PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Sunday, February 19, 2012

தாயில்லாமல் நானில்லை...

Movie name: அடிமைப்பெண்
Music:
Singer(s): டி.எம்.எஸ்
Lyrics
:




தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்

ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினைப் பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்
தாயில்லாமல் நானில்லை

தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்

தாயில்லாமல் நானில்லை

மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்
மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள்
தாயில்லாமல் நானில்லை

ஆதி அந்தமும் அவள்தான்
நம்மை ஆளும் நீதியும் அவள்தான்

அகந்தையை அழிப்பாள்
ஆற்றல் கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி
அந்த தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
என்க்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்...

No comments:

Post a Comment