PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, October 7, 2011

என் நண்பனே...



Singers: Madhushree, Yuvan Shankar Raja
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Vaali


என் நண்பனே என்னை எய்த்தாய்.. ஒ..
என் பாவமாய் வந்து வாய்த்தாய்..
உன் போலவே நல்ல நடிகன்.. ஒ..
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்..
நல்லவர்கள் யாரோ.. தீயவர்கள் யாரோ..
கண்டுகொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே..
கங்கை நதியல்ல கானல் நதியென்று
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ..?

காதல் என்பது கனவு மாளிகை..
புரிந்துகொள்லடி.. என் தோழியே..!!
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்..
காணவில்லையே என் தோழியே..!!

வலைகையைப் பிடித்து வலைகயில் விழுந்தேன்..
வலக்கரம் பிடித்து வளம் வர நினைத்தேன்..
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்..
எழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல் முழுவதும் பிழை
விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால்தான்..
இதுவா உந்தன் நியாயங்கள்..? என்னக்கேன் இந்த காயங்கள்..?
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்.. ஒ..
முருகன் முகம் ஆறுதான்..
மனிதன் முகம் நூறுதான்..
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ..

ஏன் நண்பனே.. என்னை எய்த்தாய்??

காதல் வெல்லுமா காதல் தோற்குமா?
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே..
காதல் ஓவியம் கிழிந்துபோனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்..

அடிக்கடி என்னை நீ அனைத்ததை அறிவேன்..
அன்பென்னும் விளக்கை அனைத்ததை அறியேன்..
புயல் வந்து சாய்த்த மரமொரு விறகு.. உனக்கென்ன தெரியும்..
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி
இள மனம் எங்கும் எழுந்தது வலி..
யம்மா யம்மா..
உலகில் உள்ள பெண்களே.. உரைப்பேன் ஒரு பொன்மொழி..
காதல் ஒரு கனவு மாளிகை.. ஒ…
எதுவும் அங்கு மாயம்தான்.. எல்லாம் வர்ணஜாலம்தான்..
நம்பாமல், வாழ்வதென்றும் நலமே..!!

காதல் என்பது கனவு மாளிகை..
புரிந்துகொள்லடி என் தோழியே..!!
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்..
காணவில்லையே என் தோழியே..!!

No comments:

Post a Comment