும்
மேடின் க்யூபாவா
அதிலே என் தேகம் என்றால்
நான் தான் கேஷ்ட்ரோவா
அழகே நீ வின்னில் என்னை
ஏற்றும் நாசாவா
அடியோடு என்னை சாய்த்து
அன்றில் கண்ணே வா
ஆசை மெய்யா பொய்யா
நீ சோதிக்க
ஆராய்ச்சிக்கூடம் போல
கண்ணை மாற்றாதே
வாழ்வும் ஒன்றா ரெண்டா
நான் யோசிக்க
ஆகாயம் ஆற்றினில் மிதக்கிறதே

ஆள் கொல்லும் சேனைக்கொண்ட
ஆயுதங்களை ஏந்திக்கொண்டு
ஆரம்பித்தாய் யுத்தம் ஒன்று
பின்னால் நின்றுத்தாக்காதே

மாவீரா முன்னால் நின்று
உள்ளம் என்னும் தீவை வென்று
உன்னை ஆளும் ஆசை உண்டு
மாயம்மாகிப்போகாதே

மறைவேன் நான் நானே
நான் தீயைத்தின்று வாழும் பச்சி
போடி சும்மா சும்மா வத்திக்குச்சி

விடுவேன் நான் நானே
நான் கொஞ்சி கொஞ்சி கொள்ளும் கட்சி
கண்ணைக் கொத்தும் சைவப்பச்சி

ஏய் வேட்டைக்காரி காதல் காட்டில்
நாளை மீளும் வேங்கை ஆட்சி

பதுங்காமல் என் மீது பாயும்
புலி போல ஆகாதே நீயும்
கிளிப்போல ஆனேனே நானும்
யாழும் வாலும் மோதாமல் மோதும்

நூற்றாண்டு காலம் ஒன்று
முழுகிப்போன கண்டம் ஒன்று
நீயும் நானும் அங்கே அன்று
வாழ்ந்த நாட்கள் பார்த்தேனே

ஏகாந்த தீவில் இன்று
ஏவல் போல நெஞ்சில் ஒன்று
ஏதோ செய்து போகும் என்று
காற்றும் சொல்லக்கேட்டேனே

அம்மேசான் காடு
நாம் ரெண்டே ரெண்டு பட்டாம்பூச்சி
ஆடிப்பார்ப்போம் கண்ணாம்மூச்சி
ஆரோவில் வீடு பார் தங்கக்கட்டி
செங்கல் வச்சி தங்கும் ஆசை வந்துடுச்சி

நீ நீலக்கண்ணால் பாலம் போட்டாய்
தூக்கம் போயேப்பேச்சு

ஹோ... விலகாமல் உன்னோடு சேர
இமைக்காமல் உன் தோற்றம் காண
உயிர்க்கூட உன் கையில் நீந்த
ஆவல் கொண்டேன் நீ என்னைத்தாங்க...

கொலைகாரா அணலாச்சி ஏம்மூச்சி...

படம்: தம்பி வெட்டோத்தி சுந்தரம்
பாடலாசிரியார்: வைரமுத்து
இசை: வித்யாசாகர்
பாடியவர்: கார்த்திக் , கல்யாணி



Kolaikaara Analachu HD...



கொலைகாரா அணலாச்சி ஏம்மூச்சி
புத்திமாறிப் போயாச்சி
அட கொலைகாரா ஹா ஹா ஹா

கொலைகாரி ஒன்னப்பார்த்து
உசிர் போச்சி நின்னுப்போச்சி
ஏம்மூச்சி அடி கொலைகாரி

உன் மடியில் சீராட்டி
என் மனச தாலாட்டி
அந்த அலைமேல் பாய்ப்போட்டு
என் அழகை நீராட்டு

பாலும் சோறும் முழுகாம
பச்சத்தண்ணி செல்லாம
ஏக்கம் ஏத்திப்போனேனே
எச்சி முத்தம் இல்லாம
நெஞ்சாங்கனி தாங்காம
ரெண்டு கண்ணும் தூங்காம
கட்டில் சோகம் தாங்காம
காமன் செய்யும் நாட்டாம

பஞ்சில்லாம தீயிலாடி தீயில்லாம
பத்தவச்ச கல்லி
புத்திக்குள்ள கத்தி வீசி
போனதென்ன தள்ளி
பச்ச வாழத்தோப்புக்குள்ள
பந்தி வைக்க வாடிபுள்ள
பால் பழங்கள் கூடைக்குள்ள
பத்தியமும் தேவையில்ல
கொலைகாரி ஹோய்.....


ஆ... ஆ... ஆ...


நாஞ்சில் நாட்டு கடலிலெல்லாம்
ஒன்னக்கண்டு வலை வீசும்
சங்கு முத்து எல்லாமே
தங்க காலா வெலை பேசும்
ஓரக்கரையெல்லாமே ஒட்டிக்கொள்ளும்
மீன் வாசம்
ஒன்ன மட்டும் தொட்டாலே
மாசம் எல்லாம் பூவாசம்

பாதைக்கொலை செஞ்சிப்புட்டேன்
தப்பிச்செல்லும் மூடா
முத்தம்மிட்டு முகத்தையும்
கொன்னுப்புட்டுப் போடா
ஆச வச்ச பொம்பளைக்கு
அஞ்சி நாளா தூக்கம்மில்ல
மீச வச்ச ஆம்பளைக்கு
மெத்த வாங்க நெனப்பில்ல...

போந்தாக்கோழி புடிக்கவாடா...

படம்: முரட்டுகாளை (2012 )
பாடலாசிரியார்: கே.செல்வபாரதி
இசை: ஸ்ரீகாந்த்தேவா
பாடியவர்: மாலதி



போந்தாக்கோழி புடிக்கவாடா முறடா
ஒன்னப்பார்த்ததும் எனக்குப் புடிச்சிப்போச்சுடா முறடா
போந்தாக்கோழி புடிக்கவாடா முறடா
ஒன்னப்பார்த்ததும் எனக்குப் புடிச்சிப்போச்சுடா முறடா
நீ சிரிக்கும்போது குழியப்பார்த்தேன் முறடா
அந்தக்குழியில நான்தான் விழுந்துப்புட்டேன் முறடா
நீ கொம்புவச்சக்காளைக் காளை
நான் ஒன்ன சுத்தும் மயிலக்காளை
நீ கொம்புவச்சக்காளைக் காளை
நான் ஒன்ன சுத்தும் மயிலக்காளை

சடுகுடு குடு குடு குடு ஆடிக்காட்டவா
தொடு தொடு தொடு தொடு ஓடிக்காட்டவா
எடு எடு எடு எடு நாட்டுசரக்குடா
போடு போடு போடு போடு போட்டுத்தாக்குடா
மை மை மை மை மச்சக்காரன் நீ!
கை கை கை கை வச்சிப்பாரு நீ!
ரா ரா ரா ரா வேட்டைக்காரன் நீ!
வா வா வா வா வேட்டைக்காரன் நீ!
அட நீ வேணுன்டா அட நீ வேணுன்டா
நீ இல்லேன்னா என் மனசுத்தாங்காதுடா
கொம்புவச்சக் காளைக் காளை
நான் ஒன்ன சுத்தும் மைலக்காளை
கொம்புவச்சக் காளைக் காளை
நான் ஒன்ன சுத்தும் மைலக்காளை

அ அ அ அ அச்சம் எதுக்குடா
அ அ அ அ உச்சமிருக்குடா
இ இ இ இ இம்சைப்பன்னுடா
ஈ ஈ ஈ ஈ எச்சில்ப்பன்னுடா
உ உ உ உ உதட்டில் தேனுடா
உ உ உ உ உறிஞ்சிக்கொள்ளுடா
எ எ எ எ எடுத்துக்கொள்ளுடா
ஏ ஏ ஏ ஏ இன்னும் என்னடா
விடமாட்டேன் ஒன்ன விடமாட்டேன்டா
நீ விலகிப்போனாலும் விடமாட்டேன்டா...

