PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, September 7, 2013

மழை மழை மழை ஓ மழை...

படம் : மூன்று பேர் மூன்று காதல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம்
பாடல்வரி: கார்த்திக், ஸ்வேதா மேனன்



மழை மழை மழை ஓ மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு துரத்தும் மழை
பெண்ணே நீதான் என் மழை

நான் உன்னைப் பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டிப் பெய்தது மழை
நீ என்னைப் பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை

அலைஅலை எனத் தாக்குதே மழை தாக்குதே மழை தாக்குதே
நினை நினை எனக் கேட்குதே மனம் கேட்குதே மனம் கேட்குதே ஐயோ!
அணை அணை என கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே
அடிக்கொருமுறை கொஞ்சுதே உனைக் கொஞ்சுதே ஐயோ!

முத்தம் கேட்டால்
வெட்கம் தருவேன்
வெட்கம் கேட்டால்
வண்ணம் தருவேன்
காத்துக்கிடந்தால்
மெல்ல வருவேன்
தூக்கம் கெடுத்து
தொல்லை தருவேன்
கனவில் தொட்டால்
தள்ளிவிடுவேன்
நேரில் தொட்டால்
கிள்ளிவிடுவேன்
நீ அடங்காத என் ராட்சசி

பொய்கள் சொன்னால்
வாடிவிடுவேன்
மீண்டும் சொன்னால்
ஓடிவிடுவேன்
மழையில் வந்தால்
குடைகள் தருவேன்
மடியில் வந்தால்
உதைகள் தருவேன்
கெஞ்சிக் கேட்டால்
கொஞ்ச வருவேன்
கொஞ்சிக் கேட்டால்
கொஞ்சம் தருவேன்
நீ எனைக் கொல்லும் வனதேவதை

நீ உன் பாதியை என் பார்வையில் தேடினாய்
நான் என் மீதியைக் கண்டேனெனக் கூவினேன்
நெஞ்சமென்னும் தீவுக்குள்ளே காதல் பூக்க
வானும் மண்ணும் தீயும் நீரும்
நீயும் நானும் காதலாகி மேவியாட

காதலென்றால்
செல்லப்பார்வை
ஆசையென்றால்
கள்ளப்பார்வை
ஊடலென்றால்
கொஞ்சம் கோபம்
கோபமென்றால்
மீண்டும் ஊடல்
தேடலென்றால்
உன்னுள் என்னை
தேடி வந்தால்
தொலையும் பெண்மை
நான் தொலைந்தாலும் சுகம்தானடி!

தயக்கமென்றால்
இதழின் நடனம்
மயக்கமென்றால்
மனதின் நடனம்
கிரக்கமென்றால்
கண்ணின் நடனம்
கலக்கமென்றால்
நரம்பின் நடனம்
விருப்பமென்றால்
விழியின் நடனம்
நெருக்கமென்றால்
விரலின் நடனம்
இனி நெருங்காமல் நெருப்பில்லை

நீ எனக்காகவே உருவானவள் சிநேகிதி
என் எதிர்காலத்தின் முகம்தானடி கண்மணி
நேற்றை கொன்று இன்றை வென்று
நாளை செய்தால்
உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு
காதலாகி என்ன பேசும் ஈரக் காற்று...

No comments:

Post a Comment