PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, August 13, 2011

காற்றில் வரும் கீதமே...

படம் – ஒரு நாள் ஒரு கனவு
இசை – இளையராஜா
பாடியவர்கள் -ஹரிஹரன், ஸ்ரயா கோஷல், பவதாரினிரி,
இளையராஜா,சாதனா சர்கம்



காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக... ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிருக்கு... ஆ..
வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும் இசை
அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது இங்கு
சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் ஏது சொல் தோழி

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக... ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா...

2 comments: