PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Sunday, December 6, 2020

லைலா லைலா நீ தானே அந்த லைலா...


லைலா லைலா லலலால்லலைலா
லலல லலல லலலால்லலால்ல லைலா
லைலா லைலா நீ தானே அந்த லைலா
குயிலா மயிலா நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா...
லைலா லைலா நீ தானே அந்த லைலா
குயிலா மயிலா நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா
அழகா அழகா நிஜம் பாதி பேசும் அழகா
பொய்கள் சொன்னால் அது காதலுக்கு அழகா
என் உயிரினில் விழுந்து ஓடும் அதிசய மின்னல் நீ
என் சேலை பூவில் உறங்கும் ரகசிய தென்றல் நீ
ஒரு பாலைவனத்தில் பாயும் வாலிப கங்கை நீ
தினம் காதல் நெருப்பில் என்னை உருக்கும் தங்கம் நீ
என் வானம் என் பூமி என் வாழ்க்கை என் வேட்கை
எல்லாம் இங்கே நீயே தான் வா அன்பே
அழகா அழகா நிஜம் பாதி பேசும் அழகா
பொய்கள் சொன்னால் அது காதலுக்கு அழகா
நீ வளர்க்கும் பூக்களுக்கு கூந்தல் வளர்த்தேன்
நீ எந்தன் நெஞ்சில் குடி இருக்க கோயில் எடுத்தேன்
காவியங்கள் நாம் எழுத நாளும் நினைத்தேன்
உன் பேரை மட்டும் எழுதி விட்டு என்னை மறந்தேன்
போதும் என்னை அள்ளிக் கொள்ளேன் ஓ ஓ ஓ ஓ
கொஞ்சம் கொஞ்சம் உண்மை சொல்லேன் ஹே ஹே ஹே ஹே
எந்தன் நெஞ்சை திறந்து பாரேன் இல்லை என்றால் நுழைந்து பாரேன்
எந்தன் நெஞ்சை திறந்து பாரேன் இல்லை என்றால் நுழைந்து பாரேன்
உண்மை எனக்கு தெரியாதா வா அன்பே
லைலா லைலா நீ தானே அந்த லைலா
குயிலா மயிலா நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா
என்னை நானே படிப்பதற்கு தீபம் நீயானாய்
அடி உண்மை சொன்னால் நீயும் கூட எந்தன் தாயானாய்
எந்தன் நெஞ்சம் துடிப்பதற்கு தாளம் நீயானாய்
என் பெண்மை நதிக்கு இரண்டு பக்கம் கரைகள் நீயானாய்
விடிந்திடாத இரவு வேண்டும் ஓ ஓ ஓ ஓ
முடிந்திடாத உறவு வேண்டும் ஓ ஓ ஓ ஓ
பகலில் கூட நிலவு வேண்டும் உறங்கிடாத கனவு வேண்டும்
பகலில் கூட நிலவு வேண்டும் உறங்கிடாத கனவு வேண்டும்
புதையல் அள்ளித் தர வேண்டும் வா அன்பே
லைலா லைலா நீ தானே அந்த லைலா
குயிலா மயிலா நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா
அழகா அழகா நிஜம் பாதி பேசும் அழகா
பொய்கள் சொன்னால் அது காதலுக்கு அழகா
என் உயிரினில் விழுந்து ஓடும் அதிசய மின்னல் நீ
என் சேலை பூவில் உறங்கும் ரகசிய தென்றல் நீ
ஒரு பாலைவனத்தில் பாயும் வாலிப கங்கை நீ
தினம் காதல் நெருப்பில் என்னை உருக்கும் தங்கம் நீ
என் வானம் என் பூமி என் வாழ்க்கை என் வேட்கை
எல்லாம் இங்கே நீயே தான் வா... அன்பே...

No comments:

Post a Comment