PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, August 20, 2010

காதல் வெண்ணிலா கையில் சேருமா...

திரைப்படம் : வானத்தைப்போல
பாடியவர் :ஹரிஹரன்
இசை: SA ராஜ்குமார்,
பாடல் : பா.விஜய்

காதல் வெண்ணிலா
கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே

இமையாக நானும் இருப்பேன்
இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன்
உனக்காக காத்திருப்பேன்

[காதல் வெண்ணிலா]

வானத்து நிலவாய் நீ இருந்தால்
உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன்
தீபத்தை போலே நீ இருந்தால்
உனக்கு பதில் நான் உருகிடுவேன்

பூ வனம் போலே நீ இருந்தால்
பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

[காதல் வெண்ணிலா]

ஓவியம் போல் உன்னை வரைந்திடவே
உதிரம் கொண்டு நிறமெடுப்பேன்
சிலையென உன்னை செதுக்கிடவே
இமைகள் என்னும் உளியெடுப்பேன்

கவிதையைப் போல் உன்னை எழுதிடவே
உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

[காதல் வெண்ணிலா]...

No comments:

Post a Comment