Movie Name: | Ezhumalai |
Song Name: | Silendru |
Singers: | S.P.Balasubramaniyam, Sujatha |
Music Director: | Mani Sharma |
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், சுஜாதா
இசை: மணிஷர்மா
சில்லென்று வரும் காற்று
என்னை ஏன் இன்று சுடுகின்றது
அம்மம்மா அதே காற்று
என்னை எங்கெங்கோ தொடுகின்றது
என்னை ஆடையாய் நீ சூடிடு
உந்தன் கூந்தல் பாலம் மூடிடு
இந்த ஏகாந்த நேரத்தில் ஏதேதோ ஆசைகளோ
(சில்லென்று வரும்...)
வண்டென என் மனம் வந்து இந்த ஊதா பூவை ஊதும்
தேன் ஏந்தும் தங்க பாத்திரம் மேல் வந்து நின்ற மாத்திரம்
விட்டது தொட்டது போக கொஞ்சம் வைத்தால் என்ன மீதம்
அன்புக்கு உண்டு சாத்திரம் ஆகாது இந்த ஆத்திரம்
கண்ணே நீ ஓர் சித்திரம் என் கையில் என்றும் பத்திரம்
அன்பே நீ ஓர் மந்திரம் நான் ஆனேன் உன்னால் எந்திரம்
ஒவ்வொரு நாளும் நீயாட பூ மஞ்சம் நான் போடவா - ஹ்ம்ம் ....
(சில்லென்று வரும் ...)
முக்கனி சக்கரை சேர அது பாதம் பாலில் ஊற
தித்திக்கும் வேளை அல்லவா வெட்கத்தை போக சொல்லவா
கற்பனை செய்திடும் கம்பன் உன்னை கண்டால் தோற்று போவான்
சொல்லாலே வித்தை செய்கிறாய் உள் அர்த்தம் வைது சொல்கிறாய்
பெண்மை என்னும் ஜாதியில் அவள் பேசும் பேசும் ஜாடையில்
ஜாடை செய்தால் போதுமே கை ஜாதி பூவை கிள்ளுமே
கிள்ளிடும் நேரம் கூச்சங்கள் தாளாமல் நான் துள்ளவ - ஹ்ம்ம்...
(சில்லென்று வரும்...)
No comments:
Post a Comment