புன்னகை என்ன விலை...

படம்: முரட்டுகாளை (2012 )
பாடலாசிரியார்: கே.செல்வபாரதி
இசை: ஸ்ரீகாந்த்தேவா
பாடியவர்: ஹரிஹரன் , ஸ்ரீவித்யா




புன்னகை என்ன விலை
உன் புன்னகை என்ன விலை
அன்பே அன்பே உன் புன்னகை என்ன விலை
மௌனம் என்ன விலை
உன் மௌனம் என்ன விலை
அழகே உன் மௌனம் என்ன விலை
என் இதயம் திருடும் உன் சிரிப்பு
என் உயிரை வருடும் உன் சிரிப்பு
என் கனவில் நினைவே நீயே நீயேதான்
என் இதயத்தின் துடிப்பு

ஷலல்லல்லலால்லா ஷல்லாலா
ஷலல்லல்லலால்லா ஷல்லாலா
ஷலலால்லல்லா....

புன்னகை முகவரி நீயானாய்
பூக்களின் முகவரி நீயானாய்
கண்களின் முகவரி நீயானாய்
என் கனவின் முகவரி நீயானாய்

அன்பின் முகவரி நீயானாய்
அழகின் முகவரி நீயானாய்
உறவின் முகவரி நீயானாய்
என் உள்ளத்தின் முகவரி நீயானாய்

இலட்சம் பூக்கள் பூத்ததே உந்தன் வார்த்தையில்
இலட்சம் பூக்கள் பூத்ததே உந்தன் வார்த்தையில்
அன்பே என்றும் நீயே
எந்தன் தேவதை என்றிடுவேன்

ஷலல்லல்லலால்லா ஷல்லாலா
ஷலல்லல்லலால்லா ஷல்லாலா
ஷலலால்லல்லா.....

வீரத்தின் முகவரி நீயானாய்
வெற்றியின் முகவரி நீயானாய்
கருணையின் முகவரி நீயானாய்
என் காதலின் முகவரி நீயானாய்

நிலவின் முகவரி நீயானாய்
நினைவின் முகவரி நீயானாய்
மனதின் முகவரி நீயானாய்
என் உயிரின் முகவரி நீயானாய்

இந்த வார்த்தை ஒன்று போதுமே
எந்தன் வாழ்விலே
வாழும்வரை காதல் செய்து
காதலை வாழவைப்போம்...

பொதுவாக என் மனசு தங்கம்...

படம்: முரட்டுகாளை (2012 )
பாடலாசிரியார்: கே.செல்வபாரதி
இசை: ஸ்ரீகாந்த்தேவா 
பாடியவர்: நவீன்




அண்ணனுக்கு ஜே அண்ணனுக்கு ஜே
காளையனுக்கு ஜே காளையனுக்கு ஜே... ஜே

பொதுவாக என் மனசு தங்கம்
ஒரு போட்டுயின்னு வந்துவிட்டா சிங்கம்.
உண்மையே சொல்வேன் நல்லதே செய்வேன்
வெற்றிமேல் வெற்றி வரும்

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் என்னாளுமே


முன்னால சீருது மயிலக்காளை
பின்னால பாயுது மச்சக்காளை
அடக்கியாளுது முரட்டுக்காளை முரட்டுக்காளை
நெஞ்சிக்குள் அச்சம்மில்லை யாருக்கும் பயமும்மில்லை
வாராதோ வெற்றி என்னிடம்
விளையாடுங்க உடல் பலமாகுங்க

ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஆனந்தம் காணலாம் என்னாளுமே


வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசம் உள்ள செண்டுகளா
கும்மி அடிச்சி கொளைவையை போட்டு
அண்ணனை வாழ்த்தி பாடுங்கடா
காளையனை பார்த்துப்புட்டா ஜல்லிக்கடடு காளை எல்லாம்
துள்ளிக்கிட்டு ஓடுமடி
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு புல்லுக்கட்டை தேடிக்கிட்டு
கொம்பு இருக்கும் காளைக்கெல்லாம் தெம்பு இருக்காது
இந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிருக்காது
குலவைப்போட்டு பாடுங்கடி கும்மியடிச்சி ஆடுங்கடி
மாரியம்மன் கோவிலுக்கு பொங்கலுவைப்போம் வாருங்கடி
பொங்கலுவைப்போம் வாருங்கடி..

பொறந்த ஊருக்கு புகழைச்சேரு
வளர்ந்த நாட்டுக்கு பெருமைதேடு
நாலுபேருக்கு நன்மைசெய்தா

கொண்டாடுவார் பண்பாடுவார்

என்னாலும் உழைச்சதுக்கு பொன்னாக பலன் உண்டு
ஊரோடு சேர்ந்து வாழுங்க
அம்மன் அருள் சேருங்க தினம் நன்மை துணையாகும்

ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்...

சுந்தரப் புருஷா சுந்தரப் புருஷா...

படம்: முரட்டுகாளை (2012 )
பாடலாசிரியார்: கே.செல்வபாரதி
இசை: ஸ்ரீகாந்த்தேவா
பாடியவர்: சிம்பு , அணுராதாஸ்ரீராம்






சுந்தரப் புருஷா சுந்தரப் புருஷா
எனக்கு நீ தான் பொறந்த


ஏய் புன்னகை அரசி புன்னகை அரசி
எனக்கு நீ தான் பொறந்த


சுந்தரப் புருஷா சுந்தரப் புருஷா
எனக்கு நீ தான் பொறந்த


ஏய் புன்னகை அரசி புன்னகை அரசி
எனக்கு நீ தான் பொறந்த


கண்ணும் கண்ணும் பார்க்கல
மனசும் மனசும் பேசல


கண்ணும் கண்ணும் பார்க்கல
மனசும் மனசும் பேசல


அட உன்னையும் என்னையும் சேர்த்தது
கடவுளோடக் கணக்கடா
கடவுளோடக் கணக்கடா
அட கதவுக்கொஞ்சம் எதுக்குடா
சுந்தர சுந்தரரா ஏய் சந்தர சுந்தரரா
சுந்தர சுந்தரரா ஏய் சந்தர சுந்தரரா
ஏய் சுந்தர சுந்தர சுந்தர சுந்தர சுந்தரா....


