PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, March 12, 2012

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்...

படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ / S ஜானகி



நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒன்னுக்கொன்னு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே
கட்டழகன் அம்மாடி என்ன சொல்ல
(நூறு வருஷம்..)

உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சிப்போல் புடிச்சாரு தாரம்
தாவி அணைச்சாக்கா தாங்காது பாரம்
இவரு ஏழு அடி
நடக்கும் ஏணியடி
நிலவை நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி
உயரம் மூனு அடி
இரண்டும் இணைஞ்சிருந்தா கேளி பண்ணும் ஊரு
ரெட்ட மாட்டு வண்டி வரும்போது
நெட்டை குட்டை என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான்
கட்டிக்கிட குட்ட வாத்தை புடிச்சான்
நூறு வருஷம் ஹே ஹே..
(நூறு பருஷம்...)

புருஷன் பொஞ்சாதி பொருதந்தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனியாழா நின்னு
முதல்ல யோசிக்கணும்
பிறகு நேசிக்கணும்
மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு
உனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊரறிய மாலை கட்டி போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்ட விட்டால்
கல்யாணம்தான் கசக்கும்...

1 comment: