PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Wednesday, August 29, 2012

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே...

படம் : கடலோர கவிதைகள் (1986)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: பாலசுப்பிரமணியம், ஜானகி
பாடல்வரி : வைரமுத்து




போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
உறவும் இல்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

சுதி சேரும் போது விதி மாறியதோ
அறியாத ஆடு வழி மாறியதோ

அலைகள் அங்கு அடிக்கும் துளிகள் இங்கு தெறிக்கும்
பள்ளி பாடம் ஒப்பித்தே நான்
காதல் பாடம் கற்பித்தேனா
மாயம் தானா?

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே...

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்...

படம் : கண்ணுக்குள் நிலவு (2000)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்,
பாடலாசிரியர்: பழனி பாரதி



ரோஜா பூந்தோட்டம்....
காதல் வாசம்... காதல் வாசம்...

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனி மழை தேடுதே
நம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

விழியசைவில் உன் இதழ் அசைவில்
இதயத்திலே இன்று ஒரு இசை தட்டு சுழலுதடி

ஓ... ஓ... ஓ...

புதிய இசை ஒரு புதிய திசை
புது இதயம் என்று உன் காதலில் கிடைத்ததடி

ஓ... ஓ... ஓ... 
காதலை நான் தந்தேன் வெட்கதை நீ தந்தாய்
காதலை நான் தந்தேன் வெட்கதை நீ தந்தாய்
நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகிறதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்


உன்னை நினைத்து நான் விழிந்திருந்தேன்
இரவுகளில் தினம் வண்ண நிலவுக்கு துணையிருந்தேன்

ஓ... ஓ... ஓ... 

நிலவடிக்கும் கொஞ்சம் வெயில் அடிக்கும்
பருவ நிலை அதில் என் மலருடன் சிலிர்திருந்தேன்
ஓ... ஓ... ஓ... 

சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்
சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்
என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனி மழை தேடுதே
நம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்...

திருமண மலர்கள் தருவாயா...

படம் : பூவெல்லாம் உன் வாசம் (2001)
இசை : வித்யா சாகர்
பாடியவர் : ஸ்வர்ணலதா
பாடல் வரி : வைரமுத்து



திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை


திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே


தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும் போது
கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு
மாடி கொண்ட ஊஞ்சல் மடிமேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு
அந்த நிலை இங்கே இல்லை அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை அதுதான் தொல்லை
போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை
இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா
வீட்டுக்குள் விண்மீன்கள் காய்த்திடுமா


திருமண மலர்கள் தருவாயா
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே


கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா
என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு
மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக்கொள்ள
அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு
பாவாடை அவிழும் வயதில் கைறு கட்டிவிட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
கொழுசு இடும் ஓசை கேட்டே மனசில் உள்ள பாஷை சொல்வாய்
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே


திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை...

ஆத்தாடி பாவாட காத்தாட...

படம் : பூவிலங்கு (1984)
இசை : இளையராஜா
பாடியவர் : இளையராஜா
பாடல் வரி : வைரமுத்து



ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஏ... குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட....


அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக
உன் பாவாட பூவில் நான் காம்பாக
காம்பாக வந்தேன் வீம்பாக
உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே
ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே
அடி செவ்வாழையே...யே.. யே
உன் வீட்டு செவ்வாழை என் கைகள் பட்டாலே
குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே


ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஏ... குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து


மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ
அடி நாளெல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ
நழுவாதோ வந்து தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான்
நீ இங்கு போடாதே பகல் வேஷம் தான்
இளம் பூஞ்சோலையே...யே...யே
உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ
ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்


ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஏ... குளிக்குது ரோசா நாத்து
ஏ... தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட...

மடை திறந்து தாவும் நதியலை நான்...

படம் : நிழல்கள் (1980)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : வாலி  



தன நன.... தன நன..நன....

