PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, September 8, 2009

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட...







ஆ ஆ ஆ ....ஆ ஆ ஆ ...
ஆ ஆ ஆ ஆ .....ஆ ஆ ஆ ஆ ஆ ....

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா ...
ஓ ...பைங்கிளி ...நிதமும்

(என்னைத் தொட்டு )

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு ...
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு ...
அன்பே ஓடி வா ...
அன்பால் கூட வா ...
அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா .(2)..
ஓ ...பைங்கிளி ...நிதமும்

என்னைத் தொட்டு ...
நெஞ்சைத் தொட்டு ...

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி..

ஆ ஆ ஆ அ ....ஆ ஆ ஆ ஆ ஆ அ ...ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ...
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே ...
மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே ...
கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ...
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே ...
அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ...
என்னில் நீயடி ...
உன்னில் நானடி ...
என்னில் நீயடி . ..உன்னில் நானடி ...
ஓ பைங்கிளி ... நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ..
அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா ...
ஓ ...பைங்கிளி ...நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி...

No comments:

Post a Comment