PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Wednesday, January 23, 2013

தேவதை இளந்தேவி...

படம்: ஆயிரம் நிலவே வா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்




தேவதை இளந்தேவி உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா
தேவதை இளந்தேவி.. உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா

ஏரிக்கரை பூவெல்லாம் எந்தன் பெயரைச் சொல்லாதோ
பூவசந்தமே நீ மறந்ததேன்
ஆற்று மணல் மேடெங்கும் நாம் வரைந்த கோலங்கள்
தேவ முல்லையே  காணவில்லையே
காதல் சோதனை இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடிப் பாடும் சோகம் கோடி

தேவதை இளந்தேவி உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா

லா.. லாலா.. லாலலா
லாலலா லாலலா லாலலாலலா
லல லாலலால லாலலால லாலலால லாலலால லா


எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா
விதியென்பதா சதியென்பதா
சொந்தமுள்ள காதலியேbவற்றிவிட்ட காவிரியே
உந்தனாவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி என் கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி நீதான் எந்தன் பாதி

தேவதை இளந்தேவி உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா
ஓ.. நீயில்லாமல் நானா
ஓ.. நீயில்லாமல் நானா
லாலல லலலாலா லாலலால லாலா
லாலலாலலாலா லாலலாலலா லா லாலலால லாலா...

அழகாகச் சிரித்தது அந்த நிலவு...

படம்: டிசம்பர் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி



ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
ஆ: மழைக்காலத்தில்
பெ: லலலலலா
ஆ: நிழல் மேகங்கள்
பெ: லலலலலா
ஆ: மலையோரத்தில்
பெ: லலலலலா
ஆ: சிறு தூறல்கள்
பெ: லலலலலா
ஆ: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெ: லலலல லலலல

ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
ஆ: மழைக்காலத்தில்
பெ: லலலலலா
ஆ: நிழல் மேகங்கள்
பெ: லலலலலா
ஆ: மலையோரத்தில்
பெ: லலலலலா
ஆ: சிறு தூறல்கள்
பெ: லலலலலா
ஆ: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெ: லலலல லலலல

ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ

ஆ: நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்

பெ: நாணல் நானாகத்தான் காத்துக் கிடந்தேன்
காற்றே உனைப் பார்த்ததும் கை சேர்த்தேன்

ஆ: மானே உன் அழகினில் நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல

பெ: நானே என் இதயத்தைத்தானே எடுத்துக் கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள

ஆ: பனி தூங்கும் ரோஜாவே

பெ: எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ.. நாணமென்ன அச்சமென்ன

ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ

பெ: உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என்னோவியம் நீதானே

ஆ: கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போரட்டமே நான் பார்த்தேன்

பெ: மோகம் பொங்கி வரும் தேகம் கொண்டதொரு தாகம்
நான் பெண்ணல்லவோ

ஆ: நானும் கொஞ்சிட அது தீரும் கட்டினில் இணை சேரும்
என் கண்ணலவா

பெ: இள மாலைப் பொழுதாக
ஆ: இரு நெஞ்சம் இனிதாக
பெ: இனிமை வழியும் இளமை இதுவோ.. இரு விழி சிவந்திட

ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
ஆ: மழைக்காலத்தில்
பெ: லலலலலா
ஆ: நிழல் மேகங்கள்
பெ: லலலலலா
ஆ: மலையோரத்தில்
பெ: லலலலலா
ஆ: சிறு தூறல்கள்
பெ: லலலலலா
ஆ: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெ: லலலல லலலல
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ...

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்...

படம்: வண்டிச்சோலை சின்ராசு
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்



எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு

வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு

சாம வேதம் நீ ஓது.. வாடைத் தீயில் கூவும்போது
வா.. இனி தாங்காது.. தாங்காது
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக

சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு

கள்ளத் தீயும் ஒண்ணாச்சு.. காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று முள்ளாச்சு.. அதிலே தூக்கம் போயாச்சு

பாரிஜாத உன் தேகம் பார்க்கப் பார்க்க போதையேறும்
நீ கொடு பேரின்பம்
கையோடு கை சேர.. மெய்யோடு மெய் சேர

சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு

எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு...

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்...

படம்: எங்க முதலாளி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி



குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
ஆ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்

பூமேனி ஜாடை சொல்லும் கோலமென்ன
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலமென்ன

ஆசைக்கு நாணம் இல்லை.. தேடி வந்தேன்
பூஜைக்குப் பாலும் பழம் கொண்டு வந்தேன்

மஞ்சத்தில் உன்னை வைத்து சொர்க்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து இன்பத்தை நான் படிப்பேன்
ராத்திரி நேரம் வந்தால் சுகமே.. சுகமே
பூத்தது மொட்டு ஒன்று.. சுகமே.. சுகமே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

மார்கழி மாதத்தில் நான் ஆளானேன்
மாமனைத் தேடித் தேடி நூலானேன்

நூலை நான் மாலையாக்கிச் சூடட்டுமா
சூடாக முத்தக் கலை கூறட்டுமா

கூரான பார்வை என்னை வேலாகக் குத்துதய்யா
வேலான விழிகள் என் மேல் பாயாமல் பாயுதடி
பாய்கின்ற பாதையெங்கும் சுகமே.. சுகமே
பார்க்கின்ற பக்கம் எல்லாம் சுகமே.. சுகமே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்...

வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...

