வள்ளி வள்ளி வள்ளி
தன் மன்னன் பேர் சொல்லி
சொல்லி சொல்லி சொல்லி
தினம் தவித்தாளே கள்ளி ஹோய் அட
கண்கள் ஏங்குதோ உன் மனசும் ஏங்குதோ
மலரும் நினைவிலே கண்ணீர் ஊஞ்சலாடுதோ ( வள்ளி )
தனிமையில் நடந்தாலே உன்
நிழல் வந்து கைப்பிடிக்கும்
நான் வேர்வையில் நனைந்தாலே
உன் நினைவுகள் விசிறிவிடும்
இரவில் தலையணையே உன்
மடியென மாறிவிடும்
நான் குளிரென தவித்தாலே உன்
கனவுகள் போர்த்திவிடும்
அன்றாட வாழ்வில் பேச்சாக நீயே
என் வாழ்வில் என்றும் மூச்சாக நீயே
உந்தன் வானில் மழையானாள்
உந்தன் உயிரின் விலையானாள்
முகிலடிக்கும் அலையானாள்
உன்னை நினைத்தே சிலையானாள்
ஆஆஆஆஆ ஓஓஓஒஹ்... ( வள்ளி )
வயிற்றினில் நம் குழந்தை
எனை அன்பாய் உதைக்கிறதே
அதன் ஒவ்வொரு அசைவினிலும்
உன் குறும்புகள் தெரிகிறதே
இரு உயிர் சுமந்தபடி என்
பாதங்கள் நடக்கையிலே
இந்த பூமியின் வடிவினிலே
உந்தன் கைகளும் தாங்கிடுதே
நான் தினம் பூசும் பொன் மஞ்சள் நீயே
என் கூந்தல் சீவும் பூந்தென்றல் நீயே
கண்கள் ரெண்டிலும் எட்டிப் பார்த்தாள்
உன்னைக் கண்டதும் கன்னம் சிவந்தாள்
உள்ளக் கதவைத் தட்டிப் பார்த்தாள்
நெஞ்சின் துடிப்பை எண்ணி சிரித்தாள்
ஆஆஆஆஆ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ( வள்ளி )
No comments:
Post a Comment