Movie Name: | Aasaiyil Oru Kaditham |
Song Name: | Nee Irunthal Naan Iruppaen |
Singers: | Hariharan |
Music Director: | Deva |
Lyricist: | Vairamuthu |
தத்தி தோம் தீம்த தக்க திம்மி
தத்தி தோம் தீம்த தக்க திம்மி
தத்தி தோம் தீம்த தக்க திம்மி தோம்
நீ இருந்தால் நான் இருப்பேன்
நீ நடந்தால் நான் நடப்பேன்
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்
நீ என் காதலியானால்...
ஹெய்...நீ இருந்தால் நான் இருப்பேன்
நீ நடந்தால் நான் நடப்பேன்
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்
நீ என் காதலியானால்...
நீராட நதி தருவேன்
நீ துடைக்க முகில் தருவேன்
நீ உடுத்த மலர் தருவேன்
நீ என் காதலியானால்,
நீ என் காதலியானால்,...
நீ நடக்கும் புல்வெளியில்
பனித்துளிகள் துடைத்து வைப்பேன்
நீ பேசும் தாய் மொழியில்
வல்லினங்கள் களைந்து வைப்பேன்
நீ கடந்த தெருவில்
உந்தன் வாசம் தேடுவேன்
நீ குளித்த நதியில் மூழ்கி
மோட்சம் காணுவேன்
உன் ஜன்னல் ஓரம் நான் காற்றாக வருவேன்
நாள் ஒன்று வீதம் நான் பூகொண்டு தருவேன்
கங்கள் தீண்டும் கனவைப் போல
நீ அரியாமல் நான் தொடுவேன்
நீ என் காதலியானால்,...
தத்தி தோம் தீம்த தக்க திம்மி
தத்தி தோம் தீம்த தக்க திம்மி
தத்தி தோம் தீம்த தக்க திம்மி தோம்
ஆஹ்ஹ்...
வெள்ளை நில ஒளி திரடி
உள்ளங்க்கையில் ஊற்றி வைப்பேன்
காற்றலையில் இசை பிரித்து
காதுகளில் தவழ வைப்பேன்
கொபுரங்கள் ஏறி உந்தன் பேரை கூருவேன்
டஜ் மஹலின் மெலே உந்தன் பேரை எழுதுவேன்
உன் கூந்தல் முடியில் நான் என் ஜீவன் முடிவேன்
நீ ஊடல் கொண்டால் நான் உன் காலில் விழுவேன்
ஒட்ற்றை முத்தம் சிந்துவதென்றால்
உன் மடியில் உயிர் விடுவேன்
நீ என் காதலியானால்...
நீ இருந்தால் நான் இருப்பேன்
நீ நடந்தால் நான் நடப்பேன்
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்
நீ என் காதலியானால்...
நீராட நதி தருவேன்
நீ துடைக்க முகில் தருவேன்
நீ உடுத்த மலர் தருவேன்
நீ என் காதலியானால்,
நீ என் காதலியானால்,...
நீ என் காதலியானால்..
No comments:
Post a Comment