நான் பொறந்தது தனியா
மண்ணில் வளர்ந்தது தனியா
பிழைப்பது தனியா
உடல் உழைப்பது தனியா
இடையில் வந்தது இப்போது எங்கே
நான் சிரிச்சது தனியா அழுதது தனியா
உறவுகள் அப்போது எங்கே
பாய் விரிச்சது தனியா படுத்தது தனியா
வரவுகள் அப்போது எங்கே
அடி தந்தனத்தானா தானானா
இங்க தங்கினவன் உண்டா தானனா
அடி தந்தனத்தானா தானானா
இங்க தங்கினவன் உண்டா தானனா
நான் பொறந்தது தனியா வளர்ந்தது தனியா
உருவான உடன் பிறப்பு
உணராத என் உயிர் துடிப்பு
இருந்தாலும் மானம் நானும் காக்கவேணுமே
விருந்தாளி எனும் எனக்கு
விரும்பாத இடம் எதற்கு
என்னை போன்ற ஏழை வாழ வீதி போதுமே
உருவான உடன் பிறப்பு
உணராத என் உயிர் துடிப்பு
இருந்தாலும் மானம் நானும் காக்கவேணுமே
விருந்தாளி எனும் எனக்கு
விரும்பாத இடம் எதற்கு
என்னை போன்ற ஏழை வாழ வீதி போதுமே
தென்றல் காற்றைப் பார்த்து
தேவை இல்லை என்று
தூரம் போகச் சொல்லும்
தோட்டம் எங்கும் உண்டு
சொன்ன சொல்லு அந்தரங்கம் சொன்னதென்னடா
அது சொல்லித் தந்து இங்கு வந்து நீயும் சொன்னச் சொல்லடா
நான் பொறந்தது தனியா வளர்ந்தது தனியா
மடிமீது வளர்த்த பிள்ளை
அடித்தாலும் வலிப்பதில்லை
அது போல நானும் உந்தன் சொல்லைத் தாங்கினேன்
எவன் மீதும் வருத்தம் இல்லை
ஹாஹ அவன் மீதும் வருத்தம் இல்லை
விதி என்று நானும் இங்கு
என்னைத் தேற்றினேன்
மடிமீது வளர்த்த பிள்ளை
அடித்தாலும் வலிப்பதில்லை
அது போல நானும் உந்தன் சொல்லைத் தாங்கினேன்
எவன் மீதும் வருத்தம் இல்லை
அவன் மீதும் வருத்தம் இல்லை
விதி என்று நானும் இங்கு
என்னைத் தேற்றினேன்
பெத்துப் போட்ட தாயும் விட்டு போனது உண்டு
பற்றில்லாமல் வாழ பற்றிக்கொண்டதுண்டு
எத்தனையோ பட்சி வந்து தங்கி செல்லுது
அது ஒன்றுக்கு ஒன்று சொந்தம் என்றா சொல்லிக் கொள்ளுது
நான் பொறந்தது தனியா
மண்ணில் வளர்ந்தது தனியா
பிழைப்பது தனியா
உடல் உழைப்பது தனியா
இடையில் வந்தது இப்போது எங்கே
நான் சிரிச்சது தனியா அழுதது தனியா
உறவுகள் அப்போது எங்கே
பாய் விரிச்சது தனியா படுத்தது தனியா
வரவுகள் அப்போது எங்கே
அடி தந்தனத்தானா தானானா
இங்க தங்கினவன் உண்டா தானனா
அடி தந்தனத்தானா தானானா
இங்க தங்கினவன் உண்டா தானனா
நான் பொறந்தது தனியா வளர்ந்தது தனியா...
sooper
ReplyDelete