ஏய் ஸ்னேகா ஸ்னேகாதான்
ஏய் ஸ்னேகா ஸ்னேகாதான்
ஏய் ஸ்னேகா ஸ்னேகாதான்
ஏய் ஸ்னேகா ஸ்னேகா ஸ்னேகா ஸ்னேகாதான்


கண்டேன் கண்டேன் உன்னில் என்னைக் கண்டேனே
கண்டேன் கண்டேன் உன் மேல் காதல் கொண்டேனே


ஏ வந்தாய் வந்தாய் நீயும் என்னில் வந்தாயே
ஏய் தந்தாய் தந்தாய் நீயும் உன்னில் பாதித்தந்தாயே


நீ என்னை சேரத்தானே
நான் வறம் வாங்கி வந்தேன்


நான் உன்னை சேரத்தான்
ஒரு ஜென்மம் எடுத்துவந்தேன் வந்தேன்


திருச்சந்தூர் முருகன்தான் முருகன்தான் முருகன்தான்
நம்மை சேர்த்தானே சேர்த்தானே சேர்த்தானே




இனிமேல் எல்லாமே நல்லதாய் இருக்குன்டி
வெற்றிமேல் வெற்றிதான் என்னை வந்து சேருமே
மூச்சு விடுறப் பூவா நானும் பூத்தேனே
மூச்சுக் காத்தா மாறி நீயும் வந்தாயே


சீறி சீறிப்பாயும் காளையப்போல் இருந்தேனே
உன் அன்பைப் பார்த்துத்தானே என்னைத்தந்தேனே


நான் கொடுத்து வச்சவ மாமா
அதனாலே எனக்குக் கெடைச்ச


நான் கொடுத்து வச்சதனாலே
உன்ன பிரம்மன் அனுப்பி வச்சான்
அடியே கன்டாங்கி கன்டாங்கி ஹேய்
சேலைக்குள் சொருகாதே சொருகாதே சொருகாதே!


முத்துக்குளிக்கவா மூச்ச அடைக்கவா
அலையா ஒன்ன நானும் அடக்கிக்காட்டவா ஹேய்
சுந்தர சுந்தரரா ஏய் சந்தர சுந்தரரா
சுந்தர சுந்தரரா ஏய் சந்தர சுந்தரரா
ஏய் சுந்தர சுந்தர சுந்தர சுந்தர சுந்தரா...

தாவணி என் தாவணி...

படம்: முரட்டுகாளை (2012 )
பாடலாசிரியார்: கே.செல்வபாரதி
இசை: ஸ்ரீகாந்த்தேவா
பாடியவர்: சர்முகி




தாவணி என் தாவணி
என்றுமே என் தோழி நீ!
என்னைத்தொட்ட தாவணி
முத்தம்மிட்ட தாவணி தா வணி
என் தாவணி
அன்பை சொன்ன தாவணி
நட்பை சொன்ன தாவணி தா வணி
என் தாவணி
ஹே ரெட்டை ஜடைப் போட்டுக்கிட்டு
ஒன்னத்தானேக் கூட்டிக்கிட்டு
ஒத்தையடிப் பாதையில
பள்ளிக்கூடம் போகையில
அச்சம் மடம் ஞானம் எல்லாம்
அள்ளித்தந்த தாவணி
வெட்கப்பட வேனும்முன்னு
சொல்லித்தந்த தோழி நீ!

பூ வாங்கப்போனாக்கா பூவாவேப் பார்த்தாங்க
தேரடிக்குப் போனாக்கா தேவதையாப் பார்த்தாங்க
கல்லூரிக்குப் போனாக்கா காதலியாப் பார்த்தாங்க
கல்யாணம் போனாக்கா பொண்ணாகப்பார்த்தாங்க
மணப்பொண்ணாகப் பார்த்தாங்க
அம்மாக்கூடக் கிட்டவந்து அதிசயமாப்பார்த்தாங்க
ஆம்பளையெல்லாம் எட்டி நின்னு இரகசியமாப்பார்த்தாங்க
உன்னப்போலத் தோழிடி
ஊடிக்குள்ள யாருடி
உன்னப்போலத் தோழிடி
ஊடிக்குள்ள யாருடி
என்றுமே என் தோழி நீ!..

கோலம் போட வந்தாக்கா
ஆசையோடுப் பார்த்தாங்க
கெனத்தடிக்கு வந்தாக்கா மீசமொளைச்சு நின்னாங்க
கோயிலுக்குப் போனாக்கா சாமியாவேப் பார்த்தாங்க
சினிமாவுக்குப் போனாக்கா ஹீரோயினாப் பார்த்தாங்க
என்ன ஹீரோயினாப் பார்த்தாங்க
அம்மாவோட சேலைக்கு இச்சு தாவணியாத் தந்தாங்க
அத்தைங்க எல்லாம் போட்டிப்போட்டு
பொண்ணுக்கேட்டு வந்தாங்க
உன்னப்போலத் தோழிடி
ஊடிக்குள்ள யாருடி...

Thursday, June 14, 2012

மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்...

படம்: ஓன்ஸ் மோர்
இசை: தேவா
பாடியவர்: கிருஷ்ணராஜ்




மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தமிடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டுப்பாடு
கதிர்களே உங்களை நான் காதலிக்கிறேன்
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டுவிடு
தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன்
மறுப்பு என்ன என்னை வந்து கட்டிபிடி
உலகமே என் வீடு இளமையே விளையாடு
(மலர்களே..)

நதிகளை மட்டுமல்ல நுரைகளையும் காதலித்தேன்
வெண்ணிலவை மட்டுமல்ல தரையையும் காதலித்தேன்
ஒரு பட்டு பூச்சியை காதலித்து பார்த்தேன்
அதன் உதிர்ந்த சிறகையும் மூடி வைத்து காத்தேன்
அந்தி வானத்தின் மேலே முகில் கூவுவதை போலவே
எந்தன் உடல் அங்கு பறந்திட வழி இல்லையா
(மலர்களே..)

மழைத்துளி மழைத்துளி முத்துக்களாய் சிதறுது
சிதறிடும் முத்துக்களை சேமித்தால் நல்லது
அந்த வானவில்லிலே மொத்த நிறம் ஏழு
அதில் ஒற்றை நிறத்திலே ஊஞ்சல் கட்டி ஆடு
சுகமானது பூமி இதமானது வாழ்க்கை
இந்த உலகத்தை ரசிக்கின்ற கலைஞன் இவன்...

புத்தம் புது காலை...

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து



புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
(புத்தம்...)

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
(புத்தம்....)

வானில் தோன்றும் கோலம்
அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவைகூடுது...

இரவா பகலா குளிரா வெயிலா...

படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
பாடலாசிரியர்: பழனி பாரதி



இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி

ஆனால் உந்தன் மௌளனம் மட்டும் ஏதோ செய்யுதடி
என்னை ஏதோ செய்யுதடி காதல் இதுதானா
சிந்தும் மணிபோலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்

நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்
என்றும் ரகசியம்தானா
கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா

(இரவா பகலா குளிரா வெயிலா)

என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லயா
என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா
என்னில் விழும் மழை உன்னில் விழவில்லயா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லயா

முகத்திற்கு கண்கள் ரெண்டு
முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு
இப்பொது ஒன்றிங்கு இல்லையே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

(இரவா பகலா குளிரா வெயிலா)


வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு
வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு

மலையினில் மேகம் தூங்க
மலரினில் வண்டு தூங்க
உன் தோளிலே சாய வந்தேன்
சொல்லாத காதலை சொல்லிட
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லிச் சொல்லி நெஞ்சுக்குள்ள என்றும் வசிப்பேன்

அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சிக் கொஞ்சி நெஞ்சுக்குள்ள உன்னை அணைப்பேன்...

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா...

படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி



தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா...

மழையின் துளியில் லயம் இருக்குது...

படம்: சின்ன தம்பி பெரிய தம்பி
இசை: கங்கை அமரன்
பாடியவர்: சித்ரா
பாடலாசிரியர்: கங்கை அமரன்



மழையின் துளியில் லயம் இருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது
மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது
மாமா.. என் மாமா
தூவானம் தூவும் அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும் அதில் ஆனந்தம் கூடும்


ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரம் ஆயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்

பூவோடு பூங்காற்றும் பூபாலம் பாடாதோ
பெண்ணான என் உள்ளம் பூப்போல ஆடாதோ
பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள்
பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள்
நாதம் என்று கீதம் என்று சேர்ந்தது வழிகள்

அன்பான நெஞ்சமெல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரை கண்டு சங்கமமாகப்போகிறது

எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும்
எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும்
வானம் எங்கும் பறந்து நான் தேடும் இளம் வயது
சோகங்களாய் மறந்து இது ராகம் தரும் மனது
சேர்ந்ததென்று பாடுதம்மா ஆனந்தம் எனது...

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு...

படம்:ரட்சகன்
பாடகர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ், சாதானா சர்கம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்



நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு

கண்களை விற்றுத்தான் ஓவியமாஆஆ
தண்ணீரில் மீன்கள் தூங்குமாஆஆ
கண்ணீரில் காவல் காணுமா

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு

பெண்ணே பெண்ணே உன் வளையல்
எனக்கொரு விளங்கல்லவோஓஓஓஒ
காற்றுக்கு சிறை என்னவோஓஓஓஒ
தன்மானத்தின் தலையை விற்று
காதலின் வாழ் வாங்கவோ
கண் மூடி நான் வாழவோ
உன்னை என்னி முள் விரித்து
படுக்கவும் பழகிக்கொண்டேன்
என்னில் யாவும் கல் எறிந்தால்
சிரிக்கவும் பழகிக்கொண்டேன்
உள்ளத்தை மறைத்தேன்
உயிர்வலி பொறுத்தேன் என்
சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்

நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு
நிகழ்ந்ததை மறந்துவிடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
நிஜங்களில் கலந்துவிடு
கட்டி வைத்த காற்றே வந்துவிடு
கைகள் ரெண்டை ஏந்தினேன்
காதல் பிச்சை கேட்கிறேன் ம்ம்ம்ம்

நெஞ்சே நெஞ்சே..நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே

அன்பே அன்பே நீ பிரிந்தால்
கண்களில் மழை வருமே
காற்றினை கை விடுமே
விதை அழிந்து செடி வருமே
சிற்பிகள் உடைத்த பின்னே
முத்துக்கள் கைவருமே
காதல் ராஜா ஒன்றை கொடுத்தால்
என்னொன்றில் உயிர் வருமே
உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
காதலில் சுகம் வருமே
அஸ்தமனமெல்லாம் நிறந்தறம் அல்ல
மேற்கினில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்

நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு
நிகழ்ந்ததை மறந்துவிடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
நிஜங்களில் கலந்துவிடு
கட்டி வைத்த காற்றே வந்துவிடு
கைகள் ரெண்டை ஏந்தினேன்
காதல் பிச்சை கேட்கிறேன் ம்ம்ம்ம்

நெஞ்சே நெஞ்சே..நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே

யார் வந்து பூவுக்குள்...

படம்: கண்டேன் சீதையை
இசை: உதயா
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்



யார் வந்து பூவுக்குள் கிச்சு கிச்சு மூட்டியதோ
புன்னகை வெட்கம் புரிகிறதே
யார் வந்து மனசுக்குள் புகை வண்டி ஓட்டியதோ
பச்சை விளக்கு எறிகிறதே
வண்ணத்து பூச்சிகள் வானவில்லை சூடியதோ
வாலிப திறைகள் கிழிகின்றதே
அழகான மாற்றங்கள் ஆரம்பம்
யாரோடு யாரோ பூமியில் சேர்ந்திட கூடும்
திசை மாறும் போதும் தென்றலும் பூக்களை மோதும்


முதல் முதல் ஒரு ஓலை வந்ததோ
உயிர் வரை அது ஊடல் செய்ததோ
(முதல்..)
ஆடை மறைவு ஓடை மீன்கள்
பரதம் தானுடுதோ
ஓடும் முகிலை தேடி பிடித்து
வானம் முகம் மூடுதோ
இதழோரம் ஏதேதோ வார்த்தைகள்
அலைப்போலே வந்து பாடுது காவடி சிந்து
இதழோரம் ஏதேதோ வார்த்தைகள்
அடிப்போட்டால் கூட ஆனந்த மௌனம் இன்று


புது புது ஒரு யுத்தம் வந்ததோ
புயல் மழை இடி போலெ வந்ததோ
சிட்டுக்குருவி சிறகை வாங்கி
பறக்கத்தான் தோன்றுதோ
வெட்ட வெளியில் எட்டுப்போட்டு
ஓடத்தான் தோன்றுதோ
சந்தோச போர்க்களம் ஆரம்பம்
மழைக்கொட்டும் போதும் வானத்தை பார்த்திட தோன்றும்
சந்தோச போர்க்களம் ஆரம்பம்
மல்லிகை பூவில் ஆடைகள் தைத்திட தோன்றும்...

முத்து மணி சுடரே வா...

படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
இசை: இளையராஜா
பாடியவர்: K.J. யேசுதாஸ்



ரஜினி அங்கிள்...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

ம்ஹ்ஹூஊம் நான் தூன்க மாட்டேன்
அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்.. என்ன புடிங்க பாக்கலாம்

ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே
அழகாய் நாள் தோறும்
புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு...அவளைக் கண்டாயோ
தானாக தள்ளாடும் பூவண்ணமே
தானாக தள்ளாடும் பூவண்ணமே
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்

ரஜினி அங்கிள்...நான் இங்க இருக்கேன்...இங்க...இங்க...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

காற்றினில் தேர் போல ஓடிடும் மானே
தன் வழி போனாளே...கனிமொழி எங்கே
அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ...அவளும் வந்தாளோ
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது...

தங்கச் சங்கிலி...

படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்: s.J.ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர்: வைரமுத்து




தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...

மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்

அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கணவு கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்


ஆடும் பொம்மை மீது
ஜாடை சொன்ன மாது
லாலா லாலலாலா லால லால லாலா

கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளின் நீராடினாள்
ராராரரா ராராரரா ராராரரா ராராரரா

அன்பே ஆடை கொடு
எனை அனுதினம் அள்ளி சூடிவிடு

இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு...

சேவல் கொடி பறக்குதடா...

படம்: பில்லா 2007
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
பாடலாசிரியர்: பா.விஜய்



வேல்! வேல்!! வேல்! வேல்!!

சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா,
வேலும் படி ஏறுதடா வேலய்யா!
காக்கக் காக்கக் காக்குமடா, நோக்க நோக்கத் தாக்குமடா,
பார்க்கப் பார்க்கப் பரவுமடா முருகய்யா!

தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்! - நீ
காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?


கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! குமரனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! குமரனுக்கு அரோகரா!

தெருக்கூத்து தமிழனுக்கு முதலாட்டம்!
புலிவேஷம் எங்களுக்குப் புகழ்கூட்டும்!
வீரம்தான் கந்தனுக்குத் தாய்ப்பாலு!
சூரனையும் சுளுக்கெடுத்த நம்மாளு!

வேடன் அடா வேடன் - இவன் தணிகைமலை நாடன்!
வீரன் அடா வீரன் - நாம கந்தனுக்குப் பேரன்!
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்!
மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்!! - நீ
காட்டுக்குள்ள நடமாடி, காட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?


மனுஷன்தான் முருகனோட அவதாரம்!
வீரத்தைத் தத்தெடுத்தா சிவதாரம்!
வேல்குத்தி ஆடும்போது வெறியேறும்!
தேர்சுத்தி ஓடும்போது பொறியாடும்!
ஏறு மலை ஏறு! எங்கண்ணனை நீ பாரு!
ஆறு முகம் யாரு? நம்ம நண்பன்தானே கூறு!
தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு!
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?

விண்ணும் மண்ணும் தடதடக்க,
காற்றும் புயலும் கடகடக்க,
வாரான் வாரான் மலையேறி வேலய்யா! - வேல் வேல்!!
வேலும் மயிலும் பரபரக்க,
காடும் மலையும் வெடவெடக்க,
வாரான் வாரான் வரிசையிலே முருகய்யா! - வேல் வேல்!!

தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்! - நீ
காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?...

காதல் வந்தால் சொல்லி அனுப்பு...

படம்: இயற்கை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: திப்பு



Babe... Tell me you love me
I hope I hear it
While I'm alive

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்டவெளியிலே வாடுதடி

கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி..


உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தமானதே
காதல் வந்த பின்பு

Babe.. Tell me you love me
It's never late.. Dont hesistate

சாவை அழைத்து கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு
உன்னால் என் கடலலை
உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு
உடல் நலமில்லை
கடல் துயில் கொள்வதும்
நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறூக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி

என் கண்ணீர்..

பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்
உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நன்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை
அதற்க்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை
நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு...

ஜூன் ஜூலை மாதம்...

படம்: கல்லூரி
இசை: ஜோஷுவா ஸ்ரீதர்
பாடியவர்கள்: கிரீஷ், சுசித்ரா ராமன்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்



ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ
அதன் பேர் நட்பு
நெடுஞ்சாலை ஓரம் பூக்கும் பூ
அதுதான் நம் நட்பு
நெஞ்சோடு பூக்கும் ஞாபக பூ
அதன் பேர் நட்பு
பூமியில் உள்ள பூவெல்லாம்
ஒரு நாளிலே
மண்ணில் உதிரும் பூ
(ஜூன் ஜூலை..)
வாழ்க்கையில் நம் வாழ்க்கையில்
என்றும் பூக்குமே
அது தான் நட்பு

ஊர் கூடி வந்தாலும் எதிர்க்குமே
உன் விழி துடிக்கையில் துடிக்குமே
உன் சோகம் இறக்கி வைக்க
இறைவன் அனுப்பி வைத்த
தோள்கள் தோழமையில் இருக்குமே..
கல்லூரி என்ன கொடுத்தது
கண் மூடி நினைத்தால் புரியுது
வெறும் கல்வி மட்டும் இல்லை
கனவு மட்டும் இல்லை
கண்கள் கலங்க வைக்கும் உறவுகள்..

எத்தனையோ குறும்புகள் செய்தோம்
எத்தனையோ கனவுகள் செய்தோம்
எத்தனையோ காயங்கள் கண்டோம் தோழனே..
எத்தனையோ சண்டைகள் பார்த்தோம்
எத்தனையோ வம்புகள் செய்தோம்
எத்தனையோ பாடங்கள் கற்றோம்
அத்தனையும் நாங்கள்தான்
நெஞ்சுக்குள் என்றென்றும் இருக்கும்..
(ஜூன் ஜூலை..)

விதைக்குள் உறங்கும் மரங்களை
காற்றும் மழையும் எழுப்புமே..
உனக்குள் ஒளிந்திருக்கும் உனது திறமைகளை
நட்பு இனம் கண்டு உயர்த்துமே..
நாளைக்கு நம்முடைய பெயர்களை
மரமும் செடியும் உறைக்குமே..
எந்த வகுப்பின் மேஜையிலும்
நடந்த பாதையிலும்
நமது சிரிப்பொலிகள் இருக்குமே...
விடுமுறைகள் வந்திடும் போதும்
வீட்டுக்குள் இன்பங்கள் ஏது
மறுபடியும் இங்கே வர தோன்றுமே...
தனிமையில சில நொடிகள் போக
வருமையிலே சில நொடிகள் போக
எல்லாரும் ஒன்றாக சேர
மனசுக்குள் ஆசைகள் மோத
கல்லூரி நம்மை அழைக்கும்...

பன்னீரில் நனைந்த பூக்கள்...

படம்: உயிரே உனக்காக
இசை: லஷ்மிகாந்த
பாடியவர்கள்: ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து



பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க (பன்னீரில்)
வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூ.கு....குக்குக்கூ.
கூ.கு....குக்குக்கூ.
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே..


நானுமோர் தென்றல் தான்
ஊரெல்லாம் சோலை தான்
எங்குமே ஓடுவேன்
நதியிலே நீந்துவேன்
மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்

தந்தனத் தான தன
தந்தனத் தானனா

இளமைக் காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப் புதுமையானது


மாளிகைச் சிறையிலே
வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்தது
வாசலும் திறந்தது
பறந்ததே கிள்ளையே

தந்தனத் தான தன
தந்தனத் தானனா,

நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன் ஆலயம்...

செந்தாழம் பூவில்...

படம்: முள்ளும் மலரும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ்
பாடலாசிரியர்: கண்ணதாசன்




செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி...

முதல் நாள் இன்று...

படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: K.K, மஹாலஷ்மி
பாடலாசிரியர்: பா.விஜய்




முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று
வேராக உன்னை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

என், உள்ளம் பாடுகின்றது
யார் சொல்லி கற்றுக் கொண்டது
நில் என்றால், சட்டென்று, நிற்காதம்மா
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா
ஓஹோ, ஜானி ஜான்ன்ன்ன்...


இசை தாகம் தருகின்ற ஒன்றை
உயிர்போலே காதல் மேகம் என்னை
தீண்டுகையில் தித்திக்காதோ சொல் உள்ளம்


முழுதாக முழுகவும் இல்லை
முழுகாமல் மிதந்ததும் இல்லை
காதல் கடல், எழுந்தவர் கானும் என்னை
ஓஹூ ஹூ வோஹ் வோஹ்.
வெகு தூரம், வந்தேன்
காதல், கிருமிகள் நெருங்காமல்


முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று
லேசாக எனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

இளம் நெஞ்சில், காதல் விதை தூவு
இல்லை எனில் நீ தன்னம் தனி தீவு
வாழ்க்கை ஒரு சுமையாகாதோ சொல்லு
ஓஹொஹொஹ்..


