Song: மனசுக்குள் வருவாயா
மனசுக்குள் வருவாயா,
என் மனசுக்குள் வருவாயா
நீ ஒரு முறை சொல்லி விடு
பூங்காற்றாய் நீ வரவே
இந்த பூங்கா ஏங்கியது
கனவாக நீ வரவே
என் இமைகள் தூங்கியது
ஆறுதல்கள் தந்தால் என்ன
அழுகை வருகிறது
உன் பேரை சொன்னால், உன் பேரை சொன்னால்
உள் நெஞ்சில் ஏனோ ஓர் ஆறுதல்
நீ என்னை பார்த்தால், நீ என்னை பார்த்தால்
முள்ளுக்குள் கூட பூ மாறுதல்
பட்டாம்பூச்சிக்கு ஒரு விண்மீண் மேலேதான்
ஆசை வந்தது
விண்மீண் என்பதோ இந்த பட்டாம்பூச்சிக்கு
பார்வை தந்தது
வலியாக நீயும் வந்தாலும் போதும்
சுகமாக நானும் வரவேற்கிறேன்
காற்றாக நீயும் வந்தாலே போதும்
சந்தோஷமாய் நான் சருகாகிறேன்
எந்த பூவிற்கும் மணம் எங்கே வந்தது
உன்னால் வந்தது
எந்தன் நெஞ்சுக்குள் உயிர் எங்கே வந்தது
உன்னால் வந்தது...
No comments:
Post a Comment