PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, September 16, 2013

ஆசை ஆசை தூக்கம் விற்று தானே...

படம் : திருப்பதி ஏழுமலை வெங்கடேச



ஆசை ஆசை
தூக்கம் விற்று தானே
ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்று தானே
மீன்கள் வாங்க ஆசை
நாக்கை விற்று தேனை வங்கி
நீரை விற்று தாகம் வங்கி
பூவை விற்று வாசம் வங்கி
தாயை விற்று பாசம் வங்கி
பூட்டை விற்று சாவி வாங்கும் 
பொல்லாத ஆசை ஆசை

நீரினில் வாழும் மீன்களின் கூட்டம்
அதிசயம் ஏதும் இல்லை
அந்த நீரினில் வேகும் மீன்களும்
குழம்பாய் மாறிடும் மாற்றமில்லை
அளவுக்கு மீறி ஆசைகள் வந்தால்
நிம்மதி சென்று விடும்
வரவுக்கு மீறி செலவுகள் வந்தால்
வழிகள் மாறிவிடும்
வெங்கடசனெ சீனிவாசனே
மனம் போகுதே
பணம் போட்ட பாதையில் தானே

மனிதன் பசிக்கு கோழிகள் இரை தான்
கோழி பசிக்கு புழு இரை தான்
புழுவின் பசிக்கு மண் இரை தான்
மண்ணுக்கு மனிதன் தான்
மண்ணில் வந்தது
மண்ணில் முடியும்
மனதுக்கு தெரிவதில்லை
உறவில் வந்தது விரைவில் முடியும்
உலகம் அறிவதில்லை
அலைபாயுதே நிறம்மாறுதே
மனித வாழ்விலே
ஆசையை ஆசை தின்று விடும்...

Saturday, September 7, 2013

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா...





என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
மனச தாக்குற மின்னலும் அவ தான்
மழையில் தெரியும் ஜன்னலும் அவ தான்
கனவில் பூக்குற தாமர அவ தான்
கதையில் கேக்குற தேவத அவ தான்

என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா
எங்கப் போறா எங்கப் போறா பாக்கலடா
முன்னாடி அவளும் பின்னாடி நானும்
ஒரு முற திரும்பி பாத்தா என்ன
துண்டான மனச ஒண்ணாக்கத் தானே
மறுபடி அவள கேட்டேனே

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா ஆ...


 ராகு காலத்தில நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில் சிரிச்சா
பிள்ளையாரு கோயிலுக்கு
தேங்கா ஒண்ணு ஒடைக்க
மனசு வேண்டிச்சு புதுசா
இஞ்சு இஞ்சா இடைவெளி கொறைஞ்சு
இதயம் பறக்குது லேசா
இங்கிலாந்து ராணி போல தங்கத்துல எழச்சு
வாழ வப்பேன் மாசா
அவளை பார்க்கிற யாருமே அவளை
மறந்தும் கூட மறப்பது சிரமம்
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
பீப்ப் ஏறுது சீக்கிறம் சொல்லடி

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ...
வா என் உயிரே வா என் அழகே வா
என் மயிலே ஓ... வா

ஹோ தில்லை நகரா தேரடி தெருவா
அங்கிருக்கா உன் வீடு
சாரதாஸு கூரப் பட்டுச் சேல
வாங்கித் தருவேன்
வெக்கப் பட்டு எனை தேடு
ஹே தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலைய போடு
தண்டவாளம் போல
நம்ம ரெண்டு பேருக்கிடையில்
நடுவில் எதுக்குடி கோடு
மனசில் கட்டுறேன் மாளிக வீடு
வாசல் கோலம் வந்து நீ போடு
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
பீப்ப் ஏறுது சீக்கிறம் சொல்லடி

என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு விலகலடா
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட பழகலடா
எங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தையடா
வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ...
வா என் உயிரே வா என் அழகே வா
என் மயிலே ஓ... வா

கிறுக்குபய புள்ள...

வாங்கனா வணக்கம்னா...

