PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Wednesday, August 29, 2012

அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே...

படம் : முத்துகாளை (1995)
இசை : இளையராஜா
பாடியவர்கள : S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல் வரி: வாலி



ம்ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம் ம்ம்ம்..
ம்ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம் ம்ம்ம்..

அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே
வெள்ளி மிஞ்சி அணிஞ்சவ கொஞ்சி நடக்கையிலே
அந்த அன்ன நடய நான் என்ன சொல்ல மயிலே.. யே... யே..
தொங்கும் மணி கட்டும் தேரா
தொங்கும் மணிமுத்து ஆறா
மச்சான் மனசள்ளி ஜோரா
மின்னல் இடை வெட்டி போறா
கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே.. யே... யே..


புது வெள்ளம் வத்தி போகும் நெஞ்சில் கொண்ட பாசம் வத்தாதம்மா
பொழுதெல்லாம் கைய போட்டு அன்பு கத பேசு விஸ்தாரமா


கதையெல்லாம் சொல்ல சொல்ல தக்கப்படி கூலி தந்திடனும்
அதை நானும் அள்ளி கொடுக்க நேரம் காலம் கூடி வந்திடனும்

உலையும் வச்சி இலையும் வச்சி வாயத்தான் கட்டுறியே

வளையல் கைய வலச்சி போட வாய் ஜாலம் காட்டுறியே

நெஞ்ச துருவி துருவி துளைய போட்டு பருவ பசிய ஊட்டுறியே

இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
உந்தன் நெஞ்சம் தவிப்பத கண்டதிந்த மயிலே ஹே.. ஹே.. ஹே

மண் வீடு கட்டி விளையாடும் பருவம்
போனது போனது போனதடி
அது போனது போனது போனதடி
நிஜ வீடு கட்டி குடியேறும் தருணம்
வந்தது வந்தது வந்ததடி
அது வந்தது வந்தது வந்ததடி
இது சரியான் ஜோடி
விலகாது கூடி... இனியும்
ஓஓ...... ஓஓ.... ஓஓ....

மனசுக்குள் உன்னத்தானே சித்திரமா மாட்டி வச்சிருக்கேன்

உசுருக்குள் உன்னத்தானே பத்திரமா பூட்டி வச்சிருகேன்

இரவெல்லாம் சேதி சொல்ல வெண்ணிலவ தூது விட்டுருக்கேன்

உந்தன் சேதியெல்லாம் அறிஞ்சி நானும் பாடுபட்டுருக்கேன்

காத்திருக்கேன் சேதி சொல்லு பேசாத ஆசை மனம்

கழுத்தில் முணு முடிய போடு பேசாது சாதிசனம்

இந்த உலகம் அறிய உறவும் புரிய விரகம் தணிய வேளை வரும்

இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
உந்தன் நெஞ்சம் தவிப்பது கண்டதிந்த மயிலே
தொங்கும் மணி கட்டும் தேரு
தொங்கும் மணிமுத்து ஆறு
பதியம் போட்டாலே பாரு
இங்கு உன விட்டா யாரு

கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே ஹே.. ஹே... ஹே...

No comments:

Post a Comment