PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, November 23, 2012

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்...

படம் : நீதானே என் பொன் வசத்தம் (2012)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: கார்த்திக்
பாடல்வரி : நா. முத்துகுமார்





காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்.
நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி…
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா.
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே…

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,

கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே…
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே..
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் எந்ந மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு..
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே..
மீட்டதோது மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்…

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று...

No comments:

Post a Comment