கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
மனச தாக்குற மின்னலும் அவ தான்
மழையில் தெரியும் ஜன்னலும் அவ தான்
கனவில் பூக்குற தாமர அவ தான்
கதையில் கேக்குற தேவத அவ தான்
என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா
எங்கப் போறா எங்கப் போறா பாக்கலடா
முன்னாடி அவளும் பின்னாடி நானும்
ஒரு முற திரும்பி பாத்தா என்ன
துண்டான மனச ஒண்ணாக்கத் தானே
மறுபடி அவள கேட்டேனே
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா ஆ...
ராகு காலத்தில நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில் சிரிச்சா
பிள்ளையாரு கோயிலுக்கு
தேங்கா ஒண்ணு ஒடைக்க
மனசு வேண்டிச்சு புதுசா
இஞ்சு இஞ்சா இடைவெளி கொறைஞ்சு
இதயம் பறக்குது லேசா
இங்கிலாந்து ராணி போல தங்கத்துல எழச்சு
வாழ வப்பேன் மாசா
அவளை பார்க்கிற யாருமே அவளை
மறந்தும் கூட மறப்பது சிரமம்
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
பீப்ப் ஏறுது சீக்கிறம் சொல்லடி
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ...
வா என் உயிரே வா என் அழகே வா
என் மயிலே ஓ... வா
ஹோ தில்லை நகரா தேரடி தெருவா
அங்கிருக்கா உன் வீடு
சாரதாஸு கூரப் பட்டுச் சேல
வாங்கித் தருவேன்
வெக்கப் பட்டு எனை தேடு
ஹே தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலைய போடு
தண்டவாளம் போல
நம்ம ரெண்டு பேருக்கிடையில்
நடுவில் எதுக்குடி கோடு
மனசில் கட்டுறேன் மாளிக வீடு
வாசல் கோலம் வந்து நீ போடு
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
பீப்ப் ஏறுது சீக்கிறம் சொல்லடி
என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு விலகலடா
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட பழகலடா
எங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தையடா
வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ...
வா என் உயிரே வா என் அழகே வா
என் மயிலே ஓ... வா
கிறுக்குபய புள்ள...
who sang this song please?
ReplyDeleteமக நன்று
ReplyDelete