உதட்டாலே, காதல் என்னும் சொல்லை
உரைத்தாலே, கூட வரும் தொல்லை
வாழும் மட்டும், விழிகளில் தூக்கம் கெடும்


ஆஹ் ஹஹ் ஹாஹஹா ஓஹ் வோஹ்..
சுகம் ஏது, வாழ்வில்
காதல், வலியை சுமக்காமல்


உப்புக்கள் வைரம் என்று தான்
காட்டிடும் காதல் ஒன்று தான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம்தான் மிச்சம் மிச்சம்
ஓஓ டொரியே ஏய்!
ஓ சன சோனா
ஓ சன சோனா
ஓ சன சோனா
ஓ சன சோனா...

வா வா காதல் துஷ்யந்தா...

படம்: எங்கள் அண்ணா
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, கார்த்திக்



வா வா காதல் துஷ்யந்தா உந்தன் கண்கள் கற்கண்டா
தித்திக் தித்திக்கின்றதே நெஞ்சம் ரோஜா கல்கண்டா

பல முத்தம் சேர்த்து வைத்தேன்
எடை மொத்தம் கூடி போனேன்
ஏய் மன்மதா இது நல்லதா
நான் காயம் பட்ட மானாய் ஆனேனே
உன் அழகால் என்ன வியர்க்க வைத்தாய்
என் ஜன்னல்கள் திறக்கின்றதே

உன்னை ரசித்தேன் அந்த நிமிஷம் முதல்
என் கடிகாரம் நிற்கின்றது

முதன் முதலாய் பெண்ணின் வாசம் என் மூச்சில் நுழைகின்றதே

என் விழியின் பூ போல் இன்று வெளிநாடப்பு செய்கின்றதே

கண்ணில் சரிகம பாடுகிறாய் நெஞ்சில் ததிமி ஆடுகிறாய்
எனக்கு இதுதான் நடன விழா இனி தினமும் மதன விழா

நீ குளித்தாய் நான் நனைந்து விட்டேன்
இந்த சேர்ப்பு இங்க யார் தந்தது

நீ உறங்க நான் கனவு கண்சேன்
அந்த கனவிங்கு யார் தந்தது

அணில் கடிக்கும் பழத்தை போலே
நீ என்னை பார்க்காதே

அணலருகில் சோளம் போலே
நீ என்னை வாட்டாதே

இந்த ஆசை வெட்கம் எல்லாம்
எங்கு இருந்தது தெரியவில்லை
உன்னை கண்டதும் வருகிறதே
அந்த காரணம் புரியவில்லை

வா வா காதல் சகுந்தலா உந்தன் கண்கள் கல்கண்டா
தித்திக் தித்திக்கின்றதே நெஞ்சம் ரோஜா குல்கந்தா...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு...

படம்: அண்ணா நகர் முதல் தெரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா



மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று...

ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே...

படம்: கள்வனின் காதலி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, சாதனா சர்கம்




ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே
ஏனோ கால்கள் உன் இடமே வருகிறதே
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள் ஒடும் வேகம்
போல இருதயம் துடிக்கிறதே

அடி நாக்கில மூக்கில பேச்சில மூச்சில
உனக்கு இது புரியாதா ?
உன் போக்குல நாய்க்குல
நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா?
அடி நிக்கிற நெளியுற
நொறுங்குற நெருங்குற
நெருப்புன்னு தெரியாதா?
தினம் சொக்குற சொறுகுற விக்கிற விலக்குற
விடுதலை கிடையாதா?
அடங்காதாது காமம் அதை நீயும் அடக்காதே
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே


ஏதோ ஒன்று என் உள்ளே நடக்கிறதே
ஏனோ நெஞ்சம் மின்மினியாய் பறக்கிறதே
நேற்று பார்த்த பூமி வேறு
இன்று வேறு நிறம் என தெரிகிறதே
மூச்சை போல காதல் வந்து
உள்ளம் எங்கும் விரைவது புரிகிறதே

அடி நாக்கில முக்கில பேச்சில மூச்சில
உனக்கு இது புரியாதா ?
உன் போக்குல நாய்க்கில
நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா?
அடி நிக்கிற நெளியுற
நொறுங்குற நெருங்குற
நெருப்புன்னு தெரியாதா?
தினம் சொக்குற சொறுகுற விக்குற விலகுற
விடுதலை கிடையாதா?

கண்ணாடியை பார்த்தே காலம்
தான் கழிகிறதா?
உன் விட்டில் தினமும்
இது போல் தான் நடக்கிறதா?
இந்த தினசரி மாற்றம் காதலினாலே
இரவுகள் எல்லாமே வேகமாய் விடிகிறதா?

வயதோடு ஒரு பூதம் வன்முறையில் இறங்கிடுதா?
ஏமாந்திடும் நேரம் தன் வேலையை தொடங்கிடுதா?
பார்த்திடும் போது பழமுதிர் சோலை
அட பருகிட சொல்கிறது

வா வா வா வா வா வா.........வா
வா வா வா .........

மெதுவாய் ஒரு மௌனம்
மனதோடு பேசிடுதோ?
பொதுவாய் ஒரு நாணம்
புன்னகையை வீசிடுதோ?
தடு மாறிடும் நேரம்
வானிலை மாற்றம்
காற்றிலே நடைந்தே குளிர் காய்ச்சல் அடிக்கிறதா

புரியாதோரு வேட்கை பூ போல மலர்கிறதா
பூவொன்று தொட்டால் தீ போல சுடுகிறதா
மூடிய பூவுக்கு பூஜைகள் இல்லை...
சூடிட வேண்டும்
வா வா வா வா வா வா ......... வா

ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே
ஏனோ கால்கள் உன் இடமே வருகிறதே
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள் ஒடும் வேகம்
போல இருதயம் துடிக்கிறதே

அடி நாக்குல மூக்குல பேச்சில மூச்சில
உனக்கு இது புரியாதா ?
உன் போக்கில நாய்க்கில
நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா?
அடி நிக்கிற நெளியுற
நொறுங்குற நெருங்குற
நெருப்புன்னு தெரியாதா?
தினம் சொக்குற சொறுகுற விக்குற விலகுற
விடுதலை கிடையாதா?
அடங்காதது காமம் அதை நீயும் அடக்காதே
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே...

உயிரிலே எனது உயிரிலே...

படம்: வேட்டையாடு விளையாடு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: மகாலட்சுமி, ஸ்ரீநிவாஸ்



உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்கிறேன் எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே....
(உயிரிலே..........)

அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்தே நீயும் விலக
தத்தளித்தே நானும் மருக
என்ன செய்வேனோ...?
(உயிரிலே...........)

ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தீராமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்...

வைகை நதியோரம்...

படம்: ரிக்ஷா மாமா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி




எண்ணம் எனும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்..
நித்தம் வரும் ஊஞ்..

ஐயய்யே.. கொஞ்சம் இருங்க
கொஞ்சம் இருங்க..
என்னாங்க பாடுறீங்க?
அப்படியில்லை..
நான் பாடுறேன் பாருங்க..

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காத்தே

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆமா..
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
கரெக்ட்டு.. இது கரெக்ட்டு..