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ...
தன நன... நா... தன நன..நன.... நா...
தன நன... நா... தன நன..நன.... நா...


ஹேய்... ஹோ... பபப.... பபபப.....
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே


புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்


மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ.....

லல... லா... லல... லலலா....
நேற்றேன் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றேன் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்


வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைகென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்...

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ...
லல... லா... லல... லலலா....லல... லா... லல... லலலா...


அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே...

படம் : முத்துகாளை (1995)
இசை : இளையராஜா
பாடியவர்கள : S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல் வரி: வாலி



ம்ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம் ம்ம்ம்..
ம்ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம் ம்ம்ம்..

அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே
வெள்ளி மிஞ்சி அணிஞ்சவ கொஞ்சி நடக்கையிலே
அந்த அன்ன நடய நான் என்ன சொல்ல மயிலே.. யே... யே..
தொங்கும் மணி கட்டும் தேரா
தொங்கும் மணிமுத்து ஆறா
மச்சான் மனசள்ளி ஜோரா
மின்னல் இடை வெட்டி போறா
கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே.. யே... யே..


புது வெள்ளம் வத்தி போகும் நெஞ்சில் கொண்ட பாசம் வத்தாதம்மா
பொழுதெல்லாம் கைய போட்டு அன்பு கத பேசு விஸ்தாரமா


கதையெல்லாம் சொல்ல சொல்ல தக்கப்படி கூலி தந்திடனும்
அதை நானும் அள்ளி கொடுக்க நேரம் காலம் கூடி வந்திடனும்

உலையும் வச்சி இலையும் வச்சி வாயத்தான் கட்டுறியே

வளையல் கைய வலச்சி போட வாய் ஜாலம் காட்டுறியே

நெஞ்ச துருவி துருவி துளைய போட்டு பருவ பசிய ஊட்டுறியே

இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
உந்தன் நெஞ்சம் தவிப்பத கண்டதிந்த மயிலே ஹே.. ஹே.. ஹே

மண் வீடு கட்டி விளையாடும் பருவம்
போனது போனது போனதடி
அது போனது போனது போனதடி
நிஜ வீடு கட்டி குடியேறும் தருணம்
வந்தது வந்தது வந்ததடி
அது வந்தது வந்தது வந்ததடி
இது சரியான் ஜோடி
விலகாது கூடி... இனியும்
ஓஓ...... ஓஓ.... ஓஓ....

மனசுக்குள் உன்னத்தானே சித்திரமா மாட்டி வச்சிருக்கேன்

உசுருக்குள் உன்னத்தானே பத்திரமா பூட்டி வச்சிருகேன்

இரவெல்லாம் சேதி சொல்ல வெண்ணிலவ தூது விட்டுருக்கேன்

உந்தன் சேதியெல்லாம் அறிஞ்சி நானும் பாடுபட்டுருக்கேன்

காத்திருக்கேன் சேதி சொல்லு பேசாத ஆசை மனம்

கழுத்தில் முணு முடிய போடு பேசாது சாதிசனம்

இந்த உலகம் அறிய உறவும் புரிய விரகம் தணிய வேளை வரும்

இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
உந்தன் நெஞ்சம் தவிப்பது கண்டதிந்த மயிலே
தொங்கும் மணி கட்டும் தேரு
தொங்கும் மணிமுத்து ஆறு
பதியம் போட்டாலே பாரு
இங்கு உன விட்டா யாரு

கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே ஹே.. ஹே... ஹே...

இருபூக்கள் கிளை மேலே...

படம் : உயிரே (1998)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : A.R. ரஹ்மான், அனுராதா ஸ்ரீராம்
பாடல் வரி : வைரமுத்து



இருபூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிராடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே
கண்ணீரே கண்ணீரே
சந்தோஷ கண்ணீரே கண்ணீரே
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே சந்தோஷ கண்ணீரே


உன் பார்வை பொய் தானா
பெண்ணென்றால் திரை தானா
பெண் நெஞ்சே சிறை தானா சரி தானா
பெண் நெஞ்சில் மோகம் உண்டு
அதில் பருவத்தாபம் உண்டு
பேராசை தீயும் உண்டு
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில்
பதில் தோன்றவில்லை சொல் சொல்
கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கண்ணில் கண்ணில் கண்ணில் இன்ப
கண்ணீரே...
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே....


