PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, December 5, 2020

கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு...



ஏய்... டாக்ஸி டாக்ஸி ச்சே... 
சமயத்துக்கு ஒரு டாக்ஸி கூட கெடைக்காதே 
ஏய்... லுக் அர்விந்த்,,, டோன்ட் டச் மீ 
டாக்ஸி டாக்ஸி...

கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு 
ஷட் அப் டோன்ட் டாக் டு மீ 
ஏய்... டாக்ஸி டாக்ஸி டாக்ஸி...

என் பொன்மணிக்கு கோபம் வந்தா 
மின்னும் பனிப் பூவு 
எவளாவது ஏமாந்தவ காதுல பூ வச்சிருப்பா 
அவ கிட்ட போய் சொல்லு

சிந்துதடி சிந்துதடி முத்து மழைப் பூவு 
அடடா என் கவியரசர் கம்பா 
உன் பொன்னுடம்பில் ஈரம் பட வந்து விடும் நோவு 
ஆஹா... ஆடு நனையுதுன்னு ஓநாயி அழுததா

வீண் கோபம் ஏன்....ஜஜஜ ஜஜா... 
ஆண் பாவம் ஏன்.... ஏ பப்பர பப்பா 
ஐ லவு யூ ஐ லவு யூ 
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி 

என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு 
கேக்க முடியாது போய் தொலையிறியா ஹையோ... 
என் பொன்மணிக்கு கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு 
அதே பழைய பல்லவிய திருப்பி சொல்லாதே போயா...

எட்டி எட்டிச் சென்று வெட்டும் பார்வை கொண்டு 
சிற்றிளம் பூவும் யாரைத் தேடுது 
ஆங்... சிற்றிளம் பூவு ஆட்டோ தேடுது டாக்ஸி தேடுது 
இன்னொரு ஜோடிக்கு ஆளக் கூட தேடும்


சொல் ஏன் இப்படி ஏன் அம்மணி நாடகம் 
ஆமா... நாடகம்... திருநாவுக்கரசி... 
சொல்ல வந்துட்டாரு திருநாவுக்கரசர்...


நித்தம் நித்தம் என்னை சுற்றிச் சுற்றி வந்து 
வட்டமே போட்ட மோகம் தீர்ந்ததா 
ஆமா... தீந்து போச்சு எம்டியா சுத்திட்டு இருக்கேன் 
ஹையா போய்ட்டு வரீங்களா

ஓ சிங்காரியே இங்கேனடி ஆத்திரம் 
ஆத்திரமா சும்மா இருய்யா 
வயிறு பத்திகிட்டு எரியுது ஃபயர் இஞ்சன்... 
நீ இல்லாமல் நானா என் பூங்கொடி 
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

நான் இல்லாமல் நீயும் இங்கேதடி 
தோ இருக்கேனே நல்லாத்தானே இருக்கேன் பாரு 
பூந்தென்றலே என் செல்வமே 
ரா பாப்பபா ரப்பா பாப்பபா ஐ லவு யூ ஐ லவு யூ 
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி

என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு 
ஸ்டாப் இட் மேன் கேட்டு கேட்டு புளிச்சு போச்சு பா 
என் பொன்மணிக்கு கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு 
இந்த சினிமா டைலாக் எல்லாம் சொல்லி 
என்ன போரடிக்காதே போயா

வீண் கோபம் ஏன்.... வெவெவெவெ 
ஆண் பாவம் ஏன்......பாவம் மை ஃபூட் 
ஐ லவு யூ ஐ லவு யூ 
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி

என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு 
ஹலோ கேன் யூ கிவ் மீ லிஃப்ட் தேங்க் யூ 
என் பொன்மணிக்கு கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு

சுட்டும் விழிச் சுடர் என்று ஒரு பொய் கொண்டு 
பாடினால் ஆஹா ஓஹோ என்கிறாய்” 
அது பாரதியார் பாட்டுயா 
அவனவன் ட்யூனத்தான் திருடுறான்னா 
நீ பாட்டையே திருடுற

பொய் பாட்டில் சொன்னால் கவி என்கிறாய் கண்மணி
அடப் பாவி பாரதியார் பாட்டையே பொய்ங்கிறியா

உன் மேல் ஆசை வைத்து 
நான் ஓர் பொய்யைச் சொன்னால் 
சீறிடும் தென்றல் ஆகிப் போகிறாய்

எஸ்... உனக்காக மையம் கொண்ட இந்த புயல் 
இப்போ கரைய கடந்துடுச்சு போ 
மெய் பாட்டில் சொல்வேன் 
ஏற்றுக் கொள்வாய் கண்மணி

நீ பொய்யிலே பிறந்து பொய்யிலே வளந்தவன் 
உன் கிட்ட எதுயா மெய்யி 
தேனைப் போன்ற காதல் வேம்பாகுமா 
ஹா காதலாவது கத்திரிக்காயாவது

தேவி என்னைச் சேர வீம்பாகுமா 
டோன்ட் ஃபோலோ மீ 
என் நெஞ்சிலே உன் மந்திரம்

ரா பாப்பபா ரப்பா பாப்பபா ஐ லவு யூ ஐ லவு யூ 
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி

என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு 
பெரிய கிருஷ்ண பரமாத்மா 
இவரு சொல்ற கீதைய கேக்கணுமா 
என் பொன்மணிக்கு கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு

சும்மா இருயா மின்னுவதெல்லாம் 
பொன்னல்ல தெரிஞ்சுக்கோ 
வீண் கோபம் ஏன்... நீ திருந்தவே மாட்டே 
ஆண் பாவம் ஏன்.....ஷோ... தாங்கலயா 
ஐ லவு யூ ஐ லவு யூ 
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி ( என் கண்மணி)

No comments:

Post a Comment