PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, May 8, 2012

நிலவே முகங்காட்டு...

இசை : இளையராஜா
பாடல் : கவிஞர் வாலி
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ஜானகி
வருடம் : 1993




நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

( நிலவே முகங்காட்டு...

பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா

நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின் நீரென்றால்
தினம் குடிப்பவன் நானே

மாலையோடு நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா

மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே

இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு...

1 comment:

  1. Small correction இமை மீறும் கண்ணின் நீரென்றால் தினம் துடிப்பவன் நானே..!

    ReplyDelete