
காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல கவிதைகள் தலைவா
கவிதை என்பது புத்தகம் அல்ல பெண்கள் தான் சகியே
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல நீ மட்டும் சகியே
அடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடையா
இது என்னடி இதயம் வெளியேறி அலைகிறதே காதல் இதுவா
எப்படி சொல்வேன் புரியும் படி ஆளைவிடுடா
மன்னிச்சுக்கடி காதல் செய்வேன் கட்டளைப்படி
(காதல்..)
படப்படக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும் சொல்வது சரியா
தவறு செய்தால் முத்தம் தந்து என்னை திருத்திக்கணும் தண்டனை சரியா
எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லிவிடுடா
சொல்லுகிறேன் இப்போது முத்தம் கொடுடி
(காதல்..)
படம்: பத்ரி
இசை: ரமண கோகுலா
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சுனிதா
No comments:
Post a Comment