மாலை மழை மேகம் தன்னை மெதுவாய் அழைத்தேன்
துணை வர வேண்டுமென்று தூது சொல்லத்தான்
மூண்டு வரும் மோகம் தன்னை மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம் நானும் மெல்லத்தான்
ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்

இதன் ராகம் தாளம் பாவம் அன்பை கூறும்


யாரின் மனம் யாருக்கென்று இறைவன் வகுத்தான்
இரு மனம் சேர்வதிங்கு தேவன் சொல்லித்தான்
பூஜைக்கிது ஏற்றதென்று மலரை படைத்தான்
தலைவனும் மாலையென்று சூடிக்கொள்ளத்தான்
ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்

இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காற்றே...

உன்னைத் தொட்ட தென்றல்...

படம்: தலைவாசல்
இசை: பாலபாரதி
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்




உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளி தள்ளி போவதென்ன நீதி
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசி போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா


தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே
தலைப்பு செய்தி தந்தாயே
தலைப்பு செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பை கையில் தந்தாயே
உறங்கும் போதும் உந்தன் பெயரை
சொல்லிப் பார்க்கிறேன்
உன்னை கண்டு பேசும்போதும்
உச்சி வேர்க்கிறேன்
இந்த சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
உன்னைக் கேக்கிறேன்
(உன்னைத் தொட்ட..)

உன்னை எண்ணி எண்ணி நீ மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னை கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்
பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே
பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே
நீ பார்வையும் காதலும் பழக்கத்தின்
கோர்தலும் சொல்லவில்லையே...

Thursday, June 7, 2012

என்னுயிர் காதலி நீ...

படம் : கலகலப்பு
இசை : விஜய் எபெனேசர்
பாடியவர்கள் : கிரீஸ் , Dr. புறன் & மிலி நாயர்
வரிகள்: பா. விஜய்




Angelina oh Angelina oh ..
Angelina Angelina ...

என்னுயிர் காதலி நீ
vey cute பொண்ணே
நீயும் நானும் வேறு அல்ல
இரண்டும் ஒண்ணு

சொல்ல சொல்ல அடங்காது
அள்ள அள்ள குறையாது
சொல்லபோனா பேரழகி
குட்டி பொண்ணு ,சுட்டி பொண்ணு
vey cute பொண்ணே

I love you சொல்லு
கட்டிபுடி முத்தம் கொடு
ஏதாச்சும் பண்ணு

இறுதிவரை என்னோடு கைகோர்த்து நில்லு
Darling lets step together

சொல்ல சொல்ல வந்து வந்து
மெள்ள வைக்கும் காதல்
உள்ளுக்குள்ளே சொல்லை வைத்து
சொல்ல வைக்கும் காதல்
சொல்லும் போது வார்த்தை இன்றி
கொல்ல வைக்கும் காதல்
காதலே

என்ன என்ன மாயம் என்ன
என்னிடத்தில் செய்தாய்
சின்ன சின்ன புன்னகையில்
செய்தி என்ன சொன்னாய்
வண்ண வண்ண பார்வையாலே
நெஞ்சை கொண்டு போனாய்
காதலி

Oh காதலே என்னை ஏதோ செய்கிறாய்
உயிர் எங்கிலும் பூப்பூவாய் நெய்கிறாய்
காதல் காதல் சுகம் தரும் வலி
வழியில் அறிந்தேன் நீ வரும் வழி

Angelina என் சுவாசமே
உன்னக்காகவே என் நெஞ்சம்
Angelina என் காதலே
உன்னை கொஞ்சவ கொஞ்சம்

கைரேகை போல நீ
என்னோடு வாழ்கிறாய்
Angelina என் காதலே oh ..

Gimme gimme gimme gimme
love story
புடவை கட்டும் பெண்ணே
ரொம்ப ரொம்ப beauty
காதலை கொண்டாடலாம்
இது நல்ல தேதி
பாதி சொல்லிவிட்டேன்
நீ சொல் மீதி

நிலவின் கீழ் அமர்வோமே
நிழல் படாத இடம் தொடுவோமே
நீயும் நானும் சரிபாதி
நிதம் முத்தம் பரிமாய்
இனி விடியும் வரை பணியில் நனைவோமே
அன்பே..

தொட்டு தொட்டு என்னை தொட்டு
போகுதே உன் வாசம்
விட்டு விட்டு மூச்சு விட்டு
ஏங்குதே என் சுவாசம்
மத்தியான வெயிலிலும்
மல்லிகை பூவேசம் நீயடி.

துப்பட்டாவில் என்னை என்னை
கட்டி வைத்து கொண்டாய்
தூங்கும் போது எந்தன் கண்ணில்
வந்து வந்து சென்றாய்
தூசி பட்டால் கண்ணிமைக்குள்
ஊதிவிட்டு தந்தாய் உயிரையே

என் சாலைகள் இருபக்கம் பூமரம்
பூ எங்கிலும் உன் வாசம் வீசிடும்
பெண்ணே உந்தன் நிழல் விழுமிடம்
சொர்க்கம் மண்ணை வந்து தொடுமிடம்

Angelina என் சுவாசமே
உன்னக்காகவே என் நெஞ்சம்
Angelina என் காதலே
உன்னை கொஞ்சவ கொஞ்சம்

நீ வந்து போனபின்
என் அறையில் வீசுதே
Angelina உன் வாசமே ...

Angelina என் சுவாசமே
உன்னக்காகவே என் நெஞ்சம்
Angelina என் காதலே
உன்னை கொஞ்சவா கொஞ்சம்

என்னுயிர் காதலி நீ
vey cute பொண்ணே
நீயும் நானும் வேறு அல்ல
இரண்டும் ஒண்ணு

சொல்ல சொல்ல அடங்காது
அள்ள அள்ள குறையாது
சொல்லபோனா பேரழகி
குட்டி பொண்ணு ,சுட்டி பொண்ணு
vey cute பொண்ணே...

அழகா அழகா சிரிகுராளுங்க...

படம் : கலகலப்பு
இசை : விஜய் எபெனேசர்
பாடியவர்கள் : அமிதாப் நாராயண்
வரிகள்: பா. விஜய்




அழகா அழகா சிரிகுராளுங்க
அடுத்த நொடியே மோரைகிராளுங்க
உசுரா உசுரா நேனைகுராளுங்க
உடனே உடனே மறக்கிரளுங்க

experience ...

இவளுக இம்சை தாங்கமுடியல
இவளுக இல்லாமலும் இருக்கமுடியல

முன்னாடி போன இடிகுராளுங்க
பின்னாடி வந்தா ஒதைகுரளுங்க
என்ன பண்ணுறது என்ன பண்ணுறது
தர்மேந்திரா...

குத்துங்க எசமான் குத்துங்க - இந்த
பொண்ணுங்களே இப்படிதான் குத்துங்க 

இவளுக இம்சை தாங்கமுடியல
இவளுக இல்லாமலும் இருக்கமுடியல

Lip-ல lipstic போடுகுறா
heart-ல ஹெல்மெட் மாடிகுறா
இவளுக இமிச o oh o..

பொழப்ப கெடுத்து டீல் விடுவா
பொறுப்பா irunnum feel pannuva
இவளுக இமிச o oh o..

