PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, May 8, 2012

காதோடுதான் நான் பாடுவேன்...

படம் : வெள்ளி விழா
இசை : குமார்.V
பாடல் : வாலி
பாடியவர் : L.R. ஈஸ்வரி




காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்...

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?

காதோடுதான் நான் பாடுவேன்....

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்...

உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது...

படம் - கருப்புசாமி குத்தகைக்காரர்
பாடியவர் - BOMBAY JAYASHREE



உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது
கண்ணிரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தச்சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
தப்பிச் செல்லக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டது
தேதித்தாள போல வீணே நாளும் தேயிற - நான்
தேர்வுத்தாள கண்ணீரால ஏனோ எழுதுற
இது கனவா ...ஆஆ...ஆஆ...ஆ...ஆ
இல்ல நிஜமா...... தற்செயலா..........தாய் செயலா
நானும் இங்கு நானும் இல்லையே....

(உப்புக் கல்லு......)

ஏதுமில்லை வண்ணமென்று நானும் வாடினேன் - நீ
ஏழுவண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்..!
தாயிமில்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன்- நீ
தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சத்தாக்கினாய்...!
கத்தியின்றி இரத்தமின்றி காயப்பட்டவள் -உன்
கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மையடைகிறேன்..!
மிச்சமின்றி மீதமின்றி சேதப்பட்டவள் -உன்
நிழல் குடுத்த தைரியத்தால் உண்மையறிகிறேன்...!

(உப்புக் கல்லு......)

மீசைவைத்த அன்னைபோலே உன்னைக்காண்கிறேன்..- நீ
பேசுகின்ற வார்த்தையெல்லாம் வேதமாகுதே.....!
பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன்-உன்
பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே...!
கட்டிலிண்டு மெத்தையுண்டு ஆனபோதிலும்-உன்
பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே..!
தென்றலுண்டு திங்களுண்டு ஆனபோதிலும் -கண்
நாளுமிங்கு தீண்டவில்லை உனது நினைவினிலே...

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா...

திரைப்படம்: தவம்
பாடகர்கள்: மகாலக்ஷ்மி ஐயர்
இசை: D.இமான்


கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
என் விழியோரமாய் மை எடுப்பாயட
என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா
என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா

நீ இல்லாமலே நான் உன்னை காதலிக்கிரேன்..
இதழ் சொல்லமலே நான் உன்னை காதலிக்கிரேன்
அதிகாலை எழுந்து கோலம் போட்டு கொண்டேன்
அழகாக உடுத்தி பொட்டு வைத்து கொண்டேன்
நான் உன்னை காதலிக்கிரேன்..
மனிதர்கள் உருகும் நேரத்தில் தேவதயாயிருந்தேன்
நான் உன்னை காதலிக்கிரேன்
உன்னை காத்லிக்கிரேன்

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
நீ அழைப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்
எனை மணப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்
மனதாலே உன்க்கு மாலை மற்றி கொண்டேன்
கனவாலே உனக்கு மனைவியாகி கொண்டேன்
நான் இங்கு காத்திருக்கிரேன்
காலங்களை மறந்து அசையாத சிலையாக அவன்மேல்
நான் இங்கு காத்திருக்கிரேன்..இங்கு காத்திருக்கிரேன்

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
என் விழியோரமாய் மை எடுப்பாயட
என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா
என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு...

ஓ மனமே ஓ மனமே...

படம்: உள்ளம் கேட்குமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரிஹரன்




ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
(ஓ மனமே)

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்
கணுக்கள்தோறும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா
தோல்விகள் இன்றி பூரணமா
(ஓ மனமே)

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி...

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க...

படம்: தாம் தூம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா, பிரசன்னா




அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


நீ நீ ஒரு நதி அலையானாய்
நான் நான் அதில் விழும் இலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ

அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
கனவினிலே இருப்பதெல்லாம்
மௌனத்தினிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
கனவே கனவே கண்ணுறங்காமல்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்...

கடவுள் தந்த அழகிய வாழ்வு...

திரைப்படம்: மாயாவி
பாடியவர்கள்:கல்பனா , SPB சரண்
இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத்




கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே
வாழ்த்து பாடு
கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
ஓ ஓ ஓஓஒ.....

பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..


எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்
ஓஓஒ ஓஒ
பரவசம் இந்த பரவசம்
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

(கடவுள் தந்த)


நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது
கோடையில் இன்று இலையுதிரும்

வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தானே கேளடி...

மனசே மனசே மனசில் பாரம்...

படம்: ஏப்ரல் மாதத்தில்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்



மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
(மனசே..)

இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே
இந்த கல்லூரி சொந்தம்இது மட்டும்தானே
நட்பினை எதிர்ப்பார்க்குமே
(மனசே..)

நேற்றைக்கு கண்ட கனவுகள்
இன்றைக்கு உண்ட உணவுகள்
ஒன்றாக எல்லோரும் பறிமாரினோம்
வீட்டுக்குள் தோன்றும் சோகமும்
நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
நட்பு என்ற வார்த்தைக்குள்
நாமும் வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா?
பிரிவு என்ற வார்த்தைக்குள்
நாமும் சென்று பார்க்கத்தான்
வலிமை இருக்கின்றதா?
(மனசே..)

ஆறேழு ஆண்டு போனதும்
அங்கங்கே வாழ்ந்த போதிலும்
புகைப்படம் அதில் நண்பன்
முகம் தேடுவோம்
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என்றேதான் சொல்லும் நாள் வரும்
குரலிலே அடையாளம் நாம் காணுவோம்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன லீலைகள்
இன்றுடன் எல்லாமே முடிகின்றதே
சொல்ல வந்த காதல்கள்
சொல்லி விட்ட காதல்கள்
சுமைகளின் சுமையானதே...

