படம்: பிரியமானவளே
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஹரிஹரன், மகாலெட்சுமி ஐயர்
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன்சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
உன்சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ...
ப்ரியமானவனே.
மழைத்தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா?
குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா?
விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா?
நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா?
விடிகாலை வேளை வரை என்வசம் நீ சம்மதமா?
இடைவேளை வேண்டுமென்று இடம் கேக்கும் சம்மதமா?
நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா?
என்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா?
இமையாக நானிருப்பேன் சம்மதமா சம்மதமா?
இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா?
கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா?
கண்மூடி தவமிருப்பேன் சம்மதமா சம்மதமா?
ஓ.. ஒருகோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா?
பலகோடி பௌர்னமிகள் பார்த்திடுமே சம்மதமா?
பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா?
ப்ரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா?...
No comments:
Post a Comment