PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, May 8, 2012

ஒரு பூ எழுதும் கவிதை...

படம்: பூவேலி
இசை: பரத்வாஜ்
பாடியவர்: உன்னிகிருஷ்ணன், சித்ரா




ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஓவியமாய் விரியும்
உலகத்தின் மெலிய தாள்களின் மேலே
இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்
அழகிய இதழ் கொண்டு வா
முத்தம் என்பது நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னே நாம் காண்போம் ஞானம்


ஊசி துளைத்த குமிழி போலே உடைவது உடைவது வாழ்வு
காற்று துரத்தும் கடலலை போல தொடர்வது தொடர்வது காதல்
உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காதலே
உடல் தீர்ந்து போன பின்னும் உயிர் வாழும் காதலே
காலங்கள் எங்கு தீரும் அதுவரை செல்வோமா
காலங்கள் தீரும் இடத்தில் புது ஜென்மம் கொள்வோமா
உன் மூச்சிலே நானும் என் மூச்சிலே நீயும்
காற்றில் ஒலிகள் கேட்கும் வரையில் காதல் கொள்வோமா ?

(ஒரு )

கண்கள் இருக்கும் பெயர்களுகேல்லாம் சூரியன் மட்டும் சொந்தம்
காதல் இருக்கும் பெயர்களுகேல்லாம் சூரியக் குடும்பம் சொந்தம்
உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல் தான்
சுடர் கோடி எதற்கு வந்தோம் தொலைத்ததை தேடத்தான்
உதட்டில் தொடங்கி அந்த உயிர் சென்று தேடல் தான்
நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதி
உன்னில் என்னை என்னில் உன்னை ஊற்றி கொள்வோமா?...

No comments:

Post a Comment