படம்: லேடிஸ் & ஜென்டில்மேன்
இசை: பரணி
பாடியவர்கள்: உன்னிமேனன்
பாடல்வரி :பா. விஜய்




வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிடவா

இதயம் என்ன புத்தகமா
படித்து விட்டு தந்து விட
காதல் என்ன கட்டிடமா
இடித்து அதை கட்டி விட

பெண்ணே அடி பெண்ணே 

உன் உள்ளம் சுகமா
பேசு ஒரு வார்த்தை
நீ கல்லா மரமா

அன்பே உன்கையில்
நான் விரலா நகமா
நகமாய் கலைந்தாயே
இது உனக்கே தகுமா

இன்னொரு ஜென்மத்தில்
பெண்ணே நீ என்னைப்போல்
ஆணாக பிறந்து வருவாய்

உன் போல பெண்ணை
நீ அப்போது நேசித்தால்
என் நெஞ்சின் 
வேதனை அறிவாய்

உலகத்தின் முடிவை
எழுதிய அவனே
எனக்கொரு முடிவை
ஏன் இன்னும் சொல்லவில்லை
ஏன் இன்னும் சொல்லவில்லை
அவன் ஊமை இல்லை இல்லை

அன்பே என் கண்ணில்
தினம் கண்ணீர் பயணம்
இன்னும் இது நீண்டால்
கொஞ்சம் தூரம் மரணம்

உன்னால் அடி உன்னால்
என் ஆன்மா உருகும்
உன்னை தினம் தேடி
நுரையீரல் கருகும்

எத்தனை காதலில்
தோல்விகள் உள்ளது
பூமியின் ஆழத்தில் புதைந்து

அத்தனை சோகமும்
வெளியில் வந்தது
என் இரு கண்களில் வழிந்து

உறக்கத்தின் நடுவில்
தலையணைக்கடியில்
கொலுசொலி வருதே

அந்த துன்பம் இன்பமடி
அந்த இன்பம் துன்பமடி
உயிர் தேடும் உந்தன் மடி...

வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா...

படம்: தாலாட்டு பாடவா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & எஸ்.ஜானகி



வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா

வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா

உன்னை விட சொந்தம் எது.. அன்பை விட சொர்க்கம் எது
உன்னை விட்டு நெஞ்சம் இது எங்கே வாழப் போகின்றது
கண்ணைத் தொட்டு வாழும் இமை என்றும் தனியாகாதம்மா
உன்னையன்றி என் ஜீவன்தான் இங்கே இனி வாழாதம்மா
உன்னோடு இல்லாத என் வாழ்வு எப்போதும் ஏது.. ஏது
ஒன்றான பின்னாலும் கண்மூட நேரங்கள் ஏது.. ஏது
இது வானம் என வாழும்.. இனி மாறாது

வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா

சிந்தும் மழைச் சாரல் விழ.. அங்கம் அதில் மோகம் எழ
சொந்தம் ஒரு போர்வை தர.. சொர்க்கம் அது நேரில் வர
கன்னம் மது தேனைத் தர.. கண்ணன் அதை நேரில் பெற
கன்னிக் குயில் தோளில் வர.. இன்பம் சுகம் இங்கே வர
எந்நாளும் இல்லாத எண்ணங்கள் முன்னோட.. ஏக்கம் கூட
என்னுள்ளம் காணாத வண்ணங்கள் வந்தாட.. தூக்கம் ஓட
அலை போல மனம் ஓட.. புதுப் பண் பாட

வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா...

Tuesday, January 15, 2013

பெண்ணுக்குள்ள தொடங்கியது...

படம் : என் பொண்டாட்டி நல்லவ
இசை : தேவா
பாடியவர்கள்: நெப்போலியன்
பாடல்வரி :இளங்கோ , சதீஸ்




 பெண்ணுக்குள்ள தொடங்கியது 
மண்ணுக்குள்ள அடங்குதுடி 
அடியே ஞானத்தங்கம்
இதில் துக்கம் என்ன துயரம் என்ன
யாரை சொல்லி என்ன பண்ண 

அடியே ஞானத்தங்கம்

இந்த உடம்பெல்லாம் ஓட்டயடி
இதில் என்ன கோட்டையடி

இந்த ஜனனம் மரணம் இரண்டும் சகஜம்
என்னத்துக்கு அழுவுறது

பாரடி ஒரு ஆறடி 

அதில் நீட்டிகிட்ட வம்பு தும்பு ஏதுடி
கேளடி இவன் மேலடி 

இந்த வேதம் எல்லாம் வாழும் மாட்டும் தானடி

இன்று மனுஷன் மனக்கணக்கு
ஏதும் இங்கே செல்லாது
வாழ ஆட்டும் மனக்குரங்கு
சொன்ன பேச்ச கேக்காது
அங்கேயும் அட இங்கேயும்
அது தறிகெட்டு நெறிகெட்டு ஓடுது

ரெண்டு பேர் கொண்டு வந்தது
ஒரு நாலு பேர் தோளில் ஏறி போகுது
ஞானிகள் அப்ப சொன்னது
என் முலையில இப்போ வந்து ஏறுது

பள்ளி படிப்பு படிச்சதில்ல
மில்லி போட்டேன் உன்னால
அந்த சரக்கில் அறிவுருக்கு
வந்து போச்சு தான்னால

கண்ணுல வரும் தண்ணிய
இப்போ மறச்சிட்டு தெருவுல ஆடுறேன்...