
அர்ஜுனரு வில்லு ஹரிசந்திரன் சொல்லு
இவனோட தில்லு பொய்காது
எதிரியை கொல்லு இமயத்தை வெல்லு
உனக்கொரு எல்லை கிடையாது
யாரோ யாரிவனோ
ஒரு நீரோ தீயோ யாரரிவார்
ஆளும் தேரிவனோ
அதை அசைத்து பார்க்க யார் வருவார்
(அர்ஜுனரு..)
அஞ்சுவது மடம் எஞ்சுவது திடம்
அஞ்சு விரல் தொடுமே ஆகாயம்
வெட்டிவிடு விணை ஏத்தி விடு உனை
உன்னுடைய துணையே முந்தானை
இவன் ஒரு அதிசய புலி
இவன் இழுப்பது நகம் கண்டு புடி
அதை அறிந்திடும் பகைவனின் வழி
தனி ஒரு மனிதனின் படை
அதில் எழுவது விடுதலை விட
அது மழைப்பெய்ய இறங்கட்டும் குடை
ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு
ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடும்
(அர்ஜுனரு..)
தேவதையின் ராகம் வெண்ணிலவு முகம்
மூடியது ஏனோ கார்மேகம்
தேடன் ஒரு கண்ணில் ஊடல் ஒரு கண்ணில்
நாளை இரு கண்கள் சுகமாகும்
அழகிய தாய் மொழி இவள்
இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்
அட இவளுக்கு இவளே நகல்
அழகிய மெழுகுடன் உடல்
உன் விழியினில் எதற்கடி கடல்
அதை துடைப்பது இவனது விரல்
ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு
ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடும்
(அர்ஜுனரு..)
படம்: கில்லி
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சுக்விந்தர் சிங்
No comments:
Post a Comment