PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, June 14, 2010

உன் குத்தமா? என் குத்தமா?...



படம்: அழகி
பாடல்: உன் குத்தமா? என் குத்தமா?
எழுதியவர்கள்: பழநி பாரதி, கருணாநிதி
பாடியவர்கள்: இசையானி இளையராஜா
இசை: இசையானி இளையராஜா
இயக்கம்: தங்கர்பச்சான்

உன் குத்தமா? என் குத்தமா?
யாரை நானும் குத்தம் சொல்ல?
பச்சப் பகஞ் சோலயிலே
பாடி வந்த பைங்கிளியே!
இன்று நடை பாதையிலே
வாழ்வதென்ன மூலையிலே?
கொத்து நெருஞுசி முள்ளு
குத்துது நெஞ்சுக்குள்ள!
சொன்னாலும் சோகமம்மா தீராத தாகம்மா

( உன் குத்தமா )

நிலவோட மணலோட தெருமண்ணு உடம்போட
விளையாட ஒரு காலம்
அலைஞ்சாலும் திரிஞ்சாலும் அலையாத கலையாத
கனவாச்சு இளங்காலம்!
என்ன எதிர்காலமோ?
என்ன புதிர்போடுமோ?
இளமையில் புரியாது! முதுமையில் முடியாது
இன்பத்திற்(கு) ஏங்காத இளமையும் இங்கேது?
காலம் போடுது கோலங்களே!

( உன் குத்தமா )

பேசாம இருந்தாலும் மனசோட மனசாகப்
பேசிய (து) ஒரு காலம்
தூரத்தில் இருந்தாலும் தொடர்ந்து உன் அருகிலே
குலவி(து) ஒரு காலம்
இன்று நானும் ஓரத்தில்!
என் மனது தூரத்தில்!
வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு!
வீணாகிப் போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு!
வேய்ங்குழல் பாடுது வீணையோடு!

( உன் குத்தமா )

No comments:

Post a Comment