படம்: நீதிக்கு தலை வணங்கு
இசை: m.s .விஸ்வநாதன்
பாடல்:T .M சௌந்தரராஜன் , p .சுசீலா
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள்
கொஞ்சம் வரச்சொல்லுங்கள்
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் காதலனை இங்கு வரவிடுங்கள்
கொஞ்சம் வரவிடுங்கள்
(கனவுகளே)
நகக்குறி வரைகின்ற சித்திரமோ
அங்குநாணங்கள் தூரிகை வண்ணங்களோ
முகம் என்று அதற்கொரு தலை நகரோ
விழிகள்மூடிய கோட்டைக் கதவுகளோ
இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே
அங்குஇதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே
கைவளை விலங்குகள் நொறுங்கட்டுமே
அங்குகாதலின் சிறகுகள் உயரட்டுமே
அங்குகாதலின் சிறகுகள் உயரட்டுமே
(கனவுகளே)
உடை என்ற திரை மட்டும் விலகட்டுமே
இன்பஉடல் எங்கும் நாடகம் நடக்கட்டுமே
உறவென்ற தேர் இங்கு ஓடட்டுமே
அதில்ஊடலின் கொடி ஒன்று அசையட்டுமே
நிலவென்ற தீபமும் ஒளிரட்டுமே
அதில்நித்திரை இரவுகள் எரியாட்டுமே
காதலில் கவிதைகள் வளரடூமே
ஒருகாவியம் தொட்டிலில் தவழட்டுமே
ஒருகாவியம் தொட்டிலில் தவழட்டுமே...
No comments:
Post a Comment