கண்ணதாசனும் சொன்னார்
அட கமலஹாசனும் சொன்னார்
வாட்டர் bottle-அயும்
கோட்டர் bottle-அயும்
பிரிக்க முடியுமா பாரு

உன்ன சொல்லி குத்தமில்ல
என்ன சொல்லி குத்தமில்ல
காதலோட குத்தம் தானடா

குத்துங்க எசமான் குத்துங்க - இந்த
பொண்ணுங்களே இப்படிதான் குத்துங்க

இவளுக இம்சை தாங்கமுடியல
இவளுக இல்லாமலும் இருக்கமுடியல

எதுக்கு சிரிப்பா தெரியலையே
எரிஞ்சு விழுவா புரியலையே
இவளுக இம்ச...

ஆரம்பம் love-ல அதிருமட
பூகம்பம் அப்புறம் கிளம்புமட
இம்ச இம்ச..

அட இந்தியாவில் தாண்ட
தம்மு அதிகம் விக்குதாம் ஏன்டா ?
புகைய விட்டுதான் பொலம்பி தவிகுற
ஆண்கள் கூட்டத்தால் தாண்ட

love-குள்ள மாட்டினாலும்
stove-குள்ள மாட்டினாலும்
தீஞ்சி போவோம்
மாபிளைகளா!!

குத்துங்க எசமான் குத்துங்க - இந்த
பொண்ணுங்களே இப்படிதான் குத்துங்க

இவளுக இம்சை தாங்கமுடியல
இவளுக இல்லாமலும் இருக்கமுடியல

முன்னாடி போன இடிகுராளுங்க
பின்னாடி வந்தா ஒதைகுரளுங்க
என்ன பண்ணுறது என்ன பண்ணுறது
தர்மேந்திரா...

குத்துங்க எசமான் குத்துங்க - இந்த
பொண்ணுங்களே இப்படிதான் குத்துங்க...

உன்னோட பேச உன்னோட பழக...

படம் : கலகலப்பு
இசை : விஜய் எபெனேசர்
பாடியவர்கள் : கார்த்திக் ,அனிதா
வரிகள்: பா. விஜய்




உன்னோட பேச , உன்னோட பழக
உன்னோட சிரிக்க, ஆசை இல்லை

உன் பேரை கேட்க, உன் கண்ணை பாக்க
மனச இழுக்க, ஏங்கவில்ல
நான் பார்த்ததிலே
உன்னை போல யாருமில்ல

அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்சா
என் மனச கொஞ்சம் கொள்ளை அடிச்சா
என்னக்கென்ன ஆச்சு அட தெரியவில்ல
என் காலு தரையதான் தொடவுமில்ல 

என்ன பாத்துகிட்டே பாத்துகிட்டே நடக்குறே
ஆனா பாக்காமலே போவதுபோல் நடிகுறா
ஒரு பூனை குட்டி போல என்ன மெரடுற
ஹையோ என்னென்னமோ பண்ணுறா

அவ திரும்பிபார்த்து மெல்ல சிரிச்ச
என் மனச கொஞ்சம் கொள்ளை அடிச்சா
உன்னோட பேச, உன்னோட பழக
உன்னோட சிரிக்க , அசை இல்ல

முன்கோப மூச்சழகா
முத்து முத்து பேச்சழகா
முல்லைச்சர பல்லழகா
ஒன்னும் புரியும்படி இல்ல

8-am பிறை நிலவழகா
ஏறு நெத்தி முகம் அழகா
7-அடுக்கு உடல் அழகா
ஏதும் விளங்கலியே உள்ள

என்ன பெத்த மகராசி
பாத்துவச்ச சிலை போல
கண்ணு முன்ன வந்தாளே
இனி செத்தாலும் இவ கூடத்தான்

என்ன பாத்துகிட்டே பாத்துகிட்டே நடக்குறே
ஆனா பாக்காமலே போவதுபோல் நடிகுறா
ஒரு பூனை குட்டி போல என்ன மெரடுற
ஹையோ என்னென்னமோ பண்ணுறா

எப்பவுமே இவ முகத்த
பார்த்துகிட்டே இருகனும்போல்
நெஞ்சுவடம் தவிகுத்தப்பா
சுக அவஸ்தையினு சொன்னேன்

கத்திரிக்கா நருகயில
அப்பளத்த பொரிகயில
வடளியில் வருகையில
இவ நெனப்பில் வெந்து நின்னேன்

கும்பகோணம் காவேரி
உன் காதில் ரகசியமா
என் காதல் சொல்லாதா
அடி ஆத்தாடி என் ஆளு நீ

என்ன பாத்துகிட்டே பாத்துகிட்டே நடக்குறே
ஆனா பாக்காமலே போவதுபோல் நடிகுறா
ஒரு பூனை குட்டி போல என்ன மெரடுற
ஹையோ என்னென்னமோ பண்ணுறா

அவ திரும்பிபார்த்து மெல்ல சிரிச்ச
என் மனச கொஞ்சம் கொள்ளை அடிச்சா
உன்னோட பேச, உன்னோட பழக
உன்னோட சிரிக்க , அசை இல்ல...

தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா...

படம் : முத்து (1995)
இசை : A. R. ரஹ்மான்
பாடியவர்கள் : மனோ , S . ஜானகி
வரிகள்: வைரமுத்து




தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா


பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை
கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை
கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா
முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா
தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா


திக்குத் திக்கு நெஞ்சில்…
திக்குத் திக்கு நெஞ்சில்…
சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே...

காதலுக்கு கண்களில்லே மானே...

படம்: நாடோடி பாட்டுக்காரன்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி. ஸ்வரணலதா
இசை:இளையராஜா






காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ
காலம் தந்த மாயவலையோ
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே
காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே

என் ராகம் எல்லாம் இங்கே நீ தானே
உன்னை எண்ணாத நாளேது பூ மானே
அடி உன்னோடு நானும் வந்து சேராது
என் தேகம் மண்ணில் இங்கே சாயாது
கங்கைக்கு ஒரு கரைக் கட்டலாம்
காவிரிக்கும் அணை கட்டலாம்
காதலுக்கு வேலி கட்டலாமா
ஏ மண்ணில் வெச்சு மூடும் விதை யாவும் பயிராகும்
மழை மேகம் நெருப்பாகி போகாதம்மா

காதலுக்கு கண்கள் இல்லை ராசா
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் ரோசா
காதலுக்கு கண்கள் இல்லை ராசா

தண்ணீரில் நீந்திச் செல்லும் மீன் ஒன்று
சுடு வெண்ணீரில் விழுந்தாலே என்னாகும்
இளம்?? தண்ணீரில் ஆடும் இந்த ரோஜாப்பு
அது முள் மீது விழுந்தாலே பொல்லாப்பு
எப்பவுமே மனசில் ஒன்னு
எண்ணி எண்ணி நிறுத்தும் என்னை
கவிதை?? செய்வார் இங்கு யாரு
நல்ல துள்ளி வரும் காற்று தடைக் காற்று தயங்காது
எந்நாளூம் என் நேசம் மாறாதய்யா

காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ
காலம் தந்த மாயவலையோ
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே
காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே
காதலுக்கு கண்களில்லே மானே...