பால் நதியே நீ எங்கே
வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே
பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணை சுற்றும் கனவு
இது உயிரை திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு
ஏ மந்தரா நீ நில் நில்
ஒரு மௌன வார்த்தை சொல் சொல்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
கண்ணில் கண்ணில் கண்ணில் இன்ப
சந்தோஷ கண்ணீரே கண்ணீரே...

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

படம்: அருணோதயம்
பாடியவர்: T.M.சௌந்தரராஜன்
இசை: K.V.மகாதேவன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்



உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசை பார்த்துக்க நல்லபடி உன்
மனசை பார்த்துக்க நல்லபடி


உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு
கோட்டுக்குத் தேவை சிலசாட்சி
குணத்துக்கு தேவை மனசாட்சி உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

மயிலைப் பார்த்து கரடியென்பான்
மானைப் பார்த்து வேங்கையென்பான்
குயிலைப் பார்த்து ஆந்தையென்பான்
அதையும் சில பேர் உண்மையென்பார்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

கடலில் விழுந்த நண்பனுக்கு
கைகொடுத்தேன் அவன் கரையேற
கரைக்கு அவனும் வந்து விட்டான்
கடலில் நான்தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்
சொல்லத்தானே வார்த்தையில்லை.. அதை
சொல்லத்தானே வார்த்தையில்லை...

ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல...

படம் : முதல் வசந்தம் (1986)
இசை : இளையராஜா
பாடியவர் : இளையராஜா
பாடல் வரி : வைரமுத்து




ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு? அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா மாடி வீட்டு கன்னி பொண்ணு மனசுகுள்ளே ரெண்டு கண்ணு ஏழ கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒன்ன தேடுதம்மா கண்ணுகுள்ளே மின்னும் மையி உள்ளுகுள்ளே எல்லாம் பொய்யி சொன்ன சொல்லு என்ன ஆச்சு சொந்தமெல்லாம் எங்கே போச்சு நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம் திரை போட்டு செஞ்ச மோசமே ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா தண்ணியிலே கோலம் போடு ஆடி காத்தில் தீபம் ஏத்து ஆகாயத்தில் கோட்ட கட்டு அந்தரத்தில் தோட்டம் போடு ஆண்டவனை கூட்டி வந்து அவனை அங்கே காவல் போடு அத்தனையும் நடக்குமய்யா ஆசை வச்சா கிடைக்குமய்யா ஆனா கிடைக்காது நீ ஆச வைக்கும் மாது அவ நெஞ்சு யாவும் வஞ்சமே ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு? அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா...

யார் அழுது யார் துயரம் மாறும்...

படம்: கண்ணுகொரு வண்ணக்கிளி
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா





யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
உன் காதில் விழாதோ
என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்


நீ தந்த பாசம் என் காதல் நேசம்
எல்லாமும் இன்று மாயங்களா
நீ தந்த பாசம் என் காதல் நேசம்
எல்லாமும் இன்று மாயங்களா
கங்கை நீர் கூட தீயாகும்
எங்கே என் சோகம் மாறும்
கங்கை நீர் கூட தீயாகும்
எங்கே என் சோகம் மாறும்
நீ போன பாதை நான் தேடும் வேளை
என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்


இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று
துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம்
இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று
துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம்
பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்
பந்தம் தான் வாழ்வின் துன்பம்
பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்
பந்தம் தான் வாழ்வின் துன்பம்
தாய் என்னும் தெய்வம் சேய் வாழத்தானே
என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
உன் காதில் விழாதோ
என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்...