படம் : தலைவா
இசை : G . V . பிரகாஷ்குமார்
பாடியவர்கள் : விஜய் & சந்தானம்
பாடல்வரி: நா. முத்துகுமார்



வாட் ப்ரோ?... ஹ்ம்ம்
நடனம்... ஹ்ம்ம் ஹ்ம்ம்
சாங்கா?..... பாங்கு....
யாரங்கே? ப்ரோ க்கு ஒரு பாங்கு...
ஹ்ம்ம்
வாட் அகைன் பாங்கு?...
இல்ல சாங்கு...
சாங்கு... எங்க பாடு...

வாங்கனா வணக்கம்னா
அண்ணா அண்ணா என்னன்னா?
மை சாங்க நீ கேளுங்கணா
அண்ணா அண்ணா சரியா புரியலனா

வாங்கனா வணக்கம்னா
மை சாங்க நீ கேளுங்கணா
நான் ஒளரல ஒலரலனா
ரொம்ப பீலிங் பீலிங்குணா

ஹே "ஆ" னானா "ஊ" னானா உன் ஆல தேடி போவ
நீ வேணான்னு போனானா தேவதாசா ஆவ
அவ லேட்டா தான்ணா டாட்டா சொல்வா
பின்னால போவாத

ஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா
கொட்டுது காதல் தத்துவம்னா

வாங்கனா வணக்கம்னா
மை சாங்க நீ கேளுங்கணா
நான் ஒளரல ஒலரலனா
ரொம்ப பீலிங் பீலிங்குணா

லைப் ஒரு "போட்"ங்கனா
சேப்டியா ஒட்டுங்கனா
லவ் ல மாட்டிகிட்டா சேத்துல சிக்கிடும்னா
ஹிட்லர் டார்ச்சர் எல்லாம்
ஹிஸ்டரி பேசுதுனா
இவளுங்க டார்ச்சர் எல்லாம்
யாருமே பேசலானா
fact Fact
விஸ்கி பீர் போதைதான்
மூணு ஹவரில் போகும்னா

அப்படி விழுந்த நான் எழுந்துட மாட்டேன்னா
எகிறுது...

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா
கொட்டுது காதல் தத்துவம்னா

வாங்கனா வணக்கம்னா
மை சாங்க நீ கேளுங்கணா
நான் ஒளரல ஒலரலனா
ரொம்ப பீலிங் பீலிங்குணா

சாட்டர்டே டேட்டிங்னு கூட்டிட்டு போவானா
ஆக்டிங் ஆக்டிங்குனா ஐயோ ஆஸ்கர் ஆக்டிங்குனா
ஆமாங்க ஆமாங்க
ஹாய்னு சொல்லிடுவா எஸ்கேப் ஆகிடுணா
ஸ்கூட்டில ஏத்திக்குவா டெட் எண்டு பாத்துக்கணா

கைய வீசி நீயும் தான் கண்ணாம்பூச்சி ஆடுவ
கண்ணை திறக்கும்போது தான்
உன்னை நீயும் தேடுவ
கவிதை கவிதை
பட்டவன் சொல்லுறேன் காதலே வேணாம்னா

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா
கொட்டுது காதல் தத்துவம்னா

வாங்கனா வணக்கம்னா
மை சாங்க நீ கேளுங்கணா
நான் ஒளரல ஒலரலனா
ரொம்ப ஹே... ஹே... ஹே... ணா...

ஹே "ஆ" னானா "ஊ" னானா உன் ஆல தேடி போவ
நீ வேணான்னு போனானா தேவதாசா ஆவ
அவ லேட்டா தான்ணா பாய் பாய் சொல்வா
பின்னால டோன்ட் டோன்ட் கோ

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா
கொட்டுது காதல் தத்துவம்னா

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா
கொட்டுது காதல் தத்துவம்னா

come bro you come bro
en songa you Hear hear bro
blaber blaber bro
only feeling feeling bro...

தளபதி தளபதி எங்கள்...

படம் : தலைவா
இசை : G . V . பிரகாஷ்குமார்
பாடியவர்கள் : ஹரிச்சரன் & பூஜா ,Vaidyanath, Zia Ulhaq
பாடல்வரி: நா. முத்துகுமார்


Thalapathy HD... by pakeecreation


தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா
எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்
விழுந்தால் விதையாய் எழுவோம்

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

தலைவா தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா

எதிரிகள் எதிரிகள் தம் தம்
அலறிட அலறிட தம் தம்
அனலென புறப்படு தம் தம் தோழா
கெட்டதை கண்டதும் தம் தம்
பட்டென சுத்திட தம் தம்
கட்டளை இட்டிடு தம் தம் தோழா

பிறர் துன்பம் தன துன்பம் போல் எண்ணினால்
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்
எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே
வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்
உன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை
உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை
தலைவா தலைவா உயிர்நீ தலைவா

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

ஒருவிழி எரிமலை தம் தம்
மறுவிழி பனிமலை தம் தம்
இவனுக்கு நிகரில்லை தம் தம் தோழா
நிலமது அதிர்ந்திட தம் தம்
கடலது பொங்கிட தம் தம்
கர்ஜனை புரிவான் தம் தம் தோழா

அச்சங்கள் உனைகண்டு அச்சப்பட
உச்சத்தை தொடவேண்டும் முன்னேறு நீ
பத்தோடு பதினொன்று நீ இல்லையே
பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதானே நீ
ஊரெங்கும் சந்தோசம் விளையாடுதே
உன்னாலே அன்பெங்கும் அலைபாயுதே
தலைவா தலைவா உயிர்நீ தலைவா

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா
எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்
விழுந்தால் விதையாய் எழுவோம்

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தலைவா தலைவா தலைவா...

தமிழ் பசங்க...

படம் : தலைவா இசை : ஜீ வீ பிரகாஷ் குமார்
பாடியவர்கள் : பென்னி தயாள் , Sheezay 
பாடல்வரி: நா. முத்துகுமார் , சைந்தவி



ததததத தமிழா...
தமிழா

பயணம் தொடரும் தலைகனமும் அடங்கும்
அரங்கம் அதிரும் தருனம் அரங்கேற்றம் முடியட்டும்
விடியும்பொழுது எனக்கென உதயமாகட்டும்
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்
புகழது பரவட்டும் தமிழா தமிழா
உயர நீ பறந்திடு தமிழா தமிழா
தா... மிழா... பா... சாங்கா...

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஓள ஃ
கசட தபர யரல வளழ
ஙஞந னமண தமிழா நான்

எங்கிருந்தாளும் ஓ... நாங்க
என்ன செய்தாலும் ஓ...
தமிழோடு தானே ஓ...
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க
தமிழ் பசங்க

திருநெல்வேலி அல்வா தென் மதுர மல்லி பூவு
சென்னை கானா பாட்டு நாங்க ரசிப்போம்
காஞ்சி பட்டு சேல பசு மாடு சுத்தும் சாலை
நாத்து நடும் வேளை பாட்டு படிப்போம்

எங்கள் மயிலாட்டமும் கெஞ்சம் ஒயிலாட்டமும்
கேவில் கரகாட்டமும் அதிரும்
எங்கள் தெரு கூத்திலும்
எங்கள் எசபாட்டிலும்
மெல்லிசைகள் துள்ளி வரும் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம்
நாங்க தமிழ் பசங்க

பொஷ் மி சன் லைக்க ரெண்டு காலு குதிர
ஆலம் தெரியாமல் மச்சி கால நீயும் விடுர
ஆட்டம் போட போதும் நாம தங்கமான பசங்க
போட்டினு வாந்தா கிழிக்கும் தமிழ் பசங்க
புலியும் பதுங்கும் நம்ம தலைவனை கண்டா
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிரா
என் ஒவ்வோரு அசைவும் நடனம் அமைக்கும் பாரடா
ஊருக்குள்ள நம்மபோல செல்லபுள்ள யாருடா

பூப்போல் இட்லி தோச அட முருகி வச்ச மீச
கூழா குடிக்க ஆச பச்ச தமிழன்
வெலுத்து வச்ச வேட்டி பல கதைகள் சொல்லும் பாட்டி
கபடி கபடி போட்டி வீர தமிழன்
கண்ணாமூச்சாடுவோம் ஜல்லிகட்டோடுவோம்
வெற்றி கொடி நாட்டுவோம் தமிழா
சங்க தமிழ் பாட்டிலும் திருக்குரல் ஏட்டிலும்
முக்குலித்து மூழ்கிவிட வா வா வா

எங்கிருந்தாளும் ஓ... நாங்க
என்ன செய்தாலும் ஓ...
தமிழோடு தானே ஓ...
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் நாங்க தமிழ் பசங்க...

யார் இந்த சாலையோரம்...

படம் : தலைவா
இசை : ஜீ வீ பிரகாஷ் குமார்
 
பாடியவர்கள் : 
ஜீ வீ பிரகாஷ் குமார் , சைந்தவி
பாடல்வரி: நா. முத்துகுமார்




யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் நான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் தூரானது வானிலே

யார் இந்த சாலை ஓரம்...

தீர தீர ஆசை யாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில்
தள்ளி நிற்கலாம்
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று
கண்டு கொள்ளலாம்
என்னாகிறேன் என்று எதாகிறேன்
எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது

மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையில் விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே
வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோன்றும் வரையில்
புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
என் பாதையில் இன்று உன்காலடி
நேற்று நான் பார்ப்பதும்
இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி


யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது

நகராமல் இந்த நெடி நீல
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

எந்தன் ஆறானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே...

காதல் எந்தன் காதல்...

படம் : மூன்று பேர் மூன்று காதல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம்
பாடல்வரி: நேகா பசின்




காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரீல் மீன்கள் துள்ளி
வந்தால் இன்பமே
ஒருகணம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறுகணம் ஏங்கிட வைத்தவன்

காதல் செய்யும் இம்சை போல
வேறு ஏதும் இல்லையே
ஆசை ஏணி பாம்பு உள்ளே
பரமபதம்தான் வாழ்க்கையே

ஒருமுறை உந்தன் தோளில்
சாய்ந்திட வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம்
சொக்கிப் போவேன்

விரல்களைக் கோர்த்து செல்லும்
வரம் கொடு போதுமே
வேறு என்ன வேண்டும் அன்பே
செத்துப் போவேன்

விரும்பிய உன்னைத் தொட்ட காற்றும்
வழியில் தொலையாமல் என்னைத் தொடுமோ?
வாசம் தருமோ
ஐயோ என்ன ஆகுமோ...

மழை மழை மழை ஓ மழை...

படம் : மூன்று பேர் மூன்று காதல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம்
பாடல்வரி: கார்த்திக், ஸ்வேதா மேனன்



மழை மழை மழை ஓ மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு துரத்தும் மழை
பெண்ணே நீதான் என் மழை

நான் உன்னைப் பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டிப் பெய்தது மழை
நீ என்னைப் பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை

அலைஅலை எனத் தாக்குதே மழை தாக்குதே மழை தாக்குதே
நினை நினை எனக் கேட்குதே மனம் கேட்குதே மனம் கேட்குதே ஐயோ!
அணை அணை என கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே
அடிக்கொருமுறை கொஞ்சுதே உனைக் கொஞ்சுதே ஐயோ!

முத்தம் கேட்டால்
வெட்கம் தருவேன்
வெட்கம் கேட்டால்
வண்ணம் தருவேன்
காத்துக்கிடந்தால்
மெல்ல வருவேன்
தூக்கம் கெடுத்து
தொல்லை தருவேன்
கனவில் தொட்டால்
தள்ளிவிடுவேன்
நேரில் தொட்டால்
கிள்ளிவிடுவேன்
நீ அடங்காத என் ராட்சசி

