படம் : எல்லாமே என் காதலி
பாடல் : உயிரே உயிரே
இசை : மரகத மணி
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஹரன்
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ
உலகினில் நாளும் காணாத ஏடு இல்லாத
தேவ பந்தம் இதுவோ
கதிரொளி மாறி போனாலும் மாறி போகாத
உண்மை சொந்தம் இதுவோ
அந்த தெய்வீக பந்ததில் உண்டான உறவிது
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ
மனதினில் ஓ தீபமாக வந்த பொன் மானே
விழிகளும் ஓ தெய்வமாக காணும் பூந்தேனே
உயிர் மொழி நீயடி உனகென்ன நானடி
உயிர் போனாலும் போகாது நம் அன்பு சாட்சிகள்
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
அன்பிலே வாழுகின்றேன் இன்ப பேராலயம்
மன்னனும் போற்றும் இந்த உயிர்கள் சரணாலயம்
வானமே மாறினும் காலமே தேயினும்
மனம் தான் தீட்டும் உயிர் காதல் மறையாது அழியாது
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ
உலகினில் நாளும் காணாத ஏடு இல்லாத
தேவ பந்தம் இதுவோ
கதிரொளி மாறி போனாலும் மாறி போகாத
உண்மை சொந்தம் இதுவோ
அந்த தெய்வீக பந்ததில் உண்டான உறவிது
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ...
No comments:
Post a Comment