படம்: உடன்பிறப்பு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மனோ
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மனோ
ஒரு பாட்டு படிச்சு ஆடி குதிச்சு வேட்டு வெடிங்கடா
(ஏ சாமி..)
ஒரு சூடம் ஏத்தி சூரக்காயை போட்டு உடைங்கடா
கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் கணபதி டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்
(ஏ சாமி..)
அன்னாடந்தான் காத்து மழை
அச்சுறுத்தும் ஆத்தங்கரை
முன்னாலதான் வீற்றிருக்கும் சாமி இவந்தான்
கண்ணாலந்தான் கட்டிக்கலை
பிள்ளை குட்டி பெத்துக்கலை
எல்லாருக்கும் காவல் நிற்கும் ஈசன் மகந்தான்
சின்னஞ்சிறு மூஞ்சூறு
மன்னவனின் பூந்தேரு
பூலோகம் கொண்டாடும் ஒத்த கொம்பந்தான்
செய்யும் தொழில் வாடாமல்
தங்கு தடை வாராமல்
நாம் வாழ காப்பாத்தும் ஆனை முகம்ந்தான்
கொண்டுங்கள் மேளம் தட்டுங்கள் தாளம்
வந்தது பொன்னாளு
நீ தும்பிக்கை மேலே நம்பிக்கை வைச்சா
எப்பவும் நன்னாளு
ஒரு சூடம் ஏத்தி சூரக்காயை போட்டு உடைங்கடா
கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் கணபதி டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்
(ஏ சாமி..)
விக்னம் தீர்க்கும் விக்னேஷ்வரா
கண கண கண கணபதி
இன்பம் சேர்க்கும் நம்போதரா
கண கண கண கணபதி
சங்கர சுக சங்கடஹரா
கண கண கண கணபதி
கொஞ்சிடும் எழில் கொஞ்சுர முக
கண கண கண கணபதி
பாலகன் வடிவேலவன் அவன் மூத்தவன் எங்கள் கணபதி
காலடி தொடும் சீலறை தினம் காப்பவன் எங்கள் கணபதி
அன்னாளிலே போட்டியிட்டு அம்மையப்பன் காலைத்தொட்டு
சுத்தி வந்து மாம்பழத்தை வாங்கிய சாமி
பின்னாளிலே வேல்முருகன் வள்ளியைத்தான் காதலிச்ச
கல்யாணம்தான் கட்டிவச்சு வாழ்த்திய சாமி
குட்ட குட்ட குனிஞ்சவனும் குட்டிக்கிட்டு கேட்டாக்கா
நாம் வேண்டும் ஆனந்தம் அள்ளிக்கொடுப்பான்
உச்சத்தில உசந்தவனும் முக்கிகளை போட்டாக்கா
மென்மேலும் முன்னேற பாதை வகுப்பான்
மந்திரம் போலே மன்னவன் பேரை நித்தமும் சொன்னாலே
உன் சங்கதியெல்லாம் நிம்மதிக் கொண்டு வாழ்ந்திடும் தன்னாலே
ஒரு சூடம் ஏத்தி சூரக்காயை போட்டு உடைங்கடா
கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் கணபதி டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்...
Nices tha lyrics
ReplyDeleteSakthisdudio@gmail.com
ReplyDeleteGoood
ReplyDelete