PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, September 7, 2009

ஆயிரம் ஜன்னல் வீடு


ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மனப் போலவே
இங்க அப்பத்தாவப் பாருங்க

ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலத்தான் சுத்துறான்
வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்

பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்
(ஆயிரம்..)

வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு இவங்களப் போல யாரு
சித்தப்பாவின் மீசையைப் பார்த்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் குழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்
கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டிதானே எறிவாங்க
திருட்டுபயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின் அவுப்பாங்க

காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான்
நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான்

சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்
வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பையே தாண்டலாம்
(ஆயிரம்..)

சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஓடுதொரு ஆறு ஆறு
ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு
சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி சொல்லும் தாத்தாவோட பேரு
வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பும்பாது
வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு

ஐயோ வைக்கிறான் வைக்கிறான் ஐசத்தூக்கி வைக்கிறான்
கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான்

ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம்
வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம்
(ஆயிரம்..)

கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான்
போட்டுட்டா போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டா

பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு

படம்: வேல்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ப்ரேம்ஜி, ராகுல், வடிவேலு

No comments:

Post a Comment