PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, February 27, 2012

தூதுவளை இலை அரைச்சு...

படம் : தாய் மனசு
இசை: தேவா
பாடியவர்: மனோ சஜ்



தூதுவளை இலை அரைச்சு
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா

தூதுவளை இலை அரைச்சு
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரஞ் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடனும்
நான் காத்தாகி ஊத்தாகி மாமனைத் தழுவி கட்டிக்கணும்

தூதுவளை இலை அரைச்சு
தொண்டையில தான் நனைச்சு
நானும் கூட பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா

நாள் தோரும் காத்திருந்தேன்
நானே தவமிருந்தேன்
உனக்காகத்தான் கண்ணே உனக்காகத் தான்
நான் கூட மனசுக்குள்ளே ஆச வளத்திக்கிட்டேன்
உன்னப் பாத்துத்தான் மாமா உன்னப் பாத்துத்தான்
அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலாமோ
சுத்துற கண்ணுல சிக்குனு என்ன சிறையிடலாமோ
எத்தன நாள் இப்படி நான் ஏங்குறது
பொட்டு வச்சி பூ முடிக்கும் நாள் இருக்கு

தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா

ஊர் தூங்கும் வேளையிலும் நான் தூங்கப் போனதில்லை
உன்னால தான் கண்ணே உன்னால தான்
யார் பேச்ச கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம் உன் பேரு தான்
மச்சான் உன் பேரு தான்
ஏ.. இத்தனை நினைப்பும் என் மேல இருந்தும் எட்டி போகலாமோ
சட்டப்படி ரெண்டும் கட்டிக்கும் முன்னே ஒட்டிக் கொள்ளலாமோ
முத்தமிட்டா மோசமென்ன உண்டாகும்
சத்தமிட்டா உன் நிலமை என்னாகும்

தூதுவளை இலை அரைச்சு
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரஞ் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும் மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடனும்
நான் காத்தாகி ஊத்தாகி மாமனைத் தழுவி கட்டிக்கணும்

தூதுவளை இலை அரைச்சு
தொண்டையில தான் நனைச்சு
நானும் கூட பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா...

கல்யாணமாலை கொண்டாடும்...

படம் : புதுப்புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: வாலி
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்



கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்!
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
(கல்யாணமாலை)

வாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும்,
ஆனாலும் அன்பு மாறாதது!
மாலையிடும் சொந்தம், முடிபோட்ட பந்தம்,
பிரிவென்னும் சொல்லே அறியாதது!
அழகான மனைவி, அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே!
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி!
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி!
சந்தோஷ சாம்ராஜ்யமே!
(கல்யாணமாலை)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து,
பாடென்று சொன்னால் பாடாதம்மா!
தோகை மயில் தன்னைச் சிறை வைத்துப் பூட்டி,
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா!
நாள்தோறும் ரசிகன், பாராட்டும் கலைஞன்,
காவல்கள் எனக்கில்லையே!
சோகங்கள் எனக்கும், நெஞ்சோடு இருக்கும்,
சிரிக்காத நாளில்லையே!
துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே!
என் சோகம் என்னோடுதான்!..

வெள்ளி மலரே வெள்ளி மலரே…

படம் : ஜோடி
பாடல் : வெள்ளி மலரே
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், மஹாலட்சுமி ஐயர்



வெள்ளி மலரே வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு
இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு

ஓ… வெள்ளி மலரே வெள்ளி மலரே

ஏ…
மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்
கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்
நெஞ்சுடைந்த பூவே நில்
ஏ வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை
தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை
ஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில்
வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே
தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே சொட்டுதே

வெள்ளி மலரே வெள்ளி மலரே…
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு

ஏ…
வனங்களில் பூந்தளிர் தேடும்போதும்
நதிகளில் நீர்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும்
நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்
மழையிலும் கூவும் மரகதக் குயில் நான்
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்

வெள்ளி மலரே வெள்ளி மலரே…

நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு

வெள்ளி மலரே வெள்ளி மலரே…

வெண்ணிலவே வெண்ணிலவே...

படம்: லேடிஷ் அண்ட் ஜென்டில்மேன்




வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்தை விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிட வா... (வெண்ணிலவே)
இதயம் என்ன புத்தகமா
படித்து விட்டு தந்து விட
காதல் என்ன கட்டிடமா
இடித்து அதை கட்டி விட
வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்தை விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிட வா...

