
Movie:Aval varuvaalaa
Song:Saelaiyila veedu kattava
Singers:K.S.Chithra,Unnikrishnan
Music Director:S.A.Rajkumar
சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட
என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க
(சேலையில)
தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே
அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே
ஓவியத்தைத் திரை மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா
காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா
ரசிக்க வந்த ரசிகனின் விழியினை மூடாதே
விழியை மூடும்போதிலும் விரல்களாலே திருடாதே
(சேலையில)
மன்மதன் சன்னிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன்
முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே
செவ்விதழின் ஈரங்களே தீர்த்தமென்று தோணுதே
காலனேமென்பது காதலில் இல்லையா
காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா
(சேலையில)
No comments:
Post a Comment