என்னை தேடி காதல்...

பாடியவர்: சங்கீதா ராஜேஸ்வரன்
தொடர்: காதலிக்க நேரமில்லை




என்னை தேடி காதல்
என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடும் முன்
செய்தி அனுப்பு …ஹோ
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லிஅனுப்பு ..ஹோ
பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பதுபோலே
நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து
இரவை கொல்கிறேன்
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்
செய்திஅனுப்பு …ஹோ

யாரோ உண் காதலில் வாழ்வது யாரோ
உண் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ
ஏனோ என் இரவுகள் நீள்வதுஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா
கிளையை போல் என் இதயம் தவறிவிழுதே

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்
செய்திஅனுப்பு …ஹோ
பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்
மரங்கள்கூட நடப்பதுபோலே
நினைத்து கொள்கிறேன்...

நிலவே முகங்காட்டு...

இசை : இளையராஜா
பாடல் : கவிஞர் வாலி
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ஜானகி
வருடம் : 1993




நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

( நிலவே முகங்காட்டு...

பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா

நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின் நீரென்றால்
தினம் குடிப்பவன் நானே

மாலையோடு நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா

மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே

இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு...

ஒரு பூ எழுதும் கவிதை...

படம்: பூவேலி
இசை: பரத்வாஜ்
பாடியவர்: உன்னிகிருஷ்ணன், சித்ரா




ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஓவியமாய் விரியும்
உலகத்தின் மெலிய தாள்களின் மேலே
இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்
அழகிய இதழ் கொண்டு வா
முத்தம் என்பது நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னே நாம் காண்போம் ஞானம்


ஊசி துளைத்த குமிழி போலே உடைவது உடைவது வாழ்வு
காற்று துரத்தும் கடலலை போல தொடர்வது தொடர்வது காதல்
உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காதலே
உடல் தீர்ந்து போன பின்னும் உயிர் வாழும் காதலே
காலங்கள் எங்கு தீரும் அதுவரை செல்வோமா
காலங்கள் தீரும் இடத்தில் புது ஜென்மம் கொள்வோமா
உன் மூச்சிலே நானும் என் மூச்சிலே நீயும்
காற்றில் ஒலிகள் கேட்கும் வரையில் காதல் கொள்வோமா ?

(ஒரு )

கண்கள் இருக்கும் பெயர்களுகேல்லாம் சூரியன் மட்டும் சொந்தம்
காதல் இருக்கும் பெயர்களுகேல்லாம் சூரியக் குடும்பம் சொந்தம்
உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல் தான்
சுடர் கோடி எதற்கு வந்தோம் தொலைத்ததை தேடத்தான்
உதட்டில் தொடங்கி அந்த உயிர் சென்று தேடல் தான்
நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதி
உன்னில் என்னை என்னில் உன்னை ஊற்றி கொள்வோமா?...

அல்லா உன் ஆணைப்படி...

Movie name: Chandra Lekha (1995)
Music: Ilaiyaraja
Singer(s): Unni Krishnan




அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்
உயிர் காதல் இன்று உண்டானது இரு ஜீவன் ஒன்று என்றானது
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட

காதலுக்கு உண்டு கல்யாண ராசி சேர்த்து வைக்கும் நம்மை அல்லாவின் ஆசி
வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம் ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம்
நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு
நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு
உன்னை நான் என்னை நீ காணும் போது கண்கள் கல்யாண பண் பாடுமே

பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக
மாலையுடன் திருமாங்கல்யம் சூடி கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி
கேள் காது குளிர காதல் எனும் கீதை நாளும் படிப்பேன்
நான் காலம் முழுதும் கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன்
அம்மம்மா கண்ணம்மா ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா...

ராதா ராதா அனுராதா...

படம்: சந்திப்போமா
நடிகர்: சூர்யா
பாடியவர்: எஸ்.பி.பி




ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா

உன்னைக்கொஞ்சம் பிரிந்தால் உயிர் தடுமாறும்
உன்னைத்தொடும் போது உயிர் கொஞ்சம் ஊறும்

உனக்குள்ளே எனது உயிர் வாழும் வாழும்
ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா

பைங்கிளி பேசாமல் இருப்பதேனடி
மௌனத்தத்தை முத்தத்தால் உடைக்கிறேனடி

காதலன் கையோடு மிதக்கும் வேளையில்
கண்களை மூடாது வெடித்த பூங்கொடி

வான்வெளியில் ஒரு வீடு செய்து அங்கு
வாழ்ந்திருப்போமா பனிமலரே

பூமிக்குள்ளே ஒரு பாதை செய்து அங்கு
போய்விடுவோமா சொல் உயிரே

உலகம் சுழலுவது நின்றாலும்
உள்ளம் கொண்ட அன்பு மாறாது

ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா

எத்தனை இளம்பூக்கள் உதிர்ந்து போனதோ
எத்தனை இளம்காதல் பிரிந்து போனதோ

பூக்களாய் இருந்தால் தான் நாம் உதிர்ந்து போகலாம்
பூமீயாய் இருப்போம் நாம் நிறைந்து வாழலாம்

காதலனே உன் கண்களிலே
உன் காதலி வாழ வீடு கொடு

கண்களுக்குள் சில தூசு வரும்
என் நெஞ்சுக்குள் வந்து வாழ்ந்துவிடு

துனிந்து சாய்ந்துவிட்டேன் தோளோடு
மாலை தந்த பின்னே மார்போடு

ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா

உன்னைக்கொஞ்சம் பிரிந்தால் உயிர் தடுமாறும்
உன்னைத்தொடும் போது உயிர் கொஞ்சம் ஊறும்

உனக்குள்ளே எனது உயிர் வாழும் வாழும்...