PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Wednesday, August 29, 2012

இருபூக்கள் கிளை மேலே...

படம் : உயிரே (1998)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : A.R. ரஹ்மான், அனுராதா ஸ்ரீராம்
பாடல் வரி : வைரமுத்து



இருபூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிராடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே
கண்ணீரே கண்ணீரே
சந்தோஷ கண்ணீரே கண்ணீரே
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே சந்தோஷ கண்ணீரே


உன் பார்வை பொய் தானா
பெண்ணென்றால் திரை தானா
பெண் நெஞ்சே சிறை தானா சரி தானா
பெண் நெஞ்சில் மோகம் உண்டு
அதில் பருவத்தாபம் உண்டு
பேராசை தீயும் உண்டு
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில்
பதில் தோன்றவில்லை சொல் சொல்
கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கண்ணில் கண்ணில் கண்ணில் இன்ப
கண்ணீரே...
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே....


பால் நதியே நீ எங்கே
வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே
பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணை சுற்றும் கனவு
இது உயிரை திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு
ஏ மந்தரா நீ நில் நில்
ஒரு மௌன வார்த்தை சொல் சொல்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
கண்ணில் கண்ணில் கண்ணில் இன்ப
சந்தோஷ கண்ணீரே கண்ணீரே...

No comments:

Post a Comment