பொய்கள் சொன்னால்
வாடிவிடுவேன்
மீண்டும் சொன்னால்
ஓடிவிடுவேன்
மழையில் வந்தால்
குடைகள் தருவேன்
மடியில் வந்தால்
உதைகள் தருவேன்
கெஞ்சிக் கேட்டால்
கொஞ்ச வருவேன்
கொஞ்சிக் கேட்டால்
கொஞ்சம் தருவேன்
நீ எனைக் கொல்லும் வனதேவதை

நீ உன் பாதியை என் பார்வையில் தேடினாய்
நான் என் மீதியைக் கண்டேனெனக் கூவினேன்
நெஞ்சமென்னும் தீவுக்குள்ளே காதல் பூக்க
வானும் மண்ணும் தீயும் நீரும்
நீயும் நானும் காதலாகி மேவியாட

காதலென்றால்
செல்லப்பார்வை
ஆசையென்றால்
கள்ளப்பார்வை
ஊடலென்றால்
கொஞ்சம் கோபம்
கோபமென்றால்
மீண்டும் ஊடல்
தேடலென்றால்
உன்னுள் என்னை
தேடி வந்தால்
தொலையும் பெண்மை
நான் தொலைந்தாலும் சுகம்தானடி!

தயக்கமென்றால்
இதழின் நடனம்
மயக்கமென்றால்
மனதின் நடனம்
கிரக்கமென்றால்
கண்ணின் நடனம்
கலக்கமென்றால்
நரம்பின் நடனம்
விருப்பமென்றால்
விழியின் நடனம்
நெருக்கமென்றால்
விரலின் நடனம்
இனி நெருங்காமல் நெருப்பில்லை

நீ எனக்காகவே உருவானவள் சிநேகிதி
என் எதிர்காலத்தின் முகம்தானடி கண்மணி
நேற்றை கொன்று இன்றை வென்று
நாளை செய்தால்
உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு
காதலாகி என்ன பேசும் ஈரக் காற்று...

ஸ்டெப் த பாட்டு...

படம் : மூன்று பேர் மூன்று காதல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம்
பாடல்வரி: நா. முத்துக்குமார்



ஸ்டெப் த பாட்டு ஸ்டெப் த பாட்டு
இந்த பாட்டு வேணாம் தலைவா
பர்ஸ்ட்டு லவ்வு நினைப்பு வாருதே
இந்த பாட்டு வேணாம் தலைவா
என்னமோ ஆகிறேன் இந்த பாட்டால தான்
அவளை தான் தேடி கண்ண மூடி
இது போகச் சொல்லுதே

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

ராத்திரி தூக்கத்தில் கேட்கையில் கண்ணீர் வருதே
ராட்டினம் போல் அவள் காதலை சுற்றி விடுதே
சந்தோஷம் என்பேனா சோகங்கள் என்பேனா
என்னாளும் நீங்காத ஏக்கம் இது
சங்கீதம் போல இந்த மண்மீது
சட்டென்று ஈர்கின்ற பாட்டு இது
சிரித்தேன், அழுதேன், இந்த பாட்டில் கரைந்தே போனேன்


யார் அவன் ராகத்தில் சோகத்தை மீட்டி சொன்னான்
யார் அவன் என் மனம் நினைப்பதை பாட்டில் சொன்னான்
சந்தேகம் இல்லாமல் என் வாழ்வை யாரோதான்
எட்டித்தான் பார்க்ன்கிற மாயம் இது
முன்னாடி போனாழும் பின்னாடி போனாழும்
எங்கேயும் கேட்கின்ற கானம் இது
புதிதாய் பிறந்தேன் இந்த பாட்டில் தொலைந்தே போனேன்


ஸ்டெப் த பாட்டு ஸ்டெப் த பாட்டு
இந்த பாட்டு வேணாம் தலைவா
first-u லவ்வு நினைப்பு வாருதே
இந்த பாட்டு வேணாம் தலைவா...

மாலை மங்கும் நேரம்...

படம் : ரௌத்திரம்
இசை : பிரகாஷ் நிக்கி
பாடியவர்கள் : ரணினா ரெட்டி
பாடல்வரி: தாமரை




மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்
வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும்
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு
உன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன்
வாசல் தூணாய் நானும் ஆனேன்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்...