PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Wednesday, January 23, 2013

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்...

படம்: எங்க முதலாளி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி



குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
ஆ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்

பூமேனி ஜாடை சொல்லும் கோலமென்ன
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலமென்ன

ஆசைக்கு நாணம் இல்லை.. தேடி வந்தேன்
பூஜைக்குப் பாலும் பழம் கொண்டு வந்தேன்

மஞ்சத்தில் உன்னை வைத்து சொர்க்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து இன்பத்தை நான் படிப்பேன்
ராத்திரி நேரம் வந்தால் சுகமே.. சுகமே
பூத்தது மொட்டு ஒன்று.. சுகமே.. சுகமே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

மார்கழி மாதத்தில் நான் ஆளானேன்
மாமனைத் தேடித் தேடி நூலானேன்

நூலை நான் மாலையாக்கிச் சூடட்டுமா
சூடாக முத்தக் கலை கூறட்டுமா

கூரான பார்வை என்னை வேலாகக் குத்துதய்யா
வேலான விழிகள் என் மேல் பாயாமல் பாயுதடி
பாய்கின்ற பாதையெங்கும் சுகமே.. சுகமே
பார்க்கின்ற பக்கம் எல்லாம் சுகமே.. சுகமே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்...

No comments:

Post a Comment