PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, September 8, 2009

காதல் என்பது போதி மரம்...









ஏ ..


காதல் என்பது போதி மரம்

காயம் பட்டால் ஞானம் வரும்

காதல் என்பது பாலை வனம்

ஆனால் அங்கும் நிலவு வரும்

இது கண்ணாலே பேசி ..

ஓ ஹோ ..

இது கண்ணாலே பேசி இரு இதயம்

தினம் ஆடி பார்க்கிற தாயமடா

கண்ணாடி போல காத ல் தான்

கையில் எடுக்கையில் கவனமடா


காதல் என்பது போதி மரம்

காயம் பட்டால் ஞானம் வரும்

காதல் என்பது பாலை வனம்

ஆனால் அங்கும் நிலவு வரும்


பறிக்காமல் காட்டில் உதிர்கின்ற பூக்கள்

விரும்பாத காதல் இது தானடா

ஓ ..காயத்தின் மேலே இரை தேடும் ஈக்கள்

பொருந்தாத காமம் அதுதானட


காற்றோடு போகும் சிறகாக வாழ்கை

போவது எவ்விடம் புரியுமா ?


நிலை அற்றது வாழ்வு தான் -காதலால்

நிகழ்காலத்தை வாழடா


காதல் என்பது போதி மரம்

காயம் பட்டால் ஞானம் வரும்

காதல் என்பது பாலை வனம்

ஆனால் அங்கும் நிலவு வரும்


வரலாறு எல்லாம் ரத்தத்தின் வாசம்

யுத்தங்கள் எல்லாம் எதனாலட


ஓ ..பூமிக்கு உள்ளே புதையுண்டதெல்லாம்

பல்லாண்டு காதல் வலி தானடா


தண்ணீரை கேட்கும் காயங்கள் கூட்டும்

ஆயினும் காதலும் சாகுமா ?

உன்னோடு நீ மோதிடும் போர்களம்

அது தானப்பா காதலும் !

No comments:

Post a Comment