பெண்ணே அடி பெண்ணே
உன் உள்ளம் சுகமா?
பேசு ஒரு வார்த்தை
நீ கல்லா? மரமா?
அன்பே உன் கையில்
நான் விரலா? நகமா?
நகமாய் கலைந்தாயே
இது உனக்கே தகுமா?
இன்னொரு ஜன்மத்தில் பெண்ணே
நீ ஆணாய் பிறந்து வருவாய்
உன் போலே பெண்ணை நீ அப்போது
நேசித்தால்
என் நெஞ்சின் வேதனை அறிவாய்
உலகத்தின் முடிவை
எழுதியவன் அவனே
எனக்கு ஒரு முடிவை
ஏன் இன்னும் சொல்ல வில்லை
ஏன் இன்னும் சொல்ல வில்லை
அவன் ஊமை இல்லை இல்லை

வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்தை விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிட வா...

அன்பே என் கண்ணில்
தினம் கண்ணீர் பயணம்
இன்னும் இது நீண்டால்
கொஞ்ச தூரம் மரணம்

உன்னால் அடி உன்னால்
என் ஆன்மா உருகும்.
உன்னை தினம் தேடி
நுரையீரல் கருகும்

எத்தனை காதலின் தோள்விகள்
உள்ளது பூமியின் ஆழத்தில் புதைந்து

அத்தனை சோகமும் வெளியில்
வந்தது என் இரு கண்களில் வழிந்து

உறக்கத்தின் நடுவில் தலையணைக்கடியில்
கொலுசொலி வருதே
அந்த இன்பம் துன்பமடி அந்த துன்பம் இன்பமடி
உயிர் தேடும் உந்தன் மடி

வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்தை விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிட வா...

Thursday, February 23, 2012

வேலு வடிவேலு என் டேஸ்ட்ட நீ கேளு...

படம்: லூட்டி
இசை: தேவா
பாடகர் : தேவா




வேலு வடிவேலு என் டேஸ்ட்ட நீ கேளு

யாரு அவ யாரு எம்பாட்ட நீக்கேளு
பத்தாங்க்ளாஸ்சுப் படிச்சிருந்தாப்போதும்
வீட்டுப் பெரிசுக்கெல்லாம் பிடிச்சிருந்தாப் போதும்
மல்லியப்பூ முடிச்சிருந்தாப் போதும்
நம்ம மண் வாசனை அடிச்சிருந்தாப்போதும்
கோழிக்கும்முன்னால கண்ணு முழிக்கணும்
வாலித்தண்ணீரால வாசல் தெளிக்கணும்
புள்ளிவச்சி மாவுக்கோளங்கள் போடனும்
புருஷனை எழுப்பிக் காபிக்கொடுக்கனும்
சுத்தமான தமிழ்ப்பொண்ணுதான் வேணும்
எனக்கு அப்பதான் கட்டிக்கனுன்னுத்தோனும்

எல்லளவு சந்தேகந்தான் என்னப்பத்தி இல்லாமத்தான்
வெள்ளம்மனம் உள்ளவளா இருக்கனும்
அவ என்னுடைய நெழலப்போல நடக்கனும்
கண்டதெல்லாம் காட்சியின்னு
கொண்டதெல்லாம் கோளம்முன்னு
சண்டைகள வளர்க்கிறவ ஆகாது
எம் பைக்குக்கூட அந்தப்பக்கம் போகாது
அட என்னாலும் என் சம்சாரம் பண்போடு நடக்கனும்
தந்தை பெரியாரு கொண்டப் பொண்டாட்டி
நாகம்மைப்போல் இருக்கனும்
அட அப்படி ஒருப்பொண்ணு நீ எனக்கு ரெக்கமன்ட பண்ணு
இந்த வள்ளுவன் வாழ்வுக்கேத்த
ஒரு வாசுகி வேணும் எண்ணு
பொண்ணுகல அடக்கி ஆளும் வானவர் நெஞ்சம் எனக்கு இல்ல
ஒன்னுக்கொன்னு அனுசரனையா அமைஞ்சிருந்தா வழக்கு இல்ல

கட்டினவன் எல்லாருமே கட்டிக்கிட்ட சம்சாரத்த
கண்ணகிப்போல் இருக்கனுன்னு நெனைக்கிறான்
ஆனா கோவலன் போல் இவனுங்கதான் நடக்குறான்
எப்பவுமே ஒருத்தனுக்கு ஏத்தத்துணை ஒருத்தி என்று
அட என்னைப்போல எவன் இருக்கான் மாமன் தான்
நான் எப்போதும் பழித்தப்பாம கற்போடுதான் இருப்பவன்
அட என்னாட்டம் மனப்பெண் கூட சீதைப்போல இருக்கனும்
அட என்னப்பெத்த ஆத்தா என்ன நல்லப்படிக்காத்தா
தெனம் இராமாயணம் சொல்லி
என்ன இராமனாக்கிப்போட்டா
கட்டம்மாட்டேன் கண்ணனைப்போல்
கந்தனைப்போல் இரண்டுப்பேர
எப்பவுமே ரிப்பேராகிட விட்டிடமாட்டேன் நல்லப்பேர...