படம்; அழகன்
இசை : மரகத மணி
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா
(மழையும்)
இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தாளே அதுதானா மோன நிலை
அடடா இதுதான் சொர்க்கமா
இது காமதேவனின் யாகசாலையா
(மழையும்)
கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடல்னீர் அலைபோல் மனமும் அலையும்
கருனீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் இதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ இந்த ஏக்கம் யாரறிவார்
முதலாய் முடிவாய் இங்கு என்றும்
வாழ்வது காதல் ஒன்றுதான்...

No comments:
Post a Comment