PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, June 14, 2010

ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்...

படம்: ஐயா
பாடல்: ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்


ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்

ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்
மன மாலை உன்னை
பூ பூவாய் பூத்திருந்தேன்
அந்த சேதிக்காக
நொடி நொடியாய் வேர்த்திருந்தேன்
சூரியன சூரியன சுரட்டு பையில்
நான் அள்ளி வர ஆசைப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தையும் குடிச்சிருச்சே


ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்


ஊருகுள்ள ஓடும் தெருவில்
பாத தடங்கள் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால்
எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்


இதயத்தை தட்டி தட்டி பார்த்துப்புட்ட
அதை திறக்கலை என்றதுமே ஒடஞ்சுப்புட்ட


நீ கிடைக்க வேண்டும் என்று
துண்டு சீட்டில் எழுதி போட்டேன்
பேச்சியம்மன் கோயில் சாமி
பேப்பர் சாமி ஆனது என்ன


கண்ணுக்குள்ள ஒடிய உன்னை துரத்த
மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச
மனசுக்குள்ள ஒளிஞ்சதும் உன்னை விரட்ட
உசிருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச


ஓ… நீ கொடுத்த கல் கூட
செங்கல் சாமி ஆனதுய்யா!


ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்


ஓ…ஒஹோ…ஒ….ஒஹோ

அடுத்து வீட்டு கல்யாணத்தில்
பத்திரிக்கையை பார்க்கும்போது
நமது பெயரை மணமக்கள் ஆக
மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்

ஆண்:
இது வரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு
அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு


கட்டபொம்மன் உருவம் போல
உன்னை வரைந்து மறைத்தே வைத்தேன்
தேசபற்று ஓவியம் என்று
வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட


ஆனை கட்டு போல இருக்கும் மனது
நீ தொட்டதும் உடைஞ்தது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம்
பூ பட்டு சரிஞ்தது என்ன


வேப்ப மரம் சுற்றி வந்தேன்
அரச மரமும் பூக்குதய்யா
ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்


ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்


இந்த பார்வ பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்

ஆண்:
அந்த பார்வ பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்


சூரியன சூரியன சுரட்டு பையில்
நான் அள்ளி வர ஆசைப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தையும் குடிச்சிருச்சே……

லலா லா லா லா லலா……..
லலா லா லா லா லலா………

